திவாலான நிறுவனங்களுகே திவால் சட்டம்.. செயல்படுவதற்கு வாய்ப்புள்ள நிறுவனங்களை மூடுவது ஆபத்தே

டெல்லி : திவால் மசோதா மூலம் மீண்டும் செயல்படுவதற்கு வாய்ப்புள்ள நிறுவனங்களை மூடுவது மீண்டும் ஆபத்தானது என்று திவால் சட்ட மசோதாவை செயல்படுத்தும் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.சாஹூ தெரிவித்துள்ளார்.

வங்கிகள் தங்களிடம் கடன் பெற்ற நிறுவனங்களிடமிருந்து கடனை திரும்ப பெற இயலாத நிலையில், நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை எடுக்கத் தொடங்குகின்றன.

வங்கிகளில் நிறுவனங்கள் கடன் பெற்று அதை 90 நாட்களில் வட்டி அசலுடன் திரும்ப செலுத்தாவிட்டால் அது வாராக்கடனாக எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு குறிப்பிட்ட காலாக்கெடுவில் செலுத்தாத நிறுவனங்கள் மீது வங்கிகள் திவால் மசோதாவை பயன் படுத்த திவால் சட்டம் வழி வகை செய்கிறது.

180  நாட்கள் அவகாசம்

180 நாட்கள் அவகாசம்

இந்த நிலையில் நிறுவனங்கள் ஏன் கடனை கட்டவில்லை? இதற்கான காரணம் என்ன? அந்த நிறுவனம் மீண்டும் இயங்கக் கூடிய அளவு உள்ளதா? அப்படி மீண்டும் இயக்கக்கூடிய அளவில் இருந்தாலும் அதற்கான நிதி திரட்டக் கூடிய அளவில் உள்ளதா? உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த நிறுவனத்திற்கு 180 நாட்கள் கால அவகாசம் தரப்படும். இதன் பின்னரும் அந்த நிறுவனம் சரியான முறையில் இயக்க முடியவில்லை எனில் அந்த நிறுவனத்தின் மீது திவால் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும்.

தேவையான தகவல்கள் அளிக்க வேண்டும்

தேவையான தகவல்கள் அளிக்க வேண்டும்

மேலும் இந்த திவால் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கும் வங்கியானது, அதற்குரிய தேவையான தகவலை வங்கி அளிக்க வேண்டும். ஏனெனில் மீண்டும் இயக்கக் கூடிய ஒரு நிறுவனத்தின் மீது திவால் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது மிக ஆபத்தானது என்கிறார் சாஹூ.

தொடர்ந்து அதிகரிக்கும் வாராக்கடன்

தொடர்ந்து அதிகரிக்கும் வாராக்கடன்

கடன் பிரச்சனையால், கடனை தொடர்ந்து வங்கிகளுக்கு செலுத்த முடியாத நிறுவனங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த கடன் பிரச்சனையால் வங்கிகளுக்கும் வாராக் கடன் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் வங்கிகள் திவால் சட்டத்தினை பயன்படுத்த நினைக்கின்றன.

வாய்ப்புகளை இழந்து விடுகின்றன.

வாய்ப்புகளை இழந்து விடுகின்றன.

ஆனால் இவ்வாறு கடன் பிரச்சனையால் துவண்டு போன நிறுவனங்கள், மீண்டும் ஏதேனும் வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் தங்களது தவறுகளை புரிந்துக் கொண்டு மீண்டும் இயங்குவதற்கான வாய்ப்புகளை நிறுவனங்கள் இழந்து விடுகின்றன.

இயக்குவதற்கு சாத்தியமுள்ள நிறுவனங்களை மூடக்கூடாது

இயக்குவதற்கு சாத்தியமுள்ள நிறுவனங்களை மூடக்கூடாது

இதனால் இயக்குவதற்கு சாத்தியமுள்ள நிறுவனங்களை மூடக்கூடாது என்றும், அதுவும் முடியாத நிறுவனங்கள் திவால் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறுகிறார் சாஹீ. இதே ஒரு நிறுவனம் போட்டி உள்ளிட்ட சூழ்நிலை காரணமாக முடக்கப்பட்டிருந்தால், அந்த நிறுவனம் மீண்டும் இயங்கக்கூடிய நிலையில் மூடப்பட்டிருந்தால், அது மிக மோசமான பின் விளைவுகளை உள்ளடக்கியது என்றும் கூறியுள்ளார்.

நடவடிக்கைக்கு முன்பு அறிக்கை அளிக்கப்பட வேண்டும்

நடவடிக்கைக்கு முன்பு அறிக்கை அளிக்கப்பட வேண்டும்

திவால் நடவடிக்கை எடுக்கப்படும் முன்பு வங்கிகள் அறிக்கையை அளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால் தான் அந்த நிறுவனம் கடனை கட்ட எவ்வாறு முயற்சி எடுத்துள்ளது என்றும், அதோடு வங்கிகள் நிறுவனங்கள் மீது எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளன என்பதையும் அறிய முடியும் என்றும் சாஹூ கூறியுள்ளார்.

80 சதவிகிதம்  செயலிழந்த நிறுவனங்கள்

80 சதவிகிதம் செயலிழந்த நிறுவனங்கள்

இதன் அடிப்படையில் தற்போது 370-380 நிறுவனங்கள் கலைக்கப்படுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான நிறுவனங்கள் 80 சதவிகிதம் செயலிழந்த நிறுவனங்கள். உண்மையில் மீட்க எதுவும் இல்லை எனும் பட்சத்தில், அந்த நிறுவனத்ன் மீது திவால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சாஹூ குறிப்பிட்டார்.

195% நிறுவனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

195% நிறுவனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் 195 சதவிகித நிறுவனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 195 சதவிகிதம் நிறுவனங்கள் கடனை திருப்பி அளிக்கும் தகுதியை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+