ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மொபைல் இணைப்பை துடித்த ஜெட் ஏர்வேஸ்.. வேலைதான் போச்சு இதுவுமா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. இந்த நிலையில் அந்த நிறுவனம் தற்போது ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மொபைல் இணைப்புகளையும் துண்டித்துள்ளது.

 

ஊழியர்களுக்கு பணி நிமித்தமாக வழங்கப்பட்ட மொபைல் சேவை கடந்த சில மாதங்களாக பணம் செலுத்தாதால் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஊழியர் தரப்பில் கூறப்படுவது என்னவெனில், பல மாதங்களாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மொபைல் சேவைக்கான கட்டணத்தை செலுத்தவில்லை என்றும் மெசேஞ்கள் வந்து கொண்டே இருந்தன. இந்த நிலையில் நிறுவனமும் பணம் செலுத்துவதாக தெரியவில்லை. இதனால் தற்போது மொபைல் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதோடு தொடர்ந்து இந்த சேவையை நீங்கள் தொடர்ந்து பெற விரும்பினால், நிலுவையில் உள்ள தொகையை கட்டிவிட்டு இனைப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது அந்த மொபைல் சேவை நிறுவனம்.

Credit Card, ATM ஜாக்கிரதை..! 2018-ல் சமூக வலைதளக் குற்றங்கள் 43% அதிகரிப்பு..!

 பல  நிறுவனங்கள் நஷ்டத்தில்

பல நிறுவனங்கள் நஷ்டத்தில்

இந்தியாவில் இதுவரை பல தரப்பட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் முடிவடைந்து உள்ளன. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பெரும் சர்ச்சைக்கும் உள்ளாகியும் உள்ளது. குறிப்பாக பல விமான நிறுவனங்கள் இதுவரை நஷ்டத்தில் மூடப்பட்டுள்ளது.

நாடு விட்டு நாடு செல்வது வழக்கம்

நாடு விட்டு நாடு செல்வதும் வழக்கமாகி வருகிறது

இன்றுள்ள பொருளாதார காலகட்டத்தில் விமானத்துறை மட்டும் அல்லாது, எந்தவொரு துறையும் பிரச்சனைகளில் தான் உள்ளன. அதுவும் வங்கியில் கடன் வாங்கி விட்டு கட்ட முடியாமல் தவித்து வரும் நிறுவனங்களும், இதனால் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகி பின்னர் நாடு விட்டு நாடு செல்வதும் வழக்கமாகி வருகிறது.

25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த  நிறுவனம்

25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிறுவனம்

கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிறுவனம் வெறும் 8500 கோடி ரூபாய் கடனுக்காகவும் முடங்கியுள்ளது பொருளாதார காரணிகளா என்னவென்று இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. அதிலும் குறிப்பாக ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமை, விமானங்களுக்கான எரிபொருள் கட்டணம் இப்படி தொடர் பிரச்சனைகளின் சங்கிலி தொடராக தற்போது மொபைல் சேவை கூட கட்ட முடியாத சூழ்னிலையில் ஜெட் ஏர்வேஸ் இருந்துள்ளது.

புரியாத புதிராகவே உள்ளது
 

புரியாத புதிராகவே உள்ளது

ஜெட் ஏர்வேஸ்சின் இந்த நிலைமை அனைவரும் அறிந்த ஒன்றே என்றாலும், இந்த குழப்பத்தின் பின்னால் என்ன என்றும் இதுவரை அறியப்படாத புதிராகவே உள்ளது. ஜெட் ஏர்வேஸ்சை போலவே மற்ற விமான நிறுவனங்களும் இருக்கும் நிலையில் அனைத்து நிறுவனங்களுமே போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அள்ளி வழங்கி வருகின்றன. இதன் காரனமாக வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்க டிக்கெட்களின் விலை கன்னா பின்னாவென்று குறைத்தன. இதனாலேயே நஷ்டத்திற்கு காரணமாக இருந்தாலும் முழுக்க முழுக்க இது காரனம் இல்லை என் கிறார்கள் நிபுனர்கள்.

 சரி இதற்கு தீர்வு தான் என்ன?

சரி இதற்கு தீர்வு தான் என்ன?

இப்படியே சிறுக சிறுக பிரசனைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கான தீர்வுகள் இதுவரை கண்டுபிடிக்க படவேயில்லை. வங்கிக் குழுமங்களும் ஏலத்திற்கு பின்புதான் எதையும் பேச முடியும் என்று அறிவித்த நிலையில் இடைப்பட்ட சாமானிய மக்களின் நிலை (ஊழியர்களின்) நிலை அதோ கதியாகத்தான் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet airways discontinues its mobile phone connections

Jet airways has decided to immediately discontinuel all cell phone connections. Which were allotted to the company for us eits officials.
Story first published: Monday, April 29, 2019, 18:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X