மோடிஜி நீங்க இன்னும் கொஞ்சம் மனசு வச்சா.. பலே பலே தான்.. இந்தியா ஏற்றுமதி துறையில் பரவாயில்லையாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியா உள்ளிட்ட பல வளர்ந்து வரும் நாடுகள் ஏற்றுமதியில் வளர்ந்து வருகிறார்கள். ஆனால் இந்த வளர்ச்சி நிலைத்து நிற்குமா? தொடர்ந்து அதிகரிக்குமா? என்பதே இன்றளவில் பல வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

 

அதிலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்ததுள்ளதாகவும் பொருளாதார அறிக்கைகள் கூறிகின்றன. இந்த நிலையில் இந்த உற்பத்தி குறைவு நாட்டில் புதிய தொழில் வர்த்தக வளர்ச்சிகள் குறைவாக இருப்பதையும், தேர்தல் நேரம் என்பதால் இது மிகப் பெரிய சவாலான ஒரு விஷயமாக இருப்பதையும் காட்டுகிறது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட Nikkei India Manufacturing குறியீடு இந்தியாவில் உற்பத்தி குறித்தான குறியீடு மார்ச் மாதத்தில் 52.6 ஆகவும். இதுவே ஏப்ரல் மாதத்தில் 51.8 ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளன எனவும், இது வர்த்தக நிலைகளில் உள்ள பலவீக்கத்தையே காட்டுகிறது என்றும் நிபுனர்கள் கூறுகின்றனர். மேலும் PMI தொடர்ந்து 21 மாதங்களாக 50 புள்ளிகளுக்கு மேலாக உள்ளதாகவும் சில அறிக்கைகள் கூறுகின்றன.

Jet airways காலை வாரும் முதலீட்டாளர்கள்..! கையெழுத்து போட மறுக்கும் Ethihad, TPG , Indigo..!

ஏற்றுமதி அதிகரிப்பு

ஏற்றுமதி அதிகரிப்பு

ஆனால் அதே சமயம் இந்தியாவின் ஏற்றுமதி குறித்தான அறிக்கையில் ஏப்ரல் மாத்தில் ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளதாம். இது மார்ச் மாதத்தோடு ஒப்பிடும் போது சற்றே அதிகம் என்றாலும் இது முன்னேற்றத்திற்கான அறிகுறியே. குறிப்பாக தெற்காசிய நாடுகள் அனைத்தும் ஏற்றுமதியில் துளிர் விட தொடங்கியுள்ளன. இந்த நிலையில் இந்தியாவும் முன்னேற்றம் கொண்டுள்ளது மிகவும் சந்தோஷப்படக் கூடிய விஷயமாகும். இந்த தெற்காசிய நாடுகள் கடந்த ஜீலை முதலே ஏற்றுமதியில் சற்று வளர ஆரம்பித்துள்ளன என்பது கவனிக்கதக்க விஷயமாகும்.

புதிய ஏற்றுமதி ஆர்டர்கள்

புதிய ஏற்றுமதி ஆர்டர்கள்

இந்த ASEAN உற்பத்தி குறியீடு பற்றி பொருளாதார நிபுனர்கள் கூறுகையில். இந்த ஏற்றுமதி வளர்ச்சி கடந்த ஜீலை மாத்திலிருந்தே தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஏழு மாதங்களில் புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்துள்ளன.

விரைவான வளர்ச்சிக்கு புதிய ஆர்டர்கள்
 

விரைவான வளர்ச்சிக்கு புதிய ஆர்டர்கள்

இந்த புதிய ஆர்டர்களே விரைவான வளர்ச்சிக்கு வித்திட்டன. இது உற்பத்தியாளர்கள் மத்தியிலும் ஏற்றுமதியாளர்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. மேலும் நடந்து கொண்டிருக்கும் வர்த்தக போர்கள் இதன் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இது மிக சந்தோஷமான ஒரு விஷயமே என்று கூறுகிறார்கள் நிபுனர்கள்.

வர்த்தக போரால் பாதிப்பில்லை

வர்த்தக போரால் பாதிப்பில்லை

ஆனால் இந்திய போன்றதொரு வளர்ந்து வரும் நாடுகள் இதை தக்க வைத்துக் கொண்டால் சரியே. அதோடு வளர்ந்து வரும் இந்த குறிப்பிட்ட நாடுகளில் அடுத்து வரும் 12 மாதங்களுக்கு வளர்ச்சி அதிகரித்தே காணப்படும். சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் வர்த்தக போர்கள் இந்த வளர்ந்து வரும் நாடுகளை அவ்வளவாக பாதிக்கவில்லை என்பதே இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.

எதிர்மறை வளர்ச்சி

எதிர்மறை வளர்ச்சி

இது குறித்த துணை குறியீட்டு எண் மதிப்பு கடந்த மார்ச் மாதத்தில் 65.4 ஆக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 66.6 ஆக அதிகரித்துள்ளது. இந்த குறியீடு உலகளாவிய வளர்ச்சியை விட எதிர்மறையாக காட்டலாம். ஆனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வளர்ச்சி அடைந்து வருவதே உண்மை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: india இந்தியா
English summary

Exports improve in emerging nations including India but it will sustain?

ASEAN Manufacturing PMI survey data, David Owen, economist at IHS Markit, which compiles the survey, said: “New export orders rose for the first time since last July.
Story first published: Thursday, May 2, 2019, 18:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X