டெல்லி : இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே முதலீடுகள் குறைந்தே காணப்பட்டன. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் படுத்தே விட்டன. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மார்ச் மாத்துடன் முடிவடைந்த காலாண்டில் மீண்டும் புத்துயிர் பெற துவங்கி விட்டன. கடந்த காலாண்டில் மட்டும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு 7 சதவிகிதம் அதிகரித்து 17,682 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாம்.
இந்த முதலீடு அதிகரிப்புக்கு காரணம் கடந்த காலாண்டில் அன்னிய முதலீடுகள் அதிகரிப்பே காரணம் என்று ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான குஷ்மன் & வேக்பீல்டு கூறியுள்ளது.
மேலும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் ரியல் எஸ்டேட் முதலீடு 16,528 கோடி ரூபாயாகவே இருந்தது. ஆனால் இது கடந்த மார்ச் காலாண்டில் மட்டும் 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரியல் எஸ்டேட் துறையில் அன்னிய முதலீடு அதிகரிப்பு
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் கடந்த மார்ச் காலாண்டில் மட்டும் அன்னிய நேரடி முதலீடு 81 சதவிகிதம் அதிகரித்து, 11,338 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 6,260 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சாதகமான முதலீட்டு கொள்கையே காரணம்
வெளி நாட்டு நிறுவனங்களின் இந்த முதலீட்டு பங்களிப்பு அதிகரிப்பே கடந்த காலாண்டில் இந்த முதலீட்டு அதிகரிப்புக்கு காரணம் என்கிறார் Cushman & Wakefield நிறுவனத்தின் தலைமை செயல் அதிகார் அன்சுல் ஜெயின். இந்த முதலீட்டுக்கு காரணம் ரியல் எஸ்டேட் துறையில் உள்ள சாதமான முதலீடு கொள்கையும் வெளிப்படைத்தன்மையும் தான் இந்த முதலீட்டை அதிகரித்துள்ளதாம்.
அலுவலகம், சில்லறை விற்பனை பிரிவுகளில் ஆர்வம்
குறிப்பாக அலுவலகம் மற்றும் சில்லறை விற்பனை பிரிவுகள் அதிக முதலீட்டை ஈர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதோடு வேர்ஹவுஸ் மற்றும் லாகிஸ்டிக்ஸ் சார்ந்த துறைகளும் முதலீட்டாளர்களுக்கு, முதலீட்டு வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளன.
சொத்துகள் வாரியாக குறைந்த முதலீடு
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், கடந்த காலாண்டில் சொத்துக்கள் வாரியாக முதலீடு செய்வது மிகக் குறைந்துள்ளது. கடந்த மார்ச் 2019-ம் காலாண்டில் மட்டும் 57 சதவிகிதம் குறைவாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு வெறும் 3,697 கோடி ரூபாய் மட்டுமே. இதுவே இதற்கு முந்தைய வருடம் இதே காலாண்டில் இது 8,518 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சொத்துகளின் பேரில் மறு நிதியளித்தல் குறைந்துள்ளது
இதற்கு காரணம் கடந்த 4-5 ஆண்டுகளில் இந்த சொத்து வகைக்கு மறுநிதியளித்தல் மற்றும் கடனளிப்பதற்கான பிரதான ஆதாரமாக இருந்த NBFC யின் பணப்புழக்கச் சிக்கல்களே காரணம் எனவும், குறிப்பாக இந்த பதிப்பு குடியிருப்புத் துறையில் மிகவும் பாதிக்கப்பட்டது எனவும் ஜெயின் கூறுகிறார்.
ஹோட்டல் துறைகளில் 3-மடங்கு அதிகரித்த முதலீடு
ஆனால் அதுவே அலுவலகத் துறையில் முதலீடுகள் 7,925 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 6,100 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்க தக்கது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஹோட்டல் துறைகளில் முதலீடு மூன்று மடங்கு அதிகரித்து 3,950 கோடி ரூபாய் வருவாயும் கிடைத்துள்ளது எனவும், இதுவே முந்தைய ஆண்டு இதே காலத்தில் 1,200 கோடி ரூபாயாக இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
4- மடங்காக அதிகரித்த ரீடெயில்
குறிப்பாக ரீடெயில் ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு 250 கோடி ரூபாயிலிருந்து அதிகரித்து 1,000 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே பன்முக பயன்பாட்டு திட்டங்களில் 110 கோடி ரூபாயிலிருந்து 350 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே தொழிற் பிரிவுகளில் 760 கோடி ரூபாயாகவும் (கிடங்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ்) , இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 350 கோடி ரூபாயையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசுக்கு வேண்டுகோள்
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் துறையில் நிலவி வரும் சாதகமான சூல் நிலைகளே இந்த முதலீட்டுக் காரணம் என்றும், இனி வரப்போக்கும் புதிய அரசும் இதுபோன்ற புத்துணர்வூட்டும் புதிய கொள்ளைகளை வகுத்து இந்தியாவில் முதலீட்டினை அதிகரிக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரின் வேண்டுகோளாகும்.


Click it and Unblock the Notifications