தவிச்ச வாய்க்கு தண்ணீரா.. விஸ்டாரவிற்கு பறந்த ஜெட் ஊழியர்கள்.. 500 பேருக்கு வேலை

டெல்லி : கடும் நிதி நெருக்கடியால பல்வேறு பிரசனைகளுக்கு ஆளான ஜெட் ஏர்வேஸ் ஒரு கட்டத்தில் தனது முழு விமான சேவையு,ம் நிறுத்தியது. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸில் பணி புரிந்த சுமார் 22,000 தவித்து வந்த நிலையில், மற்றொரு விமான நிறுவனமான விஸ்டாரா கருணை காட்டியுள்ளது. ஆமாங்க 500 பேருக்கு வேலை வாய்ப்பினை கொடுத்துள்ளதாம்.

இதில் 100 பேர் பைலட்களும், 400 பேர்களை கேபின் க்ரூவிலும் சேர்த்துள்ளதாம், பராவாயில்லையே இது நல்ல விஷயம் தானா. டாடா நிறுவனமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸீம் கூட்டாக நிறுவிய நிறுவனம் தான் விஸ்டாரா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் சேவை தொடங்கியது.

ஆனால் மிகப்பெரிய அளவில் அதாவது 500 பேரை தேர்தெடுத்துள்ளது கவனிக்கதக்கது. இது குறித்து அந்த நிறுவன வட்டாரத்தில், ஏற்கனவே பயிற்சி பெற்ற திறன் பெற்ற பைலட்களும், கேபின் பணியாளர்களும் மற்றும் பொறியாளர்களும் எங்களுக்கு கிடைத்துள்ளதன் மூலம் அவர்களின் பணிச்சுமை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

மும்பை மற்றும் குரூக்ராமில் நேர்காணல்

மும்பை மற்றும் குரூக்ராமில் நேர்காணல்

இந்த விஸ்தாரா விமான நிலையத்தில் இரண்டு நாள் பணியமர்த்தல் குறித்தான நேர்முக தேர்வு, கடந்த செவ்வாய்கிழமையோடு முடிவடைந்ததை அடுத்து மும்பை மற்றும் குரூக்ராமில் ஒரே நேரத்தில் இந்த நேர்காணல் நடந்ததாகவும் விஸ்டாரா அறிவித்துள்ளது.

நேரடியாக பணியில் அமர்த்தப்படுவார்கள்

நேரடியாக பணியில் அமர்த்தப்படுவார்கள்

ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர்களுக்கு தனியாக ஏதும் பயிற்சு தர வேண்டிய அவசியமும் இல்லை. அதோடு அவற்றிற்கான செலவும் மிச்சம். இந்த நிலையில் அவர்களை நேரடியாக பணிக்கு அமர்த்த முடியும் என்கிறது விஸ்டாரா நிறுவனம்.

விரைவில் வெளிநாட்டு சேவை

விரைவில் வெளிநாட்டு சேவை

விஸ்டாரா நிறுவனம் தற்போது உள்நாட்டு சேவையில் மட்டும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வேலைக்கு 500 பேரை எதற்கு எடுத்துள்ளது என்று நினைக்கீறிர்களா? விஸ்டாரா விரைவில் வெளி நாட்டு சேவையும் ஆரம்பிக்க உள்ளதாம். அதற்காக தான் முன்னதாகவே தயாராகி கொண்டிருக்கிறது போலும்.

ஜெட் ஏர்வேஸ் அவ்வளவுதானா?

ஜெட் ஏர்வேஸ் அவ்வளவுதானா?

இந்த நிலையில் தற்காலிகமாக தனது சேவை நிறுத்துவதாக கூறிய ஜெட் ஏர்வேஸ், தற்போது ஊழியர்களின் மொபைல் இணைப்பை துண்டித்துள்ளது. அதே நேரம் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்காம பீரியமும் இனி நிறுவனம் கட்ட முடியாது என்றும் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் இனி செயல்படுமா? என்கிற கேள்வி அனைவரின் மனதிலும் உதித்துள்ளது. எஸ்.பி.ஐ இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என்று கைவிரித்த நிலையில் அடுத்த என்ன செய்ய போகிறது என்று பொறுத்துதான் பார்ப்போமே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+