என்னதான் நடக்குது.. விற்பனை என்னாச்சு.. மாருதி சுசூகி நிகரலாபம் 2.9% குறைவு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கடந்த 2018 - 2019-ம் நிதியாண்டிற்கான முடிவுகள் வருவதற்கு முன்பே பல எதிர்பார்ப்புகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் 4-வது காலாண்டின் நிகர லாபம் ரூ. 17,956 மில்லியனாக குறைந்துள்ளது. அதாவது கடந்த காலாண்டோடு ஒப்பிடும்போது 4.6% குறைவாகும்.

 

கடந்த காலாண்டில் மோசமான அந்நிய செலாவணி விகிதங்கள் மற்றும் பொருட்களின் விலைகள், அதிக தேய்மானம் மற்றும் அதிக விற்பனை ஊக்குவிப்பு செலவுகள் உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாதலால் விற்பனை அதிகரித்திருந்த போதிலும் நிகரலாபம் குறைந்துள்ளது.

இந்த காலாண்டில் வாகன விற்பனை உள்நாட்டு சந்தைகளில் மொத்தம் 428,863 யூனிட்கள் விற்றது, இது கடந்த காலாண்டை விட 0.4 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதில் பயணிகள் வாகன பிரிவில் 421,383 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த காலாண்டோடு ஒப்பிடும் போது 0.4 சதவிகிதம் குறைவாகும். இதுவே LCV விற்பனை 7,480 ஆக அதிகரித்துள்ளது. அதுவும் இது முந்தைய ஆண்டை விட அதிகரித்து விற்பனை 83.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் 29,616 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஃபிளாட்டாக முடிந்த இந்திய பங்கு சந்தைகள்.. நிதானத்துடன் செயல்படுங்கள்.. ரிசல்ட் வரட்டும்

காலாண்டு விற்பனை குறைந்துள்ளது

காலாண்டு விற்பனை குறைந்துள்ளது

ஆக மொத்த விற்பனை கடந்த காலாண்டோடு ஒப்பிடும்போது 0.7 சதவிகிதம் குறைந்து 458,479 ஆக குறைந்துள்ளது. மேலும் இந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர விற்பனை பதிவு 207,375 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டோடு ஒப்பிடும் போது 0.7 சதவிகிதம் அதிகமாகும்.

4-வது காலாண்டு நிகரலாபம் குறைந்தது

4-வது காலாண்டு நிகரலாபம் குறைந்தது

இதுவே நிகரலாபம் 17,956 மில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டோடு ஒப்பிடும்போது 4.6 சதவிகிதம் குறைவாகும். இதற்கு காரணம் இந்த காலாண்டில் மோசமான அந்நிய செலாவணி விகிதங்கள் மற்றும் பொருட்களின் விலைகள், அதிக தேய்மானம் மற்றும் அதிக விற்பனை ஊக்குவிப்பு செலவுகள் உள்ளிட்ட செலவுகள் குறைப்பு முயற்சியில் நிறுவனம் செயல்பட்டாலும் இந்த லாபம் குறைந்துள்ளது.

வருட லாபம் 2.9% குறைவு
 

வருட லாபம் 2.9% குறைவு

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் வருட நிகரலாபம் ரூ.75,006 மில்லியனாக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 2.9% குறைவாகும். விற்பனை அதிகரித்திருந்த போதிலும் நிகர லாபம் குறைந்துள்ளது. காரணம் செலவினங்கள் அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் அதிகரித்துள்ளது.

உள் நாட்டில் மொத்த விற்பனை

உள் நாட்டில் மொத்த விற்பனை

மாருதி சுசூகியின் உள்நாட்டு சந்தையில் மொத்தம் விற்பனை 1,753,700 யூனிட்களாகும். இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 6.1% வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இதுவே பயணிகள் வாகன விற்பனை 1,729,826 ஆக இருந்தது. இதே LCV விற்பனை 5.3 சதவிகிதம் அதிகரித்து 23,874 ஆக அதிகரித்துள்ளது. இதுவே மொத்தம் ஏற்றுமதி 108,749 ஆக அதிகரித்துள்ளது.

ஆண்டு நிகர விற்பனை 6.3% வளர்ச்சி

ஆண்டு நிகர விற்பனை 6.3% வளர்ச்சி

அதுவே மொத்த விற்பனை 1,862,449 ஆகும், இது முந்தைய ஆண்டை விட 4.7% வளர்ச்சியாகும். இதுவே இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை கடந்த நிதியாண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 6.3% வளர்ச்சியுடன், 2018- 2019 நிதியாண்டில் 830,265 மில்லியன் ரூபாயாக உள்ளது.

SMG ஆலையால் தேய்மானம் அதிகம்

SMG ஆலையால் தேய்மானம் அதிகம்

அந்நிய செலாவணி விகிதங்கள் மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த ஆண்டு கடினமான ஆண்டாக உள்ளது. மேலும் குஜராத்தில் இரண்டாவதாக நிறுவப்பட்ட SMG ஆலை அதிக அளவிலான தேய்மான செலவுக்கு வழிவகுத்தது. அதே சமயம் ஒட்டு மொத்த ஒட்டுமொத்த சந்தையும் மெதுவான வேகத்திலேயே இருந்தது. அதோடு அதிக விற்பனை ஊக்குவிப்புக்கான விளம்பர செலவுகள் லாபம் குறைய வழிவகை செய்தன. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 80 ரூபாய் டிவிடெண்ட் தர தீர்மானித்துள்ளதாக இயக்குனர் குழு அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maruti Suzuki Net profit for the year stood at Rs 75,006 million, lower by 2.9%

Net profit for the year stood at Rs 75,006 million, lower by 2.9% compared to the same period previous year. The Company sold a total of 1,753,700 units in the domestic market, a growth of 6.1%. This comprised 1,729,826 units in the passenger vehicle segment, a growth of 5.3% and 23,874 units of LCV, a growth of 138% over previous year. Exports were at 108,749 units.
Story first published: Tuesday, April 30, 2019, 21:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X