வாஷிங்டன் : உலக அளவில் ராணுவத்திற்கு செலவிடும் தொகை பற்றிய கருத்து கணிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த கருத்து கணிப்பு ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்டது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்த ராணுவ செலவுகள் பற்றிய அறிக்கையில், மொத்த இராணுவ செலவுகள் கடந்த 2017 மற்றும் 2018 க்கு இடையில் 2.7 சதவிகிதம் உயர்ந்து, 1.82 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளன.
கடந்த 2009- ம் ஆண்டை விட 2018 ல் ராணுவ செலவுகள் 5.4 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. இதுவே கடந்த 1998- ல் இருந்து ஒப்பிடும் போது, அதாவது கடந்த 20 ஆண்டுகளில் செலவு விகிதம் 76 சதவிகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய நாடுகளின் மொத்த ராணுவ செலவுகளில் 60 சதவிகிதம் 5 நாடுகளில் செய்யப்படுகிறது. இதில் அமெரிக்கா 649 பில்லியன் டாலரும், சீனா 250 பில்லியன் டாலரும், சவூதி அரேபியா 67.6 பில்லியன் டாலரும், இந்தியா 66.5 பில்லியன் டாலரும், மற்றும் பிரான்சு 63.8 பில்லியன் டாலரும், ரஷ்யா 61.4 பில்லியன் டாலரும் மற்றும் லண்டன் 50 பில்லியன் டாலரும் உள்ளிட்ட பல நாடுகள் பாதுகாப்புக்காக அதிகாளவு செலவழிக்கின்றன.
செலவுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டு
இருப்பினும், மிகப் பெரிய செலவுகளுக் கிடையில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. அமெரிக்கா கடந்த 2010 முதல் 4.6 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவே சீனா 5 சதவிகிதம் வளர்ச்சியும் மற்றும் இந்தியா 3.1 சதவிகிதமும் உள்ளிட்ட நாடுகள் ஆண்டுக்கு ஆண்டு அதனுடைய இராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளன. இதுவே சவுதி அரேபியா அதன் செலவை 6.5 சதவிகிதமும், பிரான்ஸ் 1.4 சதவிகிதமும், ரஷ்யாவும் 3.5 சதவிகிதமும் அதன் செலவினங்களை குறைத்துள்ளன.
உற்பத்தி செலவினம் குறைந்தது
இதுவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்த பாதுகாப்புக்காக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் செலவினம் 2018 ல் 2.1 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்து உள்ளது. இது உலக குடிமகனுக்கு 239 டாலர் எனவும், ஒரு வருடத்தில் 0.1 சதவிகித குறைவு மற்றும் 10 ஆண்டுகளில் 0.5 சதவிகித குறைவு ஆகியவற்றை குறிக்கிறது.
முதல் 5 இடங்களில் ரஷ்யா
கடந்த 2006-ல் இருந்து முதன் முறையாக முதல் ஐந்து இடங்களில் ரஷ்யா இடம் வகிக்கிறது. இதற்கிடையில் சீனா 24 ஆண்டுகளாக அதன் இராணுவச் செலவை அதிகரித்த வன்ணமே உள்ளது. இது 1994 ல் இருந்ததை விட அதன் செலவு 10 மடங்கு அதிகமாகும். இருப்பினும், வரும் ஆண்டுகளில் சீன வளர்ச்சி மெதுவாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
சீனாவின் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும்.
சீனாவின் இராணுவ செலவினத்தின் வருடாந்திர வளர்ச்சி கடந்த 2009-ல் இருந்து படிப்படியாக 2013வரை 9.3 சதவிகிதம் உயர்ந்த நிலையில் இருக்கிறது. இதுவே கடந்த 199-ல் இருந்து 2018 வரையிலான வளர்ச்சி 5.0 சதவிகிதமாகும். எனினும் இந்த வளர்ச்சி குறைவே என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். சீனாவின் பொருளாதார வளர்ச்சியுடன் இராணுவச் செலவில் வளர்ச்சியைக் கொண்டிருக்கும் ஒரு கொள்கையை சீனா பின்பற்றியுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான அளவிற்கு குறைந்து கொண்டே வருவதால், சீனா இந்த கொள்கையை தொடர்ந்து பின்பற்றினால், வரும் ஆண்டுகளில் குறைந்த வளர்ச்சி விகிதமே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு 4-வது இடம்
இவ்வாறு ராணுவத்திற்கு செலவு செய்வதில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் வேறு இந்திய பற்றிய தகவல்களும் இதில் அளிக்கப்படவில்லை. எனினும் இந்த குறைந்த அளவு செலவிலும் கூட நமது இந்திய ராணுவம் சிறப்பாக செயல்படுவதை நினைத்து பெருமை கொள்ளலாம். ஜெய்ஹிந்த்!


Click it and Unblock the Notifications