வாங்குன கடன கொடு இல்ல உன் சொத்து பத்த எல்லாம் வித்துருவேன்..? Essar நிறுவனத்தை கதிகளங்க வைத்த SBI..!

அஹமதாபாத்: இந்தியாவில் அதிகம் கடன் வாங்கி விட்டு, அதற்கான வட்டியோ அல்லது அசலோ திருப்பிச் செலுத்தாத மோசமான நிறுவனங்களில் இந்த Essar நிறுவனமும் ஒன்று.

Essar ஸ்டீல் நிறுவனத்துக்கு நம் SBI (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) கடன் கொடுத்திருந்தது. அந்த கடன் தொகைக்கான வட்டி, அபராதங்கள் என எல்லாம் சேர்த்து சுமார் 63,000 கோடி ரூபாய் வந்து நிற்கிறது.

Essar நிறுவனம் தன்னால் நிறுவனத்தை நடத்த முடியவில்லை என ஆர்சிலர் மித்தல் நிறுவனத்திடம் விற்க முன் வந்திருக்கிறது. ஆக இந்த விற்பனையில் வரும் பணத்தை வைத்து தான், எஸ்பிஐ தன் கடன் மற்றும் வட்டித்தொகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

42,000 தான்

42,000 தான்

தேசிய நிறுவன சட்ட தீர்பபயத்தின் முன்னிலையில் உறுதி செய்யப்பட்ட டீலின் படி ஆர்சிலர் மித்தல் நிறுவனம், Essar நிறுவனம் கொடுக்க வேண்டிய 63,000 கோடி ரூபாய்க்கு பதிலாக 42,000 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கும் எனவும் உறுதி செய்துவிட்டார்கள். இப்போது மீதி 20,000 கோடி ரூபாயை எப்படி வசூலிக்கலாம். என யோசித்துக் கொண்டிருந்தது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.

கடன் மீட்பு தீர்பாயத்திடம் முறையீடு

கடன் மீட்பு தீர்பாயத்திடம் முறையீடு

மல்லையா விஷயத்தில் சொதப்பித் தள்ளிய அனுபவத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒரு அசாதாரண முடிவை எடுத்திருக்கிறது. எஸ்பிஐ, கடன் மீட்புத் தீர்ப்பாயத்திடம் (Debt Recovery Tribunal) முறையீடு செய்திருக்கிறது. அந்த முறையீட்டில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் ஒப்பந்தப்படி தனக்கு 42,000 கோடி ரூபாயை மட்டுமே ஆர்சிலர் மித்தல் கொடுக்கும். மீதி தொகையை Essar நிறுவனத்தின் நிறுவனர்கள் ரவி ரூயா மற்றும் பிரசாந்த் ரூயாவின் சொத்துக்களை விற்று மீட்டுக் கொள்ள விரும்புகிறோம். எனவே ரவி ரூபாய் மற்றும் பிரசாந்த் ரூயாவின் சொத்துக்களை முடக்க உத்தரவிடுங்கள்" என முறையீடு செய்திருக்கிறது.

எஸ்பிஐக்கு ஜாக்பாட்

எஸ்பிஐக்கு ஜாக்பாட்

எஸ்பிஐ-ன் இந்த மேல் முறையீட்டை இன்னும் கடன் மீட்புத் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறார்களாம். அப்படி ஒருவேளை எஸ்பிஐக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டால் ஒரு பைசா பாக்கி இல்லாமல் ரவி ரூபாய் மற்றும் பிரசாந்த் ரூயாவின் சொத்துக்களை எஸ்பிஐ பிடித்து வைத்துக் கொள்ளும். மொத்த 63,000 கோடி ரூபாய் கடனையும் முழுமையாக பைசா பாக்கி இல்லாமல் வசூலித்துவிட்டு தான் பாக்கி சொத்துக்களைக் கொடுக்குமாம்.

Personal Guarantee

Personal Guarantee

நாம் எல்லாம் வங்கியில் கடன் வாங்கும் போது யாராவது கேரண்டி கையெழுத்து போடச் சொல்வார்கள். ஒருவேளை நாம் வாங்கிய கடனை ஒழுங்காக கட்டவில்லை என்றால், நமக்காக கேரண்டி கையெழுத்து போட்டவர்கள் தான் பணத்தைக் கட்ட வேண்டும். கேரண்டி கொடுத்தவர்களின் சொத்துக்களில் கூட வங்கி கை வைக்கலாம். அப்படி Essar நிறுவனத்துக்கு கேரண்டி கொடுத்திருக்கிறார்கள் Essar நிறுவன நிறுவனர்களான ரவி ரூயா மற்றும் பிரசாந்த் ரூயா. இந்த personal guarantee-ன் மதிப்பு மட்டும் 15,000 கோடி ரூபாயாம். இந்த 15,000 கோடி ரூபாயை திரட்டி கடந்த 6 மாதங்களாக எஸ்பிஐ வேலை பார்த்து வருகிறதாம்.

ஒரு பைசா பாக்கி இல்லை

ஒரு பைசா பாக்கி இல்லை

இப்போது எஸ்பிஐ Essar நிறுவனத்துக்கு கொடுத்த 63,000 கடனில் 42,000 கோடி போக மீதமுள்ள 21,000 கோடியை திரட்ட வேண்டும். அதில் 15,000 கோடி ரூபாய்க்கு நிறுவனர்கள் கொடுத்த personal guarantee-ஐ வைத்து பணத்தை மீட்க வழி செய்து கொண்டிருக்கிறார்கள். மீதமுள்ள 7,000 கோடி ரூபாயைத் திரட்ட கடன் மீட்புத் தீர்ப்பாயத்திடம் முறையீடு செய்து இருக்கிறது எஸ்பிஐ. எஸ்பிஐ இப்படி பைசா பாக்கி இல்லாமல் தங்களிடம் இருந்து கடனை வசூலிப்பதைப் பார்த்து Essar நிறுவன ஊழியர்கள் தொடங்கி கார்ப்பரேட் உலகமே கொஞ்சம் ஸ்தம்பித்து நிற்கிறதாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+