இந்த பக்கம் 6 மாசம் வராதா.. NSEயை அடித்து விரட்டிய செபி.. சம்பாதிச்ச ரூ.624 கோடிய கொடுத்துட்டு போ

மும்பை : இந்திய பங்கு சந்தை வாரியமான செபி, தேசிய பங்கு சந்தையை வரும் 6 மாதங்களுக்கு குறிப்பிட்ட சில வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று செபி தடை விதித்துள்ளது.

மேலும் செபியின் விதிகளை மீறியதாகவும், மீறி செயல்பட்டதாலும் தேசிய பங்கு சந்தையின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செபி அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையினால் தேசிய பங்கு சந்தை அடுத்த 6 மாதங்களுக்கு கடன் பத்திரங்கள் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்றும் செபி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தேசிய பங்கு சந்தையை (NSE)-யில் உள்ள வாடிக்கையாளர்கள் சிலருக்கு தொழில் நுட்பரீதியில் மூறைகேடு நடைபெற்றுள்ளது என்றும், இந்த முறைகேடு சரியான முறையில் நீருபிக்கப்பட்டதையடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன வட்டியுடன் ரூ.1000கோடி மேல இருக்கும்

ஆன வட்டியுடன் ரூ.1000கோடி மேல இருக்கும்

இதோடு மட்டுமல்லாமல் இந்த தொழில் நுட்ப மூறைகேட்டினால் தேசிய பங்கு சந்தையை ஈட்டியுள்ள 624.89 கோடி லாபத்தை முதலீட்டாளர் நிதிக்கே அளிக்க வேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போது வட்டி விகிதத்தோடு இந்த தொகை சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்றும் பங்கு சந்தை வாரியமான செபி அறிவித்துள்ளது.

நீயும்தானா திருடின- சம்பளத்தில 25% கொடு

நீயும்தானா திருடின- சம்பளத்தில 25% கொடு

இந்த முறைகேட்டுடன் தொடர்புடைய தேசிய பங்கு சந்தையின் முன்னால் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா உள்ளிட்டோரின் முறைகேடு நடைபெற்ற காலகட்டத்தில் அளிக்கப்பட்ட சம்பளத்தில் 25 சதவிகிதத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் செபி உத்தர விட்டுள்ளதாம். தேசிய பங்கு சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ரவி நாராயண் 2011 - 2013 வரையிலான காலகட்டத்திற்கான சம்பளத்தில் 25 சதவிகிதத்தினை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் செபி கூறியுள்ளதாம்.

பதவியை துஷ்டயோகம் செய்த ரவி

பதவியை துஷ்டயோகம் செய்த ரவி

2000 ம் ஆண்டு தேசிய பங்கு சந்தையில் ரவி நாராயண் தனது பதவியை துவங்கினார். பின்னர் மார்ச் 2013ல் ஒய்வு பெற்றார். பிறகு நாரயண் பதவி விலகிய பின்னர் ராமகிருஷ்ணன் டிசம்பர் 2016- வரை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பொறுப்பேற்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் பட்டியிடப்பட்ட காலத்தில் உள்ள நிறுவனங்களுடன் சேர்ந்து முறைகேடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இருவரும் கூட்டுக் களவாணிகளா

இருவரும் கூட்டுக் களவாணிகளா

இந்த இடைப்பட்ட காலத்தில் நாராயணனும் ராம்கிருஷ்னணும் ஆகிய இருவரும், அந்த சமயத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்துடன் தொடர்புடையதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் இது தவிர வேறு என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்றும் செபி ஆராய்ந்து வரவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+