பறிபோகும் சேவை உரிமம்.. பரிதாபத்தில் ஜெட் ஏர்வேஸ்.. விமான துறை அமைச்சகம் அறிவிப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை யாரும் வாங்க முன் வராததையடுத்து, இந்த நிறுவனத்தின் சர்வதேச விமான உரிமத்தினை மற்ற நிறுவனங்களுக்கு அளிக்க மத்திய விமான துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

 

இந்த நிறுவனம் கடன் பிரச்சனையால் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி தனது முழு சேவையும் நிறுத்தி விட்டது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தை வாங்குவதற்காக எஸ்.பி.ஐ வங்கி குழு கொடுத்திருந்த காலாக்கெடுவும் முடிந்ததையடுத்து யாரும் வாங்க முன் வாராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மற்ற நிறுவனங்களுக்கு வழங்க முடிவு

மற்ற நிறுவனங்களுக்கு வழங்க முடிவு

இந்த நிலையில் இந்த விமான நிறுவனத்தின் சர்வதேச உரிமத்தினை மற்ற நிறுவனங்களுக்கு வழங்க மத்திய விமான அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஜெட் ஏர்வேஸ் இயக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக, வேறெந்த விமான நிறுவனங்கள் விண்ணபிக்கின்றனவோ அதன் மூலம் அந்தந்த விமான நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.

சிங்கப்பூர், தாய்லாந்து & மத்தியகிழக்கு- அதிக விருப்பம்

சிங்கப்பூர், தாய்லாந்து & மத்தியகிழக்கு- அதிக விருப்பம்

அதிலும் குறிப்பாக சிங்கப்பூர் தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே இருக்கும் வழித்தடங்களை விமான நிறுவனங்கள் ஆர்வத்துடன் கேட்பதாகவும் தெரிகிறது. ஆனால் இது ஒரு புறம் மற்ற விமான நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றாலும், மறுபுறம் ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க யாரும் முன் வராத நிலையில் மேலும் இது தேக்கத்தை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒதுக்கீடு தற்காலிகமானது தான்
 

ஒதுக்கீடு தற்காலிகமானது தான்

எனினும் இந்த ஒதுக்கீடு தற்காலிகமானது தான் என்றும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் செயல்படத் தொடங்கினால் அதன் உரிமங்கள் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஜெட் ஏர்வேஸ்சுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.

ஊழியர்களிம் ரோஜா திட்டம்

ஊழியர்களிம் ரோஜா திட்டம்

இதையடுத்து ஜெட் ஏர்வேஸ்சின் முன்னாள் ஊழியர்கள் நிர்வாக கட்டுப்பாட்டை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்று முன் வந்துள்ளனவாம். இதற்காக 3000 கோடி ரூபாயை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் ஊழியர்களின் ஒரு பகுதியினர் கூறியுள்ளனராம். ஆக இந்த ஊழியர் குழு கடன் வழங்கிய வங்கிகளான எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளை ஜெட் ஏர்வேஸ்சின் மறுமலர்ச்சி திட்டத்துடன் (ரோஜா திட்டம்) அணுகியுள்ளனராம்.

பல்வேறு திட்டங்கள் உள்ளது.

பல்வேறு திட்டங்கள் உள்ளது.

இந்த ஊழியர்கள் குழுவில் சங்கரன் பி, ரகுநாதன் தலைமையிலான வல்லுனர் குழுவில், பல்வேறு விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பல ஊழியர்கள், இதோடு ஊழியர் சங்கமும் இணைந்து பல்வேறு மறுமலர்ச்சி திட்டங்களை தீட்டிள்ளதாகவும், இதை பங்கு தாரர்களிடமும் கூறியுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். ஆக இந்த ரோஜா திட்டத்தின் மூலமாகவாவது ஏதேனும் நல்லது நடந்தால் சரியே என்கிறார்கள் ஆர்வலர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet Airways likely to lose its flying rights on foreign routes soon

In more trouble for debt-ridden Jet Airways, the government plans to start distributing its flying rights towards end of next week in case the airline is unable to find new owners.
Story first published: Sunday, May 5, 2019, 18:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X