இனி நபார்டும், நேஷனல் ஹவுசிங் பேங்கும் மத்திய அரசு நிறுவனங்கள்..! ஒதுங்கிய ஆர்பிஐ..!

மும்பை: மத்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வந்த நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) மற்றும் நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard) ஆகிய இரண்டு நிறுவனத்தையும் 1470 கோடி ரூபாய்க்கு மத்திய அரசிடமே விற்று விட்டது ஆர்பிஐ.

இனி இந்த நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) மற்றும் நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard) நிறுவனங்களில், ஆர்பிஐ எந்த ஒரு அதிகாரத்தையும் செலுத்த முடியாது.

நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) நிறுவனத்தை முழுமையாக மத்திய அரசுக்கு தாரை வார்த்துக் கொடுக்க பங்குகள் மதிப்பீட்டின் படி 1,450 கோடி ரூபாய் விலை பேசி இருக்கிறார்களாம். அதே போல நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard) வங்கியின் பங்குகளையும் மதிப்பிட்டு 20 கோடி ரூபாய்க்கு விலை நிர்ணயித்தார்களாம்.

பரிமாற்றம்

பரிமாற்றம்

ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) நிறுவனத்தின் பங்குகளை கடந்த மார்ச் 19, 2019 அன்றே மத்திய அரசுக்கு பரிமாற்றம் செய்து விட்டதாம். கடந்த 26 பிப்ரவரி 2019-ல் நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard) பங்குகளை மத்திய அரசுக்கு பரிமாற்றம் செய்ததாம்.

மத்திய அரசின் கீழ்

மத்திய அரசின் கீழ்

தற்போது நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) மற்றும் நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard)ஆகிய இரண்டு அமைப்புகளின் 100 சதவிகித பங்குகளையும் மத்திய அரசு தான் வைத்திருக்கிறார்கள், என ரிசர்வ் வங்கி தன் அறிக்கையிலேயே சொல்லி இருக்கிறதாம்.

ஏன் இந்த மாற்றம்

ஏன் இந்த மாற்றம்

ஏன் திடீரென ரிசர்வ் வங்கி தனக்கு கீழ் இயங்கி வந்த நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) மற்றும் நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard) நிறுவனங்களை அரசுக்கு கொடுக்கிறது எனக் கேட்டால் நரசிம்மன் கமிட்டி அறிக்கையைச் சுட்டிக் காட்டுகிறர்கள்.

கமிட்டி பரிந்துரைகள்

கமிட்டி பரிந்துரைகள்

நரசிம்மன் கமிட்டியினர் அக்டோபர் 2001-ல் கொடுத்த பரிந்துரைகளில், ரிசர்வ் வங்கியின் நெறிமுரைப்படுத்தலின் கீழ் வரும் நிறுவனங்களை, ரிசர்வ் வங்கியே வைத்திருக்கக் கூடாது எனப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். அதோடு 'Harmonizing the role and operations of developing financial institutions and banks' என்கிற தலைப்பில் ரிசர்வ் வங்கியும் நரசிம்மன் கமிட்டி சொல்வதை ஆமோதிக்கிறார்கள். எனவே தான் இந்த அதிகாரப் பரிமாற்றம் என அரசுத் தரப்பும், ஆர்பிஐ தரப்பும் சேர்ந்தே ஆமோதிக்கிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+