கெடு முடிஞ்சு போச்சே.. இனி இந்தியா எண்ணெய் இறக்குமதிக்கு என்ன பண்ணும்.. பெட்ரோல் டீசல் விலை எகிருமே

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன் : இந்தியாவுக்கு எப்பதான் நல்ல காலம் வருமோ. இனி என்ன செய்ய போகிறோம் எண்ணெய் இறக்குமதிக்கு என்று அடுத்தடுத்த பல கேள்விகள் மனதில் எழுகின்றன. என்ன தான் அமெரிக்கா பயப்பட வேண்டாம் என்று கூறினாலும், இந்த இறக்குமதி நிறுத்தத்தால் என்னனென்ன விளைவுகளை மேற்கொள்ள போகிறதே. சாதரணமாகவே இந்திய ஆயில் நிறுவனங்கள் பெட் ரோல் டீசல் விலையை ஏற்றும் நிலையில் இனி அதை நினைக்கவே பயமாய் இருக்கிறது.

 

இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் அதில் விலக்கு அளித்தது. இருப்பினும் 6 மாதங்களுக்குள் ஈரானிடம் இருந்து எண்ணை வாங்குவதை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்தது. இந்த கெடு மே 2-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மேலும் இந்த சலுகையை நீடிக்க முடியாது என அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெட்ரோல் டீசல் தட்டுப்பாடும் ஏற்படும், அதோடு விலையும் கணிசமாக உயிரும் அபாயமும் நிலவி வருகிறது. இந்த நிலையில் இதற்கு தீர்வுகாணும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதில் ஈரானிடம் இருந்து எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள் அச்சம் கொள்ள தேவையில்லை என்பது தான்.

அரேபிய  நாடுகளுடன் ஒப்பந்தம்

அரேபிய நாடுகளுடன் ஒப்பந்தம்

ஏற்கனவே சவுதி அரேபியா மற்றும் ஒபெக் நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகள் தனது வேண்டுகோளை ஏற்று எண்ணை உற்பத்தியை அதிகரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன என தெரிவித்திருந்த டிரம்ப், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த இறக்குமதி எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியும், இதனாலேயே ஒபெக் நாடுகளிடமும் எண்ணையை தாராளமாக உற்பத்தி செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அதோடு அரேபியா நாடுகளுடனும் எண்ணெய் உற்பத்தி குறித்த ஒப்பந்தம் முன்னேரே போடப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிககாவின் கெடு முடிஞ்சது

அமெரிககாவின் கெடு முடிஞ்சது

இது குறித்து இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது. எனினும் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டது. எனினும் அமெரிக்கா கெடு முடிந்த நிலையில் இந்த கெடுவை நீட்டிக்க முடியாது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் இந்தியா தற்போது பிற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.

இழப்புகளை சமாளிக்க தயாராக உள்ளோம்
 

இழப்புகளை சமாளிக்க தயாராக உள்ளோம்

மேலும் இதுகுறித்து இந்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ரவீஸ் குமார் கடந்த வியாழக்கிழமையன்று கூறியதில், ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா வழங்கிய 6 மாத சலுகை காலம் முடிந்து விட்டது. இருப்பினும் இதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க இந்தியா தயாராகவே உள்ளது என கூறியுள்ளாராம். வாரே வா இவர்கள் சமாளித்து விடுவார்கள், ஆனால் அடித்தட்டு மக்களின் நிலையையும் கொஞ்சம் யோசித்து விரைவில் இறக்குமதியை அதிகரித்தால் நமக்கும் நமது நாட்டுக்கும் நல்லது என் கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஈராக்கிடம் இறக்குமதி

ஈராக்கிடம் இறக்குமதி

2018-19-ம் ஆண்டுகளில் ஈராக்கில் இருந்துதான் இந்தியா அதிகளவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்திருக்கிறது. கடந்த நிதியாண்டில் ஈராக்கிடம் இருந்து 46.61 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே இதற்கு முந்தைய நிதியாண்டில் 45.74 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்பட்டது.

இரண்டாவது இறக்குமதியாளர் சவுதி அரேபியா

இரண்டாவது இறக்குமதியாளர் சவுதி அரேபியா

ஈராக்கிற்கு அடுத்ததாக சவுதி அரேபியாவில் இருந்து கடந்த நிதியாண்டில் 40.33 மில்லியன் டன் அளவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 36.16 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்பட்டது.

ஈராணிடம் 23.90  மில்லியன் டன் இறக்குமதி

ஈராணிடம் 23.90 மில்லியன் டன் இறக்குமதி

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கியதில் ஈரான் 3- வது இடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியா ஈரானிடம் இருந்து 23.90 மில்லியன் டன் அளவிற்கு இறக்குமதி செய்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய நிதியாண்டில் 22.59 மில்லியன் டன் இறக்குமதி செய்ய்ப்பட்டிருந்தது கவனிக்க தக்கது.

இறக்குமதிக்கு இத்தனை நாடுகளா?

இறக்குமதிக்கு இத்தனை நாடுகளா?

அடுத்ததாக வெனிசுலாவில்தான் 17.49 மில்லியன் டன்னும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நைஜீரியாவிலிருந்து 16.83 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யும், குவைத்திலிருந்து 10.78 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா வெறும் 6.40 மில்லியன் டன் தான்

அமெரிக்கா வெறும் 6.40 மில்லியன் டன் தான்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 2017-ம் ஆண்டில் இருந்துதான் அமெரிக்கா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்து வருகிறது. கடந்தாண்டில் அமெரிக்கா இந்தியாவிற்கு 6.40 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: iran petrol diesel ஈரான்
English summary

US to end all waivers on imports of Iranian oil and its impact on India

Iraq has for the second year in a row become India's top crude oil supplier, meeting more than a fifth of the country's oil needs in 2018-19 fiscal year. According to data sourced from the Directorate General of Commercial Intelligence and Statistics, It sold 23.9 million tonne of crude in 2018-19, up from 22.59 million tonne in the previous year, according to the data.
Story first published: Friday, May 3, 2019, 9:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X