ஃபிளாட்டாக முடிந்த இந்திய பங்கு சந்தைகள்.. நிதானத்துடன் செயல்படுங்கள்.. ரிசல்ட் வரட்டும்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மாதத்தின் கடைசி நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் வர்த்தக முடிவில் வர்த்தகமாகி முடிவடைந்தன. சென்செக்ஸ் 35 புள்ளிகள் குறைந்து 39031 ஆக முடிவடைந்தது. இதுவே மும்பை பங்கு சந்தையின் நிஃப்டி 6 புள்ளிகள் குறைந்து 11,748 ஆக முடிவடைந்தது. இதுவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.61 ரூபாயாக முடிவடைந்தது.

 

இன்றைய பங்கு சந்தையில் யெஸ் பேங்க் பங்கின் விலை 30 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு காரணம் இந்த வங்கி தொடங்கப்பட்டது. இந்த வங்கி கடந்த 2004ல் தான் தொடங்கப்பட்டது. எனினும் கடந்த 2005 ஆண்டிலிருந்து இது வரை எந்தவொரு காலாடிலும் நஷ்ட கணக்கை காட்டியது இல்லையாம். ஆனால் முதல் மூறையாக கடந்த மார்ச் 2019-ல் 1506 கோடி ரூபாயை நிகர நஷ்டமாக காட்டியுள்ளது. இந்த நஷ்டத்திற்கு காரணம் வாராக்கடன் தானாம். இந்த மார்ச் 2019ல் மட்டும் சுமார் 3660 கோடி மதிப்பிலான வாராக்கடன் தேங்கியுள்ளதாம்.

யெஸ் பேங்கின் இந்த நஷ்டத்திற்கு முக்கிய காரணமே இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு கொடுத்த கடன் என ஏற்கனவே இந்த வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக நஷ்டத்தை தழுவியதால் இந்த பங்கின் விலை சுமார் 30 சதவிகிதம் குறைந்து வர்த்தக முடிவில் 168 ரூபாயாக முடிவடைந்தது. ஐ.டி துறையில் பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வந்த நிலையில், சாதகமான முடிவுகளால் ஐ.டி துறை சார்ந்த பங்குகள் சற்று ஏற்றத்துடன் சாதகமான நிலையிலேயே வர்ததகமாகி முடிவடைந்தன.

கடுப்பில் Airbus..! என் செல்லத்தால எனக்கு ரூ.1,935 கோடி நஷ்டம்..!

பங்கின் விலையும் குழப்பம்

பங்கின் விலையும் குழப்பம்

தனியார் நிதி நிறுவனமான இந்தியா புல்ஸ் ஹவுஷிங் பைனான்ஸ் நிறுவனம் 42 ரூபாய் குறைந்து 695 ரூபாயாக வர்த்தக முடிவில் முடிவடைந்தது. பேங்க் ஆப் பரோடா வங்கியின் பங்கின் விலையும் 5 சதவிகிதம் குறைந்து 116 ரூபாயாக வர்த்தக முடிவில் இருந்தது. ஏற்கனவே இந்த நிதி நிறுவனமும், வங்கியும் இணைவதற்கு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், பங்கீட்டுதாரர்களின் குழப்பத்தால் இன்று வரை சரியான முடிவுகள் எட்டபடவில்லை. இந்த நிலையில் இந்த இரு பங்குகளின் விலையும் சரிந்தே காணப்பட்டது.

விலை அழுத்தத்தில் வாகனதுறை பங்குகள்

விலை அழுத்தத்தில் வாகனதுறை பங்குகள்

இன்றைய வர்த்தக முடிவில் பல்வேறு வாகனத் துறையின் பங்குகள் வீழ்ச்சியடைந்தே காணப்பட்டன. குறிப்பாக ஹீரோ மோட்டோ கார்ப் 3.5% சரிந்தும், எம் & எம் 2% சரிந்தும், குறிப்பாக மாருதி சூகியின் பங்கின் விலை 2% குறைந்தும் காணப்பட்டது. வாகன விற்பனை கடந்த ஆண்டை விட விற்பனை குறைந்ததையடுத்து, வரும் காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கும் என்ற யூகத்தினாலேயே குறைந்து வர்த்தகமாகின. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 2.9 சதவிகிதம் குறைந்துள்ளதே இதற்கு காரணம் என கருதப்படுகிறது. மேலும் வரும் மே 1 அன்று வெளி வரவிருக்கும் ஏப்ரல் மாதத்தில் வாகன விற்பனை அளவு குறித்த டேட்டா வெளியிடப்பட விருக்கிறது.

சில நிபுனர்களின் கருத்து
 

சில நிபுனர்களின் கருத்து

இந்த சரிவையடுத்து சில நிபுனர்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் சாதகமான சூழ்னிலையில் இல்லை, அதோடு நடந்து கொண்டிருக்கும் தேர்தல் காரணமாகவும் இந்திய சந்தைகளில் சரியான போக்கு இல்லாமல் அது இந்திய சந்தைகளையே சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது.

பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தலாம்

பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தலாம்

அதோடு வரும் புதன் கிழமையன்று ஃபெடரல் ஒபன் மார்க்கெட் கமிட்டி தனது அறிக்கையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அமெரிக்காவின் ரிசர்வ் வங்கி அடுத்தாண்டு இறுதி வரை வட்டி விகிதங்களை உயர்த்தியே காட்டலாம் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இது போன்ற பல காரணிகள் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கின்றன.

விலையை தீர்மானிக்கும் காரணனிகள்

விலையை தீர்மானிக்கும் காரணனிகள்

இந்த நிலையில் வரவிருக்கும் டேட்டாக்களும் பெடரல் வங்கியின் வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் மட்டுமே பலமான ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இல்லையெனில் நடந்து கொண்டிருக்கும் தேர்தல்கள் முடிந்து ரிசல்ட் வரும் வரை இதுபோலவே ஏற்ற தாழ்வுகளுடனே இருக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex ends flat recovery led by IT sectors

Indian markets recovered to end flat today, The Sensex today ended at 36 points lower at 39,031, after falling to 38,753 at day's low. The Nifty settled at 11,748, down 0.06%. Yes Bank shares fell 30% after the lender posted a loss of Rs1,507 crore Rupees for the quarter ended March 31.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X