நீடிக்கும் குழப்பம்.. மாருதி டீசல் கார் உற்பத்தி இல்லனுச்சு.. இப்ப Ertiga டீசல் அறிமுகம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம் வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் டீசல் கார் உற்பத்தி செய்வதை நிறுத்தப் போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதிகளவில் டீசல் கார்களை உற்பத்தி செய்யும் மாருதி சுசூகி, இந்தியாவில் மொத்த டீசல் கார் உற்பத்தியில் 23 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில் கடந்த செவ்வாயன்று வெளியிட்ட அறிவிப்பில் Ertiga என்ற புதிய ரக டீசல் காரை அறிமுகப்படித்தியுள்ளது. 1.5 டீசல் இஞ்சின் திறன் கொண்ட காரின் விலை 9.86 லட்சம் ரூபாயாகவும் விலை நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதாம்.

இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்பிற்கு ஏற்ப இந்த கார்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் மாருதி நிறுவனம் அறிவித்துள்ளதாம். இந்த நிலையில் இதே நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஆண்டு ஏப்ரல்1, 2020 முதல் மாருதி டீசல் கார்களை உற்பத்தி செய்யாது என்றும் கூறியுள்ளார்.

அப்படி என்னதான் நடந்துச்சு Wikileaks-லா.. ராணுவ ரகசியங்களை இணையதளத்துல ஜீலியன் வெளியிட்டாரா அப்படி என்னதான் நடந்துச்சு Wikileaks-லா.. ராணுவ ரகசியங்களை இணையதளத்துல ஜீலியன் வெளியிட்டாரா

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய விதிமுறைகள்

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய விதிமுறைகள்

மேலும் இதற்கு காரணம் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வரக் கூடிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய விதிமுறைகளால் டீசல் கார் உற்பத்திக்கு அதிக அளவில் செலவு ஏற்படும் என்றும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த எர்டிகா டீசல் காரின் அறிமுகம் அனைவரின் மனதிலும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட திறன் கொண்ட கார்கள் அறிமுகம்

குறிப்பிட்ட திறன் கொண்ட கார்கள் அறிமுகம்

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் சீனியர் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ். கல்சி கூறியதாவது, மாருதி சுசூகி கடந்த நவம்பர் 2018 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2019 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 40,000க்கும் மேற்பட்ட கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனம் இதற்கு முன்பு குறிப்பிட்ட திறன் கொண்ட கார்களை மட்டும் அறிமுகம் செய்தது.

டீசல் கார்கள் நவீன  மயமாக்கப்படும்
 

டீசல் கார்கள் நவீன மயமாக்கப்படும்

தற்போது இந்த வகையான கார்கள் பல மாடல்களில் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த வகையில், அதிகளவு திறன் கொண்ட கார்களும், குறைந்த திறன் கொண்ட கார்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் 2020 ஏப்ரல் 1ம் தேதிக்குள் அனைத்து டீசல் கார்களையும் நவீனமயமாக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளதாம். ஆக மாருதி நிறுவனம் இன்னும் குழப்பத்துல தான் இருக்கு போல.

அப்படின்னா இப்ப தயாரிச்சத என்ன பண்ண

அப்படின்னா இப்ப தயாரிச்சத என்ன பண்ண

இவ்வாறான குழப்பத்தில் மாருதி நிறுவனத்தில் நிலவி வருவதாலேயே என்னவோ வாடிக்கையாளர் மத்தியில் சில கேள்விகளும் எழுந்துள்ளன. அது என்னவெனில் இனி நவினமாக்குவீங்க, ஆனால் இதுவரைக்கும் உற்பத்தி செஞ்ச கார்களை என்ன செய்வது? அத வாடீக்கையாளர்கள் வாங்கிச் சென்றால் அதை எவ்வாறு புதுப்பிப்பது என்ற பல கேள்விகள் மனதில் எழுகின்றன. இந்த நிலையில் மாருதி நிருவனம் இது போன்ற சந்தேகளுக்கு பதில் அளித்தால் நன்றாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maruti Suzuki Ertiga Launched With The New 1.5-Litre Diesel, Prices Start At Rs.9.86 Lakhs

Early Maruti Suzuki will told stop selling diesel-powered vehicles from April 2020, because the cost to meet new emission rules will widen their price difference with petrol-run vehicles, especially in the segments where the company operates in. But now it announce The new diesel Ertiga is available in three variants - VDi, ZDi and ZDi+; prices are about Rs 29,000 more than the equivalent Ertiga 1.3.
Story first published: Thursday, May 2, 2019, 11:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X