ஃபேஸ்புக்கில் 94,000 விளம்பரங்களுக்கு 20 கோடி ரூபாய் செலவு..! விவரங்களை வெளியிட்ட ஃபேஸ்புக்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

01 பிப்ரவரி 2019 முதல் ஏப்ரல் 27, 2019 வரையான மூன்று மாத காலங்களில் ஃபேஸ்புக்கில் இந்தியா முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் விளம்பரங்களை மேற்கொண்டார்கள்.

 

இப்படி மொத்தம் 95,000 தேர்தல் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இருக்கிறார்களாம். அதற்கு மொத்தமாக 20 கோடி ரூபாய் செலவழித்திருப்பதாக ஃபேஸ்புக் அட் லைப்ரரி அறிக்கைகள் சொல்கின்றன.

இந்தியாவிலேயே அதிகமாக பாரதிய ஜனதா கட்சி 'பாஜகவுக்கு வாக்களியுங்கள்' என நேரடியாக 1,737 விளம்பரங்களை வெளியிட்டிருக்கிறார்களாம். அதற்கு 2.6 கோடி ரூபாய் செலவும் செய்திருக்கிறார்கள்.

இனி நபார்டும், நேஷனல் ஹவுசிங் பேங்கும் மத்திய அரசு நிறுவனங்கள்..! ஒதுங்கிய ஆர்பிஐ..! இனி நபார்டும், நேஷனல் ஹவுசிங் பேங்கும் மத்திய அரசு நிறுவனங்கள்..! ஒதுங்கிய ஆர்பிஐ..!

பாஜக ஆளுமை

பாஜக ஆளுமை

‘பாரத் கி மன் கி பாத்' என்கிற பெயரில் மீண்டும் பாஜக 2,384 விளம்பரங்களுக்கு 2.2 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்களாம். ‘நேஷன் வித் நமோ' என்கிற பெயரில் மீண்டும் பாஜக 2,384 விளம்பரங்களுக்கு 1.2 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். ‘என் முதல் ஓட்டு மோடிக்கே' என்கிற பெயரில் 7,221 விளம்பரங்களுக்கு 1.1 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்களாம். ஃபேஸ்புக்கில் ஏனோ தானோ என்று தான் காங்கிரஸ் களம் இறங்கி இருக்கிறது போல. காங்கிரஸ் ஃபேஸ்புக்கில் 2,706 விளம்பரங்களுக்கு 74 லட்சம் ரூபாய் மட்டுமே செலவழித்திருக்கிறார்களாம்.

மாநிலக் கட்சிகள்

மாநிலக் கட்சிகள்

மாநிலக் கட்சிகளை எடுத்துக் கொண்டால் அதிமுக அதே 01 பிப்ரவரி 2019 முதல் 27 ஏப்ரல் 2019 வரையான மூன்று மாத காலங்களில் 16.47 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். திமுக வெறும் 4.58 லட்சம் ரூபாய் தான் செலவழித்திருப்பதாகச் சொல்கிறது ஃபேஸ்புக் அட் லைப்ரரி அறிக்கை.

வேட்பாளர்கள்
 

வேட்பாளர்கள்

தமிழகத்தில் ஃபேஸ்புக்கில் அதிகம் விளம்பரம் செய்த வேட்பாளர்கள் பட்டியலை எடுத்தால் சிலர் தேசிய தலைவர்களையே மிஞ்சும் அளவுக்கு அதிக ஃபேஸ்புக் விளம்பரங்களைக் கொடுத்திருக்கிறார்களாம். கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தென் சென்னை வேட்பாளரான் அர ரங்கராஜன், 35 விளம்பரங்களுக்கு 2.25 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறாராம். ஈரோட்டில் திமுக சார்பாக நின்ற வைகோவின் மதிமுக கட்சியைச் சேர்ந்த கணேச மூர்த்தி 464 ஃபேஸ்புக் விளம்பரங்களுக்கு 2.08 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறாராம். தேசிய அளவில் அமிஷ் ஷாவே ஃபேஸ்புக் விளம்பரங்களுக்கு வெறும் 2.1 லட்சம் ரூபாய் மட்டுமே செலவழித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஃபேஸ்புக்கில் விளம்பரத்துக்கு 1.3 லட்சம் மட்டுமே செய்திருக்கிறாராம்.

விளம்பரம்

விளம்பரம்

கூகுள் நிறுவனத்தில் கொடுத்த தேர்தல் விளம்பரங்களின் விவரங்களை வெளியிட்டிருக்கிறது கூகுள் டிரான்ஸ்பரன்சி அறிக்கை. கூகுளிலும் பாஜக 10,812 விளம்பரங்களுக்கு 11.6 கோடி ரூபாய் செலவழித்து, முதலிடத்தில் குத்த வைத்திருக்கிறது. அதற்கு அடுத்து நம்மை ஆச்சர்ய்யப்படுத்தும் வகையில் திமுக 266 விளம்பரங்களுக்கு 4.1 கோடி ரூபாய் செலவழித்து, இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்களாம். மூன்றாம் இடம் 231 விளம்பரங்களுக்கு 2.3 கோடி ரூபாய் செலவழித்த வொய்.எஸ்.ஆர் காங்கிரசுக்காம். காங்கிரஸ் கூகுளில் 355 விளம்பரங்களுக்கு 67.8 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறதாம். அதிமுக 35 விளம்பரங்களுக்கு 17.8 லட்சம் மட்டுமே செலவழித்திருக்கிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

indian political parties spend 20 crore rupee for 94000 advertisements in facebook

indian political parties spend 20 crore rupee for 94000 advertisements in facebook
Story first published: Saturday, May 4, 2019, 21:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X