வாரே வா அமேசானில் இந்திய விற்பனையாளர்கள் சாதனை.. $1பில்லியன் மேல் இந்திய பொருட்கள் விற்பனையாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: சில்லறை வணிகத்தில் இன்று விற்பனை அதிகரித்துள்ளதற்கு ஒரு முக்கியக் காரணம் இ-காமர்ஸ் நிறுவனங்கள். சென்னையில் உள்ள ஒரு விற்பனையாளர் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளருக்கு எளிதாகப் பொருட்களை விற்க முடியும் என்றால் அதற்கு ஒரே வழி இ-காமர்ஸ் தான் என்பதை புரிந்து கொண்டவர்கள் இந்தியர்களாகத்தான் இருக்க முடியும்.

 

அமேசான் நிறுவனம் அமெரிக்காவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாகும். அமேசான் ஓர் ஆன்லைன் புக் ஸ்டோராகத் தொடங்கப்பட்டு இன்று ஆண்டுக்கு பல பில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த வர்த்தக விற்பனையைச் செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய பொருளின் மதிப்பு உலகெங்கிலும் தெரிந்தாலோ என்னவோ இந்திய விற்பனையாளர்கள் மூலம் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான இந்திய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். அதுவும் மூன்றறை ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம்.

தவிச்ச வாய்க்கு தண்ணீரா.. விஸ்டாரவிற்கு பறந்த ஜெட் ஊழியர்கள்.. 500 பேருக்கு வேலை

விற்பனையை $5 பில்லியனாக அதிகரிக்க திட்டம்

விற்பனையை $5 பில்லியனாக அதிகரிக்க திட்டம்

சுமார் 50,000க்கும் மேற்பட்ட இந்திய விற்பனையாளர்கள் அமேசானில் உள்ளனர். இதோடு அடுத்த நான் கு ஆண்டுகளில் மொத்த 5 பில்லியன் டாலருக்கு விற்பனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அமேசானில் 140 மில்லியன் இந்திய பொருட்கள்

அமேசானில் 140 மில்லியன் இந்திய பொருட்கள்

இந்த இ-காமர்ஸ் விற்பனைக்காக உலக அளவில் 300 பயனாளர்களை தேர்தெடுத்துள்ளது. இந்த உலகளாவிய விற்பனைத் திட்டத்துக்கு 300 மில்லியன் பயனாளர்களில், இந்திய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் 140 மில்லியன் பொருட்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமேசான் கூறியுள்ளது.

நினைத்துக் கூட பார்க்க முடியாத வளர்ச்சி
 

நினைத்துக் கூட பார்க்க முடியாத வளர்ச்சி

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த 2018 முடிவில் வெறும் 32,000 விற்பனையாளர்கள் மட்டுமே இருந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த அளவு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் வளர்ந்துள்ளது கவனிக்க தக்க விஷயமாகும்.

அமேசான் டயர்-2 நாடுகளில் இறக்குமதி

அமேசான் டயர்-2 நாடுகளில் இறக்குமதி

மேலும் அமேசானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 80 சதவிகிதம் டயர்- 2 நாடுகளில் இருந்து கவனிக்கதக்கதே என் கிறார் இந்த நிறுவனத்தின் விற்பனை பிரிவின் மூத்த அதிகாரி கோபால் பிள்ளை கூறியுள்ளார்.

வீட்டுக்கு தேவையான பொருட்கள் முதலிடம்

வீட்டுக்கு தேவையான பொருட்கள் முதலிடம்

இவ்வாறு விற்கப்படும் பொருட்களில் முக்கியமான வீட்டு உபயோக பொருட்கள், புத்தகங்கள், ஆடைகள், சமயலறை சம்பந்த பட்ட அனைத்து பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இதில் முதலிடம். இப்படிப்பட்ட பொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பா, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன் பெர்லின் உள்ளிட்ட நாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

அமேசான் தனி இடத்தை வகிக்கும்

அமேசான் தனி இடத்தை வகிக்கும்

ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிதாக இ-காமர்ஸ் துறையில் புதிதாக காலடி எடுத்து வைக்கின்றன. இருப்பினும் அமேசானுக்கென தனி இடமும் மதிப்பும் உண்டு. ஆக நாங்கள் பின் வாங்க மாட்டோம். எப்போதும் போல சேவை தொடரும் என்கிறார் அமேசான் நிறுவனத்தின் இந்திய தலைவர் அமித் அகர்வால்.

இந்திய சிறு குறு நிறுவனங்களுடன் இருக்கும்

இந்திய சிறு குறு நிறுவனங்களுடன் இருக்கும்

எது எப்படி இருப்பினும் அமேசான் தொடர்ந்து அரசின் கட்டுபாடுகளையும், இந்தியாவின் சிறு குறு உற்பத்தியாளர்களிடம் நெருக்கமாகவே இருக்கும். இதன் மூலம் அவர்களின் உற்பத்தியும் பெருகும். அமேசானில் இந்தியர்களுக்கு தனி இடம் என்றைக்கும் இருக்கும் என்றும் கூறியுள்ளார் அகர்வால்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: amazon அமேசான்
English summary

Amazon India sellers hit 1billion dollar global sales

Indian sellers on Amazon’s global platforms, largely the USsold goods worth over $1 billion in the last three and half year.
Story first published: Wednesday, May 1, 2019, 14:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X