ஒரு இமயம் சரிந்து விட்டது.. விமான துறையில் ஜெட் ஏர்வேஸ் இல்லை.. இனி செயல்படுமா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஜெட் ஏர்வேஸ் நிதி நெருக்கடியால் ஏற்கனவே தத்தளித்து வரும் நிலையில், அது மீண்டும் செயல்படத் தொடங்குவது என்பது சாத்தியமான விஷயமாக தெரியவில்லை. அப்படியே அதை செயல்படுத்த நினைத்தாலும், அதன் முதலீட்டாளர்களுக்கு இது மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். ஆக இது மீண்டும் பறக்க முடியுமா, விமான சேவையை தொடர முடியுமா என்ற கவலையை முதலீட்டாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது என்று எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் கூறியுள்ளார்.

 

இது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார் கடந்த வியாழக்கிழமையன்று கூறியதாவது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் பெற்ற கடன்களும் லாபங்களையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இது மீண்டும் பறக்க முடியுமா, விமான சேவையை தொடர முடியுமா என்ற கவலையை முதலீட்டாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய விமான நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ், அதவும் சந்தை மதிப்பில் முக்கிய இடத்தில் இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெற்காசிய நாடுகளில் நிலவி வந்த கடுமையான போட்டிகளிலும் ஏற்றம் கண்டு வந்தது. இந்த நிலைகளில் எஸ்.பி.ஐயில் கடனை கட்ட முடியாமல் தவித்து வந்த ஜெட் ஏர்வேஸ், தனது முழு சந்தை மதிப்பையும் இழந்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் விற்பனை

ஜெட் ஏர்வேஸ் விற்பனை

இந்த சூழ்னிலையிலேயே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் கடன் தொகை அதிகமாக இருப்பதால் இதை வாங்க யாரும் முன்வரவில்லையாம். இது தெரிஞ்ச விஷயம் தானேன்னு சொல்லீறீங்க்களா?

கடைசி 9 மாதங்களில் நஷ்டம்

கடைசி 9 மாதங்களில் நஷ்டம்

மேலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 11 ஆண்டுகளில் தனது சேவையைக் செய்து கொண்டிருந்தாலும், கடைசி ஒன்பது மாதங்களிலேயே இந்த நஷ்டத்தை கண்டது. இதனால் ஜெட் ஏர்வேஸ் கடந்த ஏப்ரல் மாத்தில் முழுமையான தனது சேவையை நிறுத்தியது. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் மீண்டும் தனது சேவை எடுத்து கொள்வதற்கு சாதகமான அறிகுறிகளும் ஏதும் இல்லை.

ஜெட் ஏர்வேஸ் இடத்தை பிடித்த நிறுவனங்கள்
 

ஜெட் ஏர்வேஸ் இடத்தை பிடித்த நிறுவனங்கள்

இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ்சின் இடத்தை மற்ற நிறுவனங்கள் தற்போது பிடித்திருப்பதும் தெரிந்த ஒரு விஷயமே, இதையும் ஜெட் ஏர்வேஷ் நிறுவனம் பார்த்துக் கொண்டுதான் உள்ளது. ஆக தன்னால் எதையும் செய்ய முடியாமலேயே தவித்து வருகிறது ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்சை நடுத்த விண்ணபிக்க மே-10 கெடு

ஜெட் ஏர்வேஸ்சை நடுத்த விண்ணபிக்க மே-10 கெடு

இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தையும் அதன் கட்டுப்பாடுகளையும் எடுத்துக் கொள்வதற்கு விண்ணபிக்க காலக்கெடு மே -10 தான் கடைசி தேதி. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக கடன் பட்டுள்ளது. இதை எப்படி கட்டப்போகிறதோ தெரியவில்லை என்று கூறியுள்ளார் குமார்.

இமயம் சரிந்து விட்டது.

இமயம் சரிந்து விட்டது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மிகப்பெரிய பழமையான தனியார் நிறுவனம். இதற்கென லாபத்தை தரக்கூடிய பல ரூட்கள் இருந்தன. அதிலும் குறிப்பாக லண்டன் டொராண்டோ உள்ளிட்ட பல லாபகரமான ரூட்கள் இருந்தன. இருப்பினும் இப்படியொரு மிகப்பழமையான தனியார் நிறுவன உடைந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Liabilities biggest hurdle to Jet Airways sale says SBI

The top lender of ailing jet airways, said the burden of reversing the grounded carrier’s negative net worth before it can fly again is the biggest challenge for any potential investor.
Story first published: Thursday, May 2, 2019, 17:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X