இந்திய தொழிற்சாலைகளுக்கு ரூ.28.85 லட்சம் கோடி கடன்..! ஆர்பிஐ அறிக்கை..!

மும்பை: இந்தியாவின் வங்கிகளை நெறிமுறைப்படுத்தும், மத்திய ரிசர்வ் வங்கி இந்தியாவின் கடன் வளர்ச்சிக் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் விவரங்கள் அடிப்படையில் தரவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவாம்.

மார்ச் 2019 நிலவரப்படி, எவ்வளவு ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள். யாருக்கு எல்லாம் கடன் கொடுத்திருக்கிறார்கள் என்கிற விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.

ஓவர் ஆலாக, ஒட்டு மொத்தமாக இந்தியாவில் மார்ச் 2019 நிலவரப்படி 86,74,900 கோடி ரூபாய் மொத்தக் கடனாகக் கொடுத்திருக்கிறார்கள். இது கடந்த மார்ச் 2018-ஐக் காட்டிலும் கடன் 12.2 அதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

உணவுக் கடன்கள்

உணவுக் கடன்கள்

உணவு சம்பந்தப்பட்ட கடன்களை பொதுவாக FCI-க்கு கொடுக்கும் கொஞ்சம் குறைந்திருக்கிறது. மார்ச் 2019-ல் 41,500 கோடி ரூபாய் உணவுக் கடன்களாக கொடுக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 2018-ல் அதே உணவுக் கடன்கள் 41,900 கோடி ரூபாயாக கொடுக்கப்பட்டிருந்தது. ஆக மார்ச் 2018-ஐ விட மார்ச் 2019-ல் -0.9 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.

4 பிரிவு

4 பிரிவு

உணவு அல்லாத கடன்கள் பட்டியலின் கீழ் தான் தொழிற்சாலைகள், சேவைகள், முதலீடுகள், தனி நபர் கடன்கள், விவசாயக் கடன்கள், வீட்டுக் கடன்கள், கல்விக் கடன்கள் எல்லாம் வருகின்றன. இந்த உணவு அல்லாத கடன்களை நான்கு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். 1. விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த வேலைகளுக்கான கடன். 2. தொழிற்சாலை - சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், அதோடு பெரிய தொழிற்கூடங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். 3. சேவைத் துறைக்கு கொடுக்கும் கடன்கள். 4. தனி நபர்க் கடன்கள்.

86.33 லட்சம் கோடி ரூபாய்

86.33 லட்சம் கோடி ரூபாய்

இந்த உணவு அல்லாத கடன்கள் மார்ச் 2019-ல் 86,33,400 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் 2018-ல் இந்த உணவு அல்லாத கடன்களின் அளவு 76,88,400 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆக 12.3 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. மேலே சொன்ன நான்கு துறைகளில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழிற்சாலைகள் மற்றும் தொழிற் கூடங்களுக்கு தான் பெரிய அளவில் கடன் கொடுத்திருக்கிறர்கள். இவர்களுக்க் கொடுத்த மொத்தக் கடன் அளவு சுமார் 28.85 கோடி ரூபாய்

28.85 கோடி ரூபாய் பிரிவு

28.85 கோடி ரூபாய் பிரிவு

இந்த சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள், குடிசைத் தொழில் செய்பவர்கள், சிறிய அளவில் வங்கியின் கடன் வாங்கி தொழில் செய்பவர்களுக்கு 3,75,500 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கிறார்கள். ஓரளவுக்கு தொழில் செய்து வளர்ந்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு 1,06,400 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கிறார்கள். பெரு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் 24,03,900 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுக்கிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+