இன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்.. எஸ்.பி.ஐ வட்டி விகிதத்தில் மாற்றம்.. என்ஜாய்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வரும் மே 1 முதல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது என்றும், நாட்டில் உள்ள மிகப்பெரிய கடனளிப்போரான இந்த எஸ்.பி.ஐ வங்கி புதிய விதிமுறைகளை அமல்படுத்த போவதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் நிச்சயம் அதன் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும் என்றும் கூறியுள்ளது.
பொதுவங்கியான எஸ்.பி.ஐ துவங்கி சேமிப்பு கணக்குகளுக்கு மே 1 இன்று முதல் புதிய வட்டி விகிதத்தை நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. குறிப்பாக SBI வங்கி சேமிப்பு கணக்கில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கும்போது அதன் வட்டி விகிதம் 3.25 சதவிகிதமாக இருக்கும் என்பது கவனிக்கதக்கது. எஸ்.பி.ஐயின் இந்த வட்டி விகித மாற்றம் குறுகிய கால கடன்களுக்கும் பொருந்தும்.

 
இன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்.. எஸ்.பி.ஐ வட்டி விகிதத்தில் மாற்றம்.. என்ஜாய்

அதேசமயம் ஒரு லட்சத்திற்கும் குறைவாக வங்கிக் கணக்கில் இருப்புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 3.5% வட்டி விகிதம் தொடர்ந்து அளிக்கப்படும் எனவும் குறிப்பிடபட்டுள்ளது.

SBI வட்டியை REPO RATEவுடன் இணைப்பு
அண்மையில் எஸ்.பி.ஐ தங்களது சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைத்துள்ளது. ஆக ரிசர்வ் வங்கி எப்போதெல்லாம் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கிறதோ அதற்கேற்றவாறு SBI வங்கி சேமிப்பு மற்றும் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதமும் தானாகவே மாற்றி அமைக்கப்படும். இந்தப் புதிய விதிமுறையானது நாளை (மே 1) இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மக்களிடையே பெரும் வரவேற்பு
இந்த எஸ்.பி.ஐயின் வட்டி விகிதத்திற்கான நடைமுறை மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வட்டி விகித முறையால் ரிசர்வ் வங்கி வட்டி விகித மாற்றத்தின் பலனை மக்கள் உடனே பெற முடியும். மேலும் சில வங்கிகள் வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வந்தாலும் அதனை வாராக்கடன் காரணமாக வட்டி விகித குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுப்பதே இல்லை.

பலன் முழுமையாக கிடைக்கும்
இந்த நிலையில் எஸ்.பி.ஐ கொண்டு வந்துள்ள இந்த வட்டி விகித முறை மக்களுக்கு மிக உதவியாக இருக்கும். மேலும் வட்டி விகிதத்தின் மாற்றம் அப்படியே கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வட்டி விகித மாற்றத்தால் வங்கியில் செலுத்தப்படும் டெபாசிட் தொகையும் அதிகரிக்கும். மேலும் வங்கிகள் அளிக்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதமும் மற்ற வங்கிகளோடு ஒப்பிடும்போது சாதகமான வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் எஸ்.பி,.ஐ வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sbi எஸ்பிஐ
English summary

SBI's new rule on savings accounts, short-term loans from today

The State Bank of India (SBI) is all set to adopt a new interest rate plan for large savings accounts deposits, with a balance over Rs 1 lakh and short-term loans from May 1, 2019.
Story first published: Wednesday, May 1, 2019, 9:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X