கடு கடு வெயிலில் கூலான ஆஃபர்கள்.. அமேசானில் கொட்டும் ஆஃபர் மழை.. 40% discount on smartphones

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரு : ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்களில் முக்கிய நிறுவனமான அமேசான், வரும் மே 4 ஆம் தேதி முதல் அமேசான் நிறுவனத்தின் 'Amazon summer sale ' ஆரம்பமாக உள்ளது. மே 7 ஆம் தேதி வரை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

 

இந்த Amazon summer sale ஆஃபரில் பல்வேறு பொருட்களுக்குத் தள்ளுபடி கொடுக்கப்பட உள்ளதாம். அதிலும் குறிபாக அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு இந்த தள்ளுபடி விற்பனை ஒரு நாளைக்கு முன்னரே கிடைக்குமாம் சூப்பர்லா. ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு இந்த விற்பனை மே 3 ஆம் தேதி, மதியம் 12 மணிக்கே ஆரம்பிக்குமாம்.

நாளை இந்த Amazon summer sale தொடங்கவுள்ள நிலையில், அமேசான் நிறுவனம் எந்தெந்த ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர் கொடுக்கக் போகிறது என்பது குறித்த விவரத்தை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் போன்களைப் பொறுத்தவரை இந்த விற்பனையில் 40 சதவிகிதம் வரை தள்ளுபடி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருதாம்.

ஒரு இமயம் சரிந்து விட்டது.. விமான துறையில் ஜெட் ஏர்வேஸ் இல்லை.. இனி செயல்படுமா

இதுவரை இல்லாத அளவுக்கு ஆஃபர்

இதுவரை இல்லாத அளவுக்கு ஆஃபர்

சில போன்களுக்கு ‘இதுவரை இல்லாத அளவுக்கு ஆஃபர்' கொடுக்கப்பட உள்ளதாக அமேசான் கூறியுள்ளது. இதனால் அமேசான் வாடிக்கையாளர் மத்தியில் இது பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நிறுவனங்கள் இனி சொல்லவே வேண்டியதில்லை. இனி என்ன நடக்குமோ பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

இவ்வளவு குறைவா?

இவ்வளவு குறைவா?

இந்த Amazon summer sale விற்பனையின் போது, ஐபோன் X smartphoneனின் விலை 91,900 ரூயாய், ஆனால் இந்த ஆஃபர் போக 69,999 ரூபாய்க்கு கிடைக்குமாம். அதிலும் 9 மாதங்களுக்கு நோ காஸ்ட் இ.எம்.ஐ வசதியும் உண்டாம். எப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் இல்ல. இதுவே சாம்சங் கேலக்ஸி S9-யின் எம்.ஆர்.பி விலை ரூ.62,500 ஆகும். ஆனால் இந்த சம்மர் ஆஃபர் போக 39,900 ரூபாய்க்கு கிடைக்குமாம்.

கையிருப்பு குறைவு
 

கையிருப்பு குறைவு

இதேபோல OnePlus 6T போன் 32,999 ரூபாய்க்கு கிடைக்குமாம், இதன் எம்.ஆர்.பி விலை ரூ.41,999. மேலும் இந்த ஸ்மார்ட் போன் மிகக் குறைந்த அளவே கையிருப்பு இருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவத்துள்ளது.

முதல் முறையாக offer

முதல் முறையாக offer

Honor View 20 6ஜிபி + 128ஜிபி, ரூ.37,999 கிடைக்கும், இதன் எம்.ஆர்.பி ரூ.42,999. இதனுடன் 5000 ரூபாய்க்கு அமேசான் கேஷ்-பேக் ஆஃபரும் கிடைக்குமாம். இதுவே முதன்முறையாக தள்ளுபடி விலையில் சாம்சங் கேலக்ஸி M20 இந்த சம்மர் சேல் மூலம் கிடைக்குமாம். இதன் எம்.ஆர்.பி ரூ.10,990, தள்ளுபடி போக 9,990 ரூபாக்கு கிடைக்குமாம்.

சில பட்ஜெட் போன்களும் உண்டு

சில பட்ஜெட் போன்களும் உண்டு

இந்த Amazon summer sale ஆஃபரில் சில பட்ஜெட் போன்களும் கிடைக்குமாம். Xiaomi's Mi A, ரூ.10,999 கிடைக்கும், இதன் எம்.ஆர்.பி ரூ.17,499 ஆகும். Redmi 6A, ரூ.5,999 கிடைக்கும். இதற்கு 500 ரூபாய் அமேசான் கேஷ்-பேக் ஆஃபரும் கிடைக்கும். Redmi 6 Pro 9999 ரூபாய்க்கு கிடைக்குமாம், இதன் எம்.ஆர்.பி ரூ.13,499 ஆகும்.

எஸ்.பி.ஐ கார்டுக்கு 10% தள்ளுபடி

எஸ்.பி.ஐ கார்டுக்கு 10% தள்ளுபடி

இது தவிர இன்னும் பல போன்களுக்கு Amazon summer sale ஆஃபர் உண்டாம். இது தவிர பல கேஷ்-பேக் தள்ளுபடியும், எஸ்.பி.ஐ கார்டு மூலம் வாங்கினால் 10 சதவிகித உடனடி தள்ளுபடியும் உண்டாம். மொத்தத்தில் இந்த Amazon summer saleல்ல ஏதாவது போன் வாங்கியாகனும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: amazon அமேசான்
English summary

Amazon summer sale offer upto 40% discount on smartphones

Amazon Summer Sale 2019 is all set to kick off from May 4. The sale will run until May 7 and will bring deals and offers on a wide range of products. Amazon's Prime members will be able to get their hands on all the deals almost 12 hours before everyone else.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X