காக்னிசன்ட் வரலாற்றிலேயே முதல் முறையாக..வளர்ச்சியில் பெரும் சரிவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் தான் காக்ணிசண்ட். இந்த நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதன் முறையாக கடந்த மூன்றாண்டுகளில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு காரணம் பாரம்பரிய தொழில்நுட்பமான அவுட்சோர்ஸிங் தொழில் ஆட்டோமேஷன், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு இயங்கும் தளங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களிலிருந்து பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. ஆக இது போன்ற காரணிகளே இந்த வளர்ச்சி குறைவுக்கு காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் காக்ணிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு கடந்த முதல் காலாண்டில் மோசமான வருவாயே கிடைத்ததாகவும், முன்னர் பொருளாதார நிபுணர்கள் கணித்தது போல் அல்லாமல் லாபம் குறைந்துள்ளாதாகவும் கூறுகின்றனர்.

ரூ.1.02 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த டாடா மோட்டார்ஸ்..!ரூ.1.02 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த டாடா மோட்டார்ஸ்..!

வரலாற்றிலேயே  குறைந்த வளர்ச்சி

வரலாற்றிலேயே குறைந்த வளர்ச்சி

காக்ணிசண்ட் நிறுவனம் 1994-ல் நிறுவப்பட்டதிலிருந்து இது தான் மிக குறைந்த வளர்ச்சியே என்று இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஹம்ப்ரிஸ் கூறியுள்ளார். மேலும் இந்த மெதுவான வளர்ச்சி எங்கள் நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய சவால் என்றும், இதையே அந்த வளர்ச்சி அதையே அடிக்கோடிட்டும் காட்டுகிறது.

இந்திய ஊழியர்களே அதிகம்

இந்திய ஊழியர்களே அதிகம்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் காக்னிசண்ட் நிறுவனம் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டது ஆனாலும், இதன் ஊழியர்களில் பெரும்பகுதி இந்தியர்கள் தானாம். கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வருவாய் முந்தைய காலாண்டோடு ஒப்பிடும் போது 0.46 சதவிகிதம் குறைந்துவிட்டதாம். இதுவே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 5.06 சதவிகிதம், அதிகரித்து 4.11 பில்லியன் டாலராக இருந்தது.

நிகரலாபம் குறைந்துள்ளது

நிகரலாபம் குறைந்துள்ளது

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 32 சதவிகிதம் குறைந்தும், இதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 15.2 சதவிகிதம் குறைந்தும், 441 மில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அதிகாரிகளுக்கு உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் படி, 117 பில்லியன் டாலர்களையும் அளித்துள்ளது கவனிக்கதக்கது. இந்த காரணத்தினால் இந்த நிறுவனத்தின் இயக்க தொகை (operating margin) 13.1 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதுவே டிசம்பர் காலாண்டில் 16.8 சதவிகிதமாக இருந்தது கவனிக்கதக்கதாகும்.

புளூம்பெர்க் எதிர்பார்த்தது

புளூம்பெர்க் எதிர்பார்த்தது

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில் புளூம்பெர்க் ஆய்வில் காக்னிசண்ட் நிறுவனத்தின் வருவாய் $ 4.16 பில்லியனாகவும், அதன் லாபம் 595.27 மில்லியன் டாலராகவும் எதிர்பார்க்கப்பட்டதாம். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில், காக்னிசான்டின் வளர்ச்சி மிகக் குறைந்துள்ள நிலையில் கடந்த ஆண்டில் வருவாய் 8.9 சதவிகிதம் அதிகரித்து 16.12 பில்லியனாக மட்டுமே உள்ளது.

போட்டியாளர்களின் வளர்ச்சி

போட்டியாளர்களின் வளர்ச்சி

ஆனால் இதே நேரத்தில் இந்த போட்டியாளர்களான அசென்சர் பிஎல்சி மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிட்டெட் உள்ளிட்ட நிறுவனங்கள் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன. அசென்சர் நிறுவனம் 13.5% வளர்ச்சியை பெற்று 39.57 பில்லியன் டாலர் வருவாயையும், டிசிஎஸ் 9.6% வளர்ச்சி அடைந்து 20.91 பில்லியன் டாலர்களாகவும் உயர்ந்துள்ளது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cognizant projects has slipped in its history

Cognizent over the last three years growth has slipped, because the trational it soucrcing industry is facing threats from newer technologies like automation, cloud computing and artificial intelligence powered platforms.
Story first published: Friday, May 3, 2019, 16:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X