சவால் விடும் ஜியோவின் “சூப்பர் ஆப்”.. 100க்கும் மேற்பட்ட சேவைகள்.. மற்ற நிறுவனங்களுக்கு Bye bye

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அம்பானியின் அடுத்த டார்கெட் இ-காமர்ஸ் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளுவது தான் போலும். அதற்காக தான் இப்படியொரு சூப்பரான SUPER APP-ஐ உருவாக்கியுள்ளனரோ. இந்த சூப்பர் ஆப்பில் ஆன்லைன் டூ ஆப்லைன் என்ற வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் டூ ஆப்லைன் online-to-offline (O2O) சேவையின் மூலம், 100க்கும் மேற்பட்ட சேவைகளை பெற முடியும். மேலும் Snapdeal, Freecharge, Flipkart, Paytm, and Hike உள்ளிட்ட நிறுவனங்கள் இதுபோன்ற சேவையை தருவதற்காக இது ஆப்களை உருவாக்கின. ஆனால் இவை அனைத்தும் ஃபெயிலியர் ஆனாது. இந்த நிலையில் இந்த சூப்பர் ஆப் சிறப்பாக செயல்படும் என்றும் கூறுகிறார்கள் நிபுனர்கள்.

 

இந்த ஆப் சீனாவில் Wechat அறிமுகப்படுத்தியது போல வெற்றிகரமாக இருக்கும் என்றும் ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இந்த சூப்பர் ஆப் ரிலையன்ஸ் ஜியோவின் கீழ் இயங்கும் என்றும், ஜியோ இதன் மூலம் 300 மில்லியன் பயனாளர்களை பெற முடியும் என்றும் கணித்துள்ளது.

சாப்ட்வேர் கோடிங்கை திருடிட்டாங்க - டிசிஎஸ்சின் மாஜி வாடிக்கையாளரான அமெரிக்காவின் சிஎஸ்சி வழக்கு

ஆன்லைன் – ஆப்லைனிலும் வாங்கலாம்

ஆன்லைன் – ஆப்லைனிலும் வாங்கலாம்

இந்த சூப்பர் ஆப்பின் ஸ்ஷாலிட்டியே பொருட்களையோ டிக்கெட்களை புக் செய்வதிலும், பில்களை செலுத்துவதும், ஏன் ஜி.எஸ்.டி இன்வாய்சஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சேவை இதில் பெறமுடியும். இது போன்ற சேவைகளை ஆன்லைனிலோ அல்லது ஆப்லைனிலோ கூட பெற முடியும்.

பெரிய பிரச்சனை இருக்காது

பெரிய பிரச்சனை இருக்காது

இணையதளத்தில் பலரை அறிமுகப்படுத்தியது ஜியோ. மேலும் ஜியோ 300 மில்லியன் மக்களுக்கு இதன் மூலம் இந்த சூப்பர் ஆப் கொண்டு செல்லும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் ஜியோவின் இந்த சூப்பர் ஆப்பை கொண்டு செல்வதில் பெரிய சிரமம் இருக்காது. ஏனெனில் ஜியோ ஏற்கனவே மொபைல் வடிவிலும், இணைய வடிவிலும் மக்களை சென்றடைந்து விட்டது. இதனால் ஜியோவின் இந்த சூப்பர் ஆப் சென்றடைவதில் பெரிய சிரமம் இருக்காது. இது எளிதில் மக்களை சென்றைடையும். மற்ற ஆப்களை போல் புதிதாக கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறுகின்றனர்.

ஜியோவின் சூப்பரான “சூப்பர் ஆப்”
 

ஜியோவின் சூப்பரான “சூப்பர் ஆப்”

இந்தியாவில் இது ரெக்கார்டு பிரேக் ஆப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் உலக அளவில் ஒப்பிடும்போது இது அனைத்து நிறுவனங்களின் ஆப்களை போலவே இருக்கும், எனினும் ஆன்லைன் சந்தைகள், பண பரிமாற்றங்கள் உள்ளிட்ட சேவைகளில் Wechat போல அல்லாமல் அனைத்தும் ஒரு கட்டத்தில் சந்தையில் நிலைத்து நிற்க முடியாமல் போனது. அந்த நிறுவனங்கல் அனைத்து Wechat போல ஒரு ஆப்பை உருவாக்க நினைத்தன. ஆனால் அது முடியவில்லை. எனினும் ஜியோவின் இந்த சூப்பரான சூப்பர் ஆப் இதை செய்யும் என்று கூறிகிறார்கள் வல்லுனர்கள்.

ரிலையன்ஸ் UNIVERSE தற்போது

ரிலையன்ஸ் UNIVERSE தற்போது

ரிலையன்ஸில் தற்போது ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 300 மில்லியன் ஆகவும், ரிலையன்ஸ் டிரென்ட் ஸ்டோர்ஸ் 557 ஆகவும், ரிலையன்ஸ் சூப்பர் மார்கெட் 46 இடங்களிலேயேயும், ரிஜிஸ்டர்டு கிரான ஸ்டோர்ஸ் 2.5 மில்லியனாகவும், மொத்த வாடிக்கையாளர்களின் என்ணிக்கை 7,50,000 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio plans Super App with over 100 services

Taking the We chat model ahead,Reliance industries’ online-to-offline (O2O) retail plans include providing all services in one app. While most others have not been able to replicate the WeChat model successfully, experts expect Jio to be able to score on its 300 million plus new mobile phone users.
Story first published: Wednesday, May 1, 2019, 17:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more