இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான SBI நாளை முதல் (மே 01, 2019) முதல் சில புதிய வட்டி விகிதங்களை அமல்படுத்தப் போகிறது.
குறிப்பாக சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், ஓவர்டிராஃப்ட் மற்றும் கேஷ் க்ரெடிட் கணக்குகள் வழியாக கடன் பெறுபவர்களுக்கு புதிய வட்டி விகித மாற்றங்களை அறிவித்திருக்கிறது.
கடந்த டிசம்பர் 2018 நிலவரப்படி 28 லட்சம் கோடி ரூபாயை டெபாசிட்டாகவும், அதில் 21 லட்சம் கோடி ரூபாயை கடனாகவும் கொடுத்து, இந்திய வங்கிகளிலேயே பெரிய தெளலத்தாக வளம் வந்து கொண்டிருக்கிறது. சரி என்ன என்ன மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
3.25% தான் வட்டி
மத்திய ரிசர்வ் வங்கி, கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு பணக் கொள்கை முடிவின் போதும், ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தது. இப்போது ரெப்போ வட்டி விகிதத்தின் அளவு 6 சதவிகிதமாக இருக்கிறது. ஆக இனி மே 01, 2019 முதல் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 3.25% ஆக குறைத்திருக்கிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனால் ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் SBI சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருப்பவர்களுக்கு 3.25% மற்றும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு 4% வட்டியும் கணக்கிடுவார்களாம்.
3.5% வட்டி
2. SBI-ன் சேமிப்பு வங்கிக் கணக்குகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் பணம் வைத்திருப்பவர்களுக்கான வட்டி விகிதம் 3.5%-ஆக நிர்ணயித்திருக்கிறார்களாம். SBI சேமிப்புக் கணக்கில் பணம் வைத்திருப்பவர்களில் 95%-த்தினர் ஒரு லட்சம் ரூபாய்க்குள் தான் வைத்திருக்கிறார்களாம்.
ரெப்போ ரேட்
3. SBI வங்கியிடம் வாங்கி இருக்கும் ஓவர்டிராஃப்ட் கடன்கள் மற்றும் கேஷ் க்ரெடிட் கணக்குகளின் கீழ் கடன் வாங்கி இருக்கும் தொகைகளுக்கு வரும் மே 01, 2019 முதல் ஆர்பிஐ நிர்ணயித்திருக்கும் ரெப்போ ரேட் விகிதம் + 2.25% என வட்டி வசூலிக்க இருக்கிறார்களாம். இதனால் கடனாளிகளுக்கு ஆர்பிஐயின் ரெப்போ ரேட் அடிப்படையிலேயே கடன் கிடைக்கும் எனச் சொல்கிறது SBI.
ஒரு தவணை தாமதம்
4. இந்த கேஷ் க்ரெடிட் கணக்குகள் மற்றும் ஓவர்டிராஃப்ட் கணக்குகளின் கீழ் கடன் வாங்குபவர்களில், இதுவரை ஒழுங்காக வட்டியைச் செலுத்தாதவர்களுக்கு, தாமதமாக இ.எம்.ஐ-க்களை செலுத்தியவர்கள் மற்றும் தவணைகளை சரியாகச் செலுத்தாதவர்களுக்கு என்றே தனியா ரிஸ்க் பிரீமியத்தையும் வட்டியோடு கூடுதலாக வசூலிக்க இருக்கிறதாம்.
அதாவது எல்லோருக்கும்10% வட்டி என்றால் ஒரு கடன் தவணையைத் தாமதமாகச் செலுத்தியவர்களுக்கு கூட கூடுதல் ரிஸ்க் பிரீமியம் என்கிற பெயரில் 10% + 0.5% = 10.5% வட்டியாகச் செலுத்த வேண்டும். ஆக ஒழுங்காக இ எம் ஐ-க்களைச் செலுத்துங்கள் மக்களே. இந்த கூடுதல் ரிஸ்க் பிரீமியம் ஏற்கனவே சொன்னது போல ஓவர்டிராஃப்ட் மற்றும் கேஷ் க்ரெடிட் கணக்குகளுக்கு மட்டுமே இப்போதைக்கு அறிவித்திருக்கிறது எஸ்பிஐ.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications