ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளையும், அன்றைய பங்குச் சந்தை விலையோடு பெருக்கினால் கிடைப்பது தான் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்.
உதாரணமாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருக்கும் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 436,17,33,444 (436.17 கோடி பங்குகள்). இதை தற்போதைய 726.99 ரூபாய் உடன் பெருக்கினால் கிடைப்பது 3,17,098 கோடி ரூபாய். இதைத் தான் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் என்கிறோம்.
இதை ஒரு நிறுவனத்துக்கு என்று பார்க்காமல் ஒட்டு மொத்த துறை வாரியாகவும் பார்க்க முடியும். அப்படிப் பார்த்தால் தற்போது இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனையும் ஒன்று சேர்த்தால், சுமார் 2.95 லட்சம் கோடி ரூபாய் சரிந்திருக்கிறது.
சரிவு தான்
கடந்த 16 மாதங்களாக தொடர்ந்து இந்திய ஆட்டோமொபைல் துறை சார்ந்த பங்குகள் மற்றும் நிறுவனங்களுக்கு தொடர் அடி தான். இது இன்னும் சில மாதங்களுக்கு மேலும் நீடிக்கும் எனவும் பயமுறுத்தி இருக்கிறார்கள். டிசம்பர் 2017-ல் உச்சத்தில் இருந்த இந்திய ஆட்டோமொபைல் துறை, சந்தையின் ஏற்றத்தை முன்னெடுத்த இந்திய ஆட்டோமொபைல் துறை... இப்போது, இந்தியாவிலேயே மோசமாக செயல்படும் துறையாக அவதாரம் எடுத்திருக்கிறது. டிசம்பர் 2017 முதல் ஏப்ரல் 2019 வரையான 16 மாதங்களில் இந்தியாவின் ஆட்டோமொபைல் இண்டெக்ஸ் 30% சரிந்திருப்பது தான் அதன் சாட்சி.
நெருக்கடிகள்
ஏற்கனவே இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை சரிந்திருப்பது, நிதி நிறுவனங்களே கொஞ்சம் நிதி நெருக்கடிகளில் தவிப்பது, உற்பத்தி செய்த வாகனங்கள் விற்பனை ஆகாமல் தேக்கம் என பல சனி பகவான்கள் இந்திய ஆட்டோமொபைல் துறையை இறுக்கமாக கீழே இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு வரை இந்தியா தான் உலகிலேயே ஆட்டோமொபைல் துறையில் அசுர வளர்ச்சி கண்டு வரும் நாடாக இருந்தது என்பது இந்த இடத்தில் கவனிக்கத் தக்கது.
இனியும் தொடரலாம்
மேற்கொண்டும் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கான தேவை அதிகரித்தது போல் தெரியவில்லை. எனவே அடுத்து வரும் சில காளாண்டுகளிலும் விற்பனை குறைவால், இந்திய ஆட்டோமொபைல் துறையின் வருமானங்கள் குறையும், வருமானக் குறைவால் பங்கு விலை குறையும், பங்கு விலை குறைவால், நிச்சயம் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் அடிவாங்கும் என்கிறார்கள், நோமுரா நிறுவனத்தின் அனலிஸ்டுகள் கபில் சிங் மற்றும் சித்தார்தா பெரா.
டாடா மோட்டார்ஸ்
இப்படி மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் மரண அடி வாங்கிய நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ்-க்கு முதலிடத்தில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2016-ல் சுமார் 580 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்தது. ஆனால் இப்போது வெறும் 211 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இதனால் செப்டம்பர் 2016-ல் 1.66 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன், இன்று வெறும் 60,937 கோடி ரூபாயாக இருக்கிறது. ஒரு லட்சம் கோடி ரூபாய் காற்றோடு காற்றாக கரைந்து விட்டது. அதுவும் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களூக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டு..!
இவர்களுமா..?
டாடா மோட்டார்ஸ் உடன், மாருதி சுஸிகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹீரோ மோட்டோ கார்ப் போன்ற நிறுவனங்களும் பெரிய அளவில் தன் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனை இழந்திருக்கிறார்கள். மாருதி சுஸிகி நிறுவன பங்குகளின் விலை கடந்த ஒரு வருடத்தில் 9,927 ரூபாயில் இருந்து சரிந்து தற்போது 6,750-க்கும் வர்த்தகமாகிறது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 993 ரூபாயில் இருந்து சரிந்து தற்போது 647 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இதன் ஒரு வருடம் இறக்கம் 615 ரூபாய். ஹீரோ நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் 3,712 ரூபாயில் இருந்து சரிந்து தற்போது 2,578 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இதன் ஒரு வருடம் குறைந்த விலையே 2,477 தான். ஆக கிட்ட தட்ட பெரிய இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்கு விலை சரிவால், மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனும் சுமார் 2.95 லட்சம் கோடி ரூபாய் வரை சரிந்திருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications