எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் வேலையில் சேர்ந்தவர்கள் விருப்பப்பட்டால் வேறு வேலைகளுக்கு மாறிக்கொள்ளலாம் என்ற நிலை முன்பு இருந்தது. இப்போதுள்ள புதிய விதிமுறைகளின்படி வேறு வேலைகளுக்கு மாற முடியாத நி
டெல்லி: எச்-1பி விசா நடைமுறையில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றங்களால் இனிமேல் எச்-1பி விசாவில் அமெரிக்கா சென்று வேலை பார்ப்பவர்கள் நினைத்த மாத்திரத்தில் வேறு வேலைக்கு மாறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி எச்-1 பி விசா முறையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இனிமேல் நினைத்த நேரத்தில் அமெரிக்காவில் வேறு வேலை பெறுவது சிக்கலான ஒன்றாக மாறி இருக்கிறது.
எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் வேலையில் சேர்ந்தவர்கள் விருப்பப்பட்டால் முன்பு வேறு வேலைகளுக்கு மாறிக்கொள்ளலாம். ஆனால், இப்போதுள்ள புதிய விதிமுறைகளின்படி வேறு வேலைகளுக்கு மாற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வேலை மாறுவது ஈசி
ஒரு காலத்தில் அமெரிக்காவில் எந்த வேலைக்கு செல்வதாக இருந்தாலும் எச்-1பி விசா வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் அவர்கள் அங்கு சென்று சில மாதங்களோ அல்லது சில ஆண்டுகளோ கழிந்த பின்னர் அந்த வேலை பிடிக்கவில்லை என்றால், அதை விட்டுவிட்டு வேறு நிறுவனத்தில் அதே மாதிரியான வேலைக்கோ அல்லது தனக்கு பிடித்தமான வேலைக்கோ எளிதாக மாற்றலாகி செல்வது எளிதாக இருந்தது.
கிரீன் கார்டு இலவசம்
எச்-1பி விசா காலம் முடியும் வரையிலும் அவர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்க அனுமதி உண்டு. பின்னர் நிரந்தர வேலை பார்க்க விருப்பப்பட்டாலோ அல்லது அங்கேயே இருந்துவிட விருப்பப்பட்டாலோ அவர்கள் கிரீன் கார்டு (Green Card) விண்ணப்பித்து பெற்று அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடலாம். நீண்ட காலம் அங்கு தங்கி இருந்தால் மட்டுமே கிரீன் கார்டு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டவர்களுக்கு கட்டுப்பாடு
இதெல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையில்தான். கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப எச்-1பி விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்தார். வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணியாற்றவதற்கு பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்தார்.
உயர் தகுதிப் பட்டியல்
எச்-1பி விசா பெறுவதற்கான தகுதியை உயர் தகுதிப் பட்டியலில் சேர்த்துவிட்டார். இதன்மூலம் அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் நபர் குறிப்பிட்டுள்ள வேலை எச்-1பி விசா பட்டியலில் உயர் தகுதிப் பட்டியலில் இருந்தால் மட்டுமே அவருக்கு எச்-1பி விசா வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இல்லாவிட்டால் அவருக்கு எச்-1பி விசா கிடைக்காது.
வேலையை மாற்ற முடியாது
மற்றொரு கிடுக்கிப்பிடியாக, ஒரு நபர் எந்த வேலையை குறிப்பிட்டு எச்-1பி விசாவில் அமெரிக்கா சென்றாரோ அந்த வேலையில் தான் தொடர்ந்து பணியாற்ற முடியும். மேலும் அவர் வேறு நிறுவனத்திற்கு மாறிச் செல்ல விரும்பினாலும், அவர் விரும்பிய நிறுவனத்தின் வேலை எச்-1பி விசாவின் உயர் தகுதிப் பட்டியலில் இருந்தால் மட்டுமே அந்த வேலைக்கு மாறிக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் மாறிச்செல்ல முடியாது.
தகுதிப்பட்டியலில் இருந்தால் சாத்தியம்
ஒருவேளை அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட நபரை குறிப்பிட்ட வேலைக்கு எடுத்துக்கொள்ள விருப்பப்பட்டால், அந்த நிறுவனம் அந்த பணியாளருக்காக எச்-1பி விசா கேட்டு விண்ணப்பிக்கலாம். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ள வேலை எச்-1பி விசாவின் உயர் தகுதிப் பட்டியலில் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் பெரும்பாலான பணிகளை உயர் தகுதிப் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தை அழைத்துச் செல்ல முடியாது
முன்னர், எச்-1பி விசாவில் அமெரிக்காவில் பணியாற்றுபவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது எச்-1பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றுபவர்கள் தங்கள் மனைவி குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்து செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பல லட்சம் பேர் பாதிப்பு
இந்தியாவில் இருந்து பல லட்சம் பேர் எச்-1பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றிவருகிறார்கள். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறையால் அவர்களுக்கு அவர்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications