டெல்லி : நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் கடந்த மார்ச் மாத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் லாபமாக 1,538 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1351 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. மேலும் இதன் வளர்ச்சியும் 14 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம், ஆனால் இதன் காலாண்டு வளர்ச்சி 6 - 8 சதவிகிதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7 சதவிகிதமாக மட்டுமே உள்ளதாம்.
இந்த நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் விதத்தில் அதிகளவிலான முதலீட்டையும் அதிகரித்துள்ளதாம். மேலும் தொகுதி வாரியாக இந்த வளர்ச்சி என்பது ஒரு முக்கிய குறியீடாகவும் உள்ளதாம். இது நுகர்வோர் பொருட்கள் ஆதலால் அனைனவருக்கும் பிடிக்கும் வகையில் தரமான பொருளாக விற்பனைக்கு கொடுப்பதும் நல்ல வளர்ச்சியே என்கிறது இந்த நிறுவனம்.
நுகர்வோர் பொருட்களில் கவனம்
ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் எப்போதும் நுகர்வோர் பொருட்களில் தனிப்பட்ட கவனத்துடன் இருக்கும். குறிப்பாக வீட்டு பராமரிப்பு பொருட்கள், உணவு மற்றும் பானங்கள் பிரிவுகளில் விற்பனை, கடந்த சில மாதங்களில் வலுவான இரட்டை இலக்க அளவு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது என்றும், இது ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் வருவாய்க்கு மிகப் பெரிய உதவியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளது இந்த நிறுவனம். பொதுவாக இந்தியாவின் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (எப்.எம்.சி.ஜி) சந்தைக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
வருவாய் 9% அதிகரிப்பு
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் வட்டி, வருமானம், தேய்மானம் (EBITDA) உள்ளிட்ட லாபம், இதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது, 13% உயர்ந்து, 2,331 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே மார்ச் மாத காலாண்டு வருவாய் 9 சதவிகிதம் அதிகரித்து, 9,945 கோடி ரூபாயாக வருவாய் ஈட்டியுள்ளது.
மிதமான வளர்ச்சி இருக்கும்
இது குறித்து இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைவருமான சஞ்சீவ் மேத்தா கூறுகையில், மிகப் பெரிய பொருளாதாரம் குறித்த குறியீடுகள், குறிகிய கால சந்தை சற்று மிதமான் வளர்ச்சியுடையதாகவே இருக்கும் என்றும், இதுவே நடுத்தர கண்ணோட்டமானது இதற்கு எதிர்மறையாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
ரூ.13 டிவிடெண்ட்
மேலும் இந்த நிறுவனம் தனது லாபத்தினை பங்கீட்டு தாரர்களுடன் பகிந்து கொள்ளும் வகையில் டிவிடெண்ட் ஆக 13 ரூபாய் தர தீர்மானித்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications