எப்பதாண்டா முடியும் இந்த தேர்தல்.. அல்லல்படும் உற்பத்தியாளர்கள்.. அடுத்து என்ன புதிய விதிமுறை வரும்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் தொழில் துறை உற்பத்தி எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக பொருளாதார குறித்த மாத அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த வளர்ச்சி குறைவு, அதாவது நாட்டின் உற்பத்தி குறைவு நாட்டில் புதிய தொழில் வர்த்தக வளர்ச்சிகள் குறைவாக இருப்பதையும், தேர்தல் நேரம் என்பதால் மிகப் பெரிய சவாலான ஒரு விஷயமாகவும் இருப்பதாலேயும், வளர்ச்சி மிக குறைந்துள்ளதாகவும், இது மிகப் பெரிய சவாலான விஷயமாகவும் உள்ளது. இந்த நிலையில் பொருளாதார சூழ்நிலையும் மோசமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.

"Nikkei India Manufacturing Purchasing Managers' Index" இந்தியா உற்பத்தி குறித்தான குறியீடு மார்ச் மாதத்தில் 52.6 ஆகவும். இதுவே ஏப்ரல் மாதத்தில் 51.8 ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளன. இது 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வர்த்தக நிலைகளில் உள்ள பலவீனத்தையே காட்டுகிறது. இதைத் தொடர்ந்து PMI ஐ 50 புள்ளிகளுக்கு மேலாக தொடர்ந்து 21- மாதங்கள் 50க்கு மேலாகவே உள்ளது கவனிக்கதக்கது.

புதிய தொழில் வரத்து குறைவு

புதிய தொழில் வரத்து குறைவு

இவ்வாறு கடந்த ஏப்ரல் மாத்தில் வெளியிடப்பட்ட உற்பத்தி குறியீடானது, தொழில் புதிய வரத்துகள் குறைந்துள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் குறைவு, புதிய தொழில் தொடங்குவதற்கான விதி முறைகள் அதிகமுள்ளதாலும் இந்த தொழில் குறித்த உற்பத்தி வளர்ச்சி மெதுவான ஒரு வளர்ச்சியாக இருந்து வருகிறது.

இது மெருகேற்றும் வேலை

இது மெருகேற்றும் வேலை

ஆனால் இன்றும் பல துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றனவே, பின் ஏன் உற்பத்தி மட்டும் குறைகிறது என்ற கேள்வி எழுகிறதா? இதோ உங்கள் கேள்விக்கு பொருளாதார வல்லுனர் போலியானா டி லிமா பதில் கூறுகிறார். உற்பத்தியாளர்கள் பேருக்கு தான் வேலை அதிகரித்துள்ளது என்று மெருகேற்றுகிறார்கள்.ஆனால் உண்மையில் அப்படி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வேலை அதிகரித்துள்ளதாக தெரியவில்லை என் கூறுகிறார்.

தேர்தல் முடியட்டும் பார்க்கலாம்
 

தேர்தல் முடியட்டும் பார்க்கலாம்

இவ்வாறு சர்வேக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஏன் உற்பத்தி குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, அரசு தேர்தல் காரணமாக புதியதொரு பிசினஸ்களை எடுத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை. மேலும் தேர்தல் காரணமாக புதிய நிறுவனங்களும் தங்களது புதிய நடவடிக்களை தள்ளிப் போட்டுள்ளதாகவும் தெரிகிறது.

வரப்போகும் அரசு புதிய நெறிமுறைகள் கொண்டு வரலாம்

வரப்போகும் அரசு புதிய நெறிமுறைகள் கொண்டு வரலாம்

வரப்போகும் அரசு எவ்வாறு தொழில் துறைகான நெறி முறைகளை எவ்வாறு கொண்டு வரும் என்று தெரியாததால் பொறுத்திருந்து பார்க்கின்றன. இதனாலேயே பல மாதங்களாக தொடர்ந்து உற்பத்தியும் குறைந்துள்ளது. தொழிலிற் துறை வளர்ச்சியும் குறைந்துள்ளது. ஆக வரப்போகும் அரசே இதை தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: india இந்தியா
English summary

Manufacturing sector growth slows to eight-month low

The country’s manufacturing sector performance eased to an eight-month low in April as new business growth moderated, curbed by the elections and a challenging economic environment,
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X