அப்படி என்னதான் நடந்துச்சு Wikileaks-லா.. ராணுவ ரகசியங்களை இணையதளத்துல ஜீலியன் வெளியிட்டாரா

லண்டன்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜீலியன் அசாஞ்சே, 47 வயதானவர், கடந்த 2006-ம் ஆண்டு விக்கிலீக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதில் பல செய்திகளை வெளியிடும் ஒரு பிரபல இணையதளமாகும். இந்த இணைய தளத்தில் அமெரிக்க ராணுவம் குறித்த முக்கிய ரகசியங்களை வெளியிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இதன் மூலம் உலகம் முழுவதும் மிக பிரபலமானவர் தான் ஜீலியன் அசாஞ்சே. ஆனால் மறுபுறம் அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டார் என்று அமெரிக்க அரசு இவர் மீது கடும் கோபத்திலும் இருந்ததாம்.

இந்த நிலையில் பல முறை இவரை கைது செய்ய முயற்சியும் செய்துள்ளதாம். ஒரு வகையில் பல நாடுகளுக்கு இது குஷியை கொடுத்தாலும், பல நாடுகளும் ஜீலியன் மீது மிக கடுப்பிலேயே இருந்தன. இந்த நிலையில் இவரை எப்படியாவது கைது செய்தே ஆக வேண்டும் என்று அமெரிக்கா அரசு கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தது.

பல ரசிகர் பட்டாலேமே உண்டாம்

பல ரசிகர் பட்டாலேமே உண்டாம்

இருப்பினும் பல ரசிகர் பட்டாளங்களும் இவருக்கு உண்டாம். இதோடு பல நாடுகள் அடுத்து எந்த நாட்டின் ரகசியங்களை வெளியிடுவார் என்றும் கொண்டிருக்கின்றனவாம். இந்த நிலையில் இவரை கைது செய்ய எதேனும் வழி கிடைக்காத என்றும் அமெரிக்கா காத்துக் கொண்டிருந்த நிலையில் சுவீடனில் 2 பெண்களை ஜீலியன் அசாஞ்சே கற்பழித்ததாக 2010-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டதாம்.

அமெரிக்காவுக்கு பிடி கிடைச்சிருச்சு

அமெரிக்காவுக்கு பிடி கிடைச்சிருச்சு

எப்படியோ அமெரிக்காவுக்கு பிடி கிடைச்சிருச்சாம். இதனிடையில் தன் மீதான குற்றசாட்டு மறுத்துள்ளராம், இந்த நிலையில் அவர் கடந்த 2011-ம் ஆண்டு ஜீன் மாதம் சுவீடனில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றாராம். மேலும் சுவீடன் கேட்டுக் கொண்டதன் பேரில் லண்டன் போலிசாரால் கைது செய்யப்பட்டாராம்.

தனக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கலாம்

தனக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கலாம்

எனினும் பின்னர் இந்த லண்டன் அரசு ஜீலியனுக்கு ஜாமின் வழங்கியது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் ஜீலியன் அசாஞ்சேவை சுவீடனுக்கு நாடு கடத்த இங்கிலாந்து முடிவு செய்தது. எனினும் இது அமெரிக்காவின் வேலைதாம் என்று புரிந்து கொண்ட சுவீடனிடம் ஒப்படைக்கப்பட்டால் பின்னர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவோம். இதனால் தனக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கலாம் என்றும் அஞ்சினார்.

ஈக்குவிடாராரில் தஞ்சம் புகுந்த ஜீலியன்

ஈக்குவிடாராரில் தஞ்சம் புகுந்த ஜீலியன்

இதனால் அவர் 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஈக்குவடார் தஞ்சம் புகுந்தார். தனக்கு அடைக்கலம் கொடுக்கும்படி ஜீலியன் அசாஞ்சே முன்வைத்த கோரிக்கையை ஈக்குவடார் அரசு ஏற்றுக் கொண்டது. எனினும் எப்போது அந்த அரசை விட்டு வெளியே வந்தாலும் கைது செய்யப்படுவார் என்று இங்கிலாந்து அரசு எச்சரித்திருந்தாம்.

ஜீலியன் கைது

ஜீலியன் கைது

இந்த நிலையில் ஜீலியன் அசாஞ்சே தொடர்ந்து சர்வதேச நெறிமுறைகளை மீறி வருவதாகவும், அவருக்கு அளித்து வந்த அடைக்கலத்தை திரும்ப பெறுவதாகவும் ஈக்குவடார் அதிபர் லெனின் திடீரென அறிவித்ததையடுத்து இங்கிலாந்து போலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+