டெல்லி : இந்தியாவில் தனியார் துறை வங்கிகளில் முன்னணி வங்கியான கோடாக் மஹிந்திரா வங்கி தனது மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு முடிவை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த நிலையில் இந்த வங்கியின் நிகர லாபம் 25 சதவிகிதம் அதிகரித்து, 1,408 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாம்.
இதுவே இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 1,124 கோடி ரூபாயாக இருந்ததாம். ஒட்டுமொத்தமாக, அதன் கடன்களின் வளர்ச்சியும் மார்ச் - மார்ச் மாதத்தில் 21 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம்.
இதே இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் முந்தைய ஆண்டில் 2,580 கோடி ரூயாபாயாக இருந்தது. இதுவே கடந்த ஜனவரி - மார்ச் 2019 வரையிலான காலாண்டில் 3,048 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் நிகர வட்டி விகித மார்ஜின் தொகையும் கடந்த மார்ச் காலாண்டில் 4.48 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இதர வருமானம்
இதுவே கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், இதர வருமானம் 1,270 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 1,151 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
வாராக்கடன் சற்று அதிகரிப்பு
இதுவே வாராக்கடனின் மதிப்பு மீண்டும் சற்று அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியுடன் மொத்த வாராக்கடனின் சொத்துக்களின் மதிப்பு 2.14 சதவிகிதமாகும். இதுவே இதற்கு முந்தைய டிசம்பர் காலாண்டில் 2.07 சதவிகிதமாகவே இருந்தது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 2.22 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
செயல்பாட்டு லாபம் (Operating profit)
இதுவே இந்த வங்கியின் செயல்பாட்டு லாபம் (Operating profit) 13 சதவிகிதம் அதிகரித்து 2,282.26 கோடி ரூபாயாகவும், இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 2017 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
சராசரியான சேமிப்பு டெபாசிட்
இதுவே சராசரியான சேமிப்பு குறித்தான டெபாசிட் விகிதம் 25 சதவிகிதம் அதிகரித்து 76,289 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இந்த டெபாசிட் தொகை இதற்கு முந்தைய ஆண்டில் 61,223 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
சராசரியான நடப்பு கணக்கு டெபாசிட்
இதுவே சராசரியான நடப்பு கணக்கு டெபாசிட் தொகை 14 சதவிகிதம் அதிகரித்து 30,926 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இதற்கு முந்தைய ஆண்டில் 27,024 கோடி ரூபாயாகவும் உள்ளது.
கடன் மூலம் பெறப்பட்ட ஒருங்கிணைந்த லாபம்
இந்த நிறுவனத்தின் கடன் தொகை மூலம் பெறப்பட்ட ஒருங்கிணைந்த லாபம் 13.91 சதவிகிதம் அதிகரித்து 2038.27 கோடி ரூபாயாகவும், இது இதற்கு முந்தைய ஆண்டில் 1,789.24 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த தனியார் வங்கியின் இயக்குனர் குழு 0.80 ரூபாய் டிவிடெண்டாகவும் அறிவித்துள்ளது கவனிக்கதக்கது.


Click it and Unblock the Notifications