செலவினங்கள் அதிகரிப்பால் நிகரலாபம் 5% வீழ்ச்சி.. ஐ.சி.ஐ.சி.ஐ அறிவிப்பு

பெங்களுரு : கடந்த மார்ச் மாத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி எதிர்பார்க்கப்பட்ட லாபத்தை விட 5 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது செலவினங்கள் அதிகரிப்பு காரணமாகவே இந்த நிகரலாபம் குறைந்துள்ளதாக இந்த வங்கி அறிவித்துள்ளது. அதே சமயம் வாராக்கடனால் சரிந்துள்ளதாகவும் இந்த வங்கி அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ள மொத்த வாராக்கடன்களின் விகிதம் 6.7 சதவிகிதமாகவும், இதற்கு முந்தைய டிசம்பர் காலாண்டில் 7.75 சதவிகிதமாகவும் இருந்துள்ளது. இதுவே கடந்த வருட தொடக்கத்தில் 8.84 சதவிகிதமாகவும் இருந்துள்ளது. இதே மோசமான கடனுக்கான ஒதுக்கீடு 17.7 சதவிகிதம் குறைந்து 5,451 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

மேலும் மொத்த செலவு தொகை 18.1 சதவிகிதம் அதிகரித்து 14,680 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கான வட்டிவிகிதமும் 17 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

நிகரலாபம் குறைவு

நிகரலாபம் குறைவு

இதுவே கடந்த மார்ச் மாத்தில் நிகரலாபம் 969 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 1,020 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே ஆய்வாளர்கள் மதிபீட்டின் படி 2,129 கோடி ரூபாயாக மதிப்பிட்டிருந்தனர்.

வாராக்கடன் குறைவு

வாராக்கடன் குறைவு

இதுவே வாராக்கடன் அளவு நிகர விகிதம் கடந்த மார்ச் காலாண்டில் 2.06% சதவிகிதமாக குறைந்துள்ளது. இதுவே டிசம்பர் 2018ல் இந்த கடன் விகிதம் 2.58% ஆக இருந்தது.

நிகர வட்டி வருவாய் அதிகரிப்பு

நிகர வட்டி வருவாய் அதிகரிப்பு

இதுவே நிகர வட்டி வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் 27% சதவிகிதம் அதிகரித்து 7,620 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த மார்ச் 2018ல் முடிவடைந்த காலாண்டில் 6022 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.
கடந்த நிகர வட்டி விகித மார்ஜின் தொகை 3.72 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய நிதியாண்டில் 3.40 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு கடன் வளர்ச்சி

உள்நாட்டு கடன் வளர்ச்சி

கடந்த மார்ச் 2019-ம் ஆண்டில் உள்நாட்டு கடன் வளர்ச்சி 17% அதிகரித்துள்ளது. இதுவே சில்லறை விற்பனையால் இயக்கப்படும் கடனுதவி கடன்கள் 22% வளர்ச்சியடைந்துள்ளது. எனினும் வாராக்கடன் குறைந்த போதிலும் கூட நிகரலாபம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் செலவினங்கள் மிக அதிகம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+