டெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனமான லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான LIC Housing நிறுவனம் வீட்டுக் கடன் கொடுக்கும் தொழிலில் இருக்கிறது. அந்த நிறுவனத்தின் மார்ச் 2019 காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
LIC Housing நிறுவனத்தின் மார்ச் 2019 காலாண்டில் 694 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த மார்ச் 2018-ல் LIC Housing நிறுவனம் 594 கோடி ரூபாய் ஈட்டி இருந்தது.
மார்ச் 2018 நிகர லாபத்தை மார்ச் 2019 நிகர லாபத்துடன் ஒப்பிடும் போது, மார்ச் 2019-ல் சுமார் 17 சதவிகிதம் நிகர லாபம் அதிகரித்திருக்கிறது.
வட்டி வருமானம்
நிகர வட்டி வருமானம் கடந்த மார்ச் 2018-ல் ஈட்டிய 989 கோடி ரூபாயில் இருந்து மார்ச் 2019-ல் 1,201 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அதே போல நிகர வட்டி மார்ஜினும் மார்ச் 2018-ல் 2.44 சதவிகிதத்தில் இருந்து மார்ச் 2019-ல் 2.54 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.
வாராக் கடன்கள்
மார்ச் 2019 காலாண்டில் LIC Housing நிறுவனம் கொடுத்திருக்கும் மொத்தக் கடனில் 1.53 சதவிகிதம் தோராய வாராக் கடன்களாக இருக்கின்றனவாம். இந்த தோராய வாராக் கடன் கடந்த மார்ச் 2018-ல் வெறும் 0.78 சதவிகிதமாக இருந்தது கவனிக்கத் தக்கது. அதே போல மார்ச் 2019 காலாண்டில் LIC Housing நிறுவனத்தின் நிகர வாராக் கடன்கள் 1.07 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. மார்ச் 2018-ல் இந்த நிகர வாராக் கடன் வெறும் 0.43 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடன் வளர்ச்சி
ஒரு பக்கம் பிரச்னைகள் இருந்தாலும், மறு பக்கம் வியாபாரம் நன்றாக அதிகரித்திருக்கிறது. மார்ச் 2019 நிலவரப்படி LIC Housing நிறுவனம் 18,649 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கிறார்கள். இது மார்ச் 2018-ல் கொடுத்த 17,402 கோடி ரூபாயை விட சுமார் 7 சதவிகிதம் அதிகம்.
தனி நபர் கடன்
LIC Housing நிறுவனம் மார்ச் 2019-ல் கொடுத்த 18,649 கோடி ரூபாய் கடனில் 12,448 கோடி ரூபாய் கடன் தனி நபர்களுக்கு (தனி நபர்கள் வீடு கட்ட) கொடுத்திருக்கிறார்களாம். மார்ச் 2018-ல் தனி நபர்களுக்கு கொடுத்திருக்கும் கடனான 10,541 கோடி ரூபாய் உடன் ஒப்பிட்டால், மார்ச் 2019-ல் 18 சதவிகித வளர்ச்சி.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications