ஸ்தம்பித்து போன இந்தியா.. தேர்தலினால் அனைத்து துறைகளிலும் மந்த நிலையே

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் தேர்தலையடுத்து இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைத்து துறைகளும் மிக ஸ்தம்பித்து போய் இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட சேவை துறை குறித்து குறியீடு கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாம்.

 

இதற்கு காரணம் மத்தியில் நடந்து கொண்டிருக்கும் தேர்தல்களே காரணம் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட சேவை துறை குறித்து குறியீடு கடந்த செப்டம்பர் மாதம் முதல் இறங்குமுகமாகவே இருக்குகிறது. குறிப்பாக கடந்த மாதம் மார்ச் மாதத்தில் 52 புள்ளிகளாக இருந்த மதிப்பு குறியீடு, ஏப்ரல் மாதத்தில் 51 புள்ளிகளாக குறைந்துள்ளது.

தொடர்ந்து 50 புள்ளிகளுக்கும் மேலாகவே கடந்த 11 மாதங்களாகவே இருந்து வருகிறது. இதற்கு காரணம் தனியார் துறைகளில் பொருளாதாரம் மிகக் குறைந்த வளர்ச்சி கட்டத்தில் தான் உள்ளன என்றாலும். தேர்தல் அறிவித்த நாளிலிருந்த இந்த பிரச்சனை இன்னும் அதிகரித்துள்ளது.

சரியான சேவைதான் இல்லை

சரியான சேவைதான் இல்லை

எனினும் வெளி நாட்டு தேவைகள் அதிகரித்திருந்த போதிலும், இந்தியாவில் தேர்தல் காரணமாக இந்த தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையே நிலவி வருகிறது. மேலும் எந்தவொரு புதிய நிறுவனங்கள் குறித்த அறிவிப்பும் புதிய அரசுகள் வந்த பிறகுதான் அறிவிக்கும் என்றும், அதுவரை எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிகிறது.

தேர்தல் முடியட்டும் பார்க்கலாம்

தேர்தல் முடியட்டும் பார்க்கலாம்

மேலும் புதிதாக இந்தியாவை நோக்கி படையெடுத்து வரும் நிறுவனங்களும் தற்போது குறைந்துள்ளன. ஏனெனில் வரப்போகும் புதிய ஆட்சி எந்த அளவுக்கு அன்னிய முதலீடுகளூக்கு முக்கியத்துவன தரும், அன்னிய நிறுவனங்களுக்கான புதிய கொள்கை மாற்றங்கள் எப்படி இருக்கும். அதோடு இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவில் உள்ள நிறுவனங்கள் கூட தற்போது அவர்களின் நடவடிக்கையை நிறுத்தியுள்ளன. இதன் காரணமாக தொழில்துறையும், சேவை துறையும் முடங்கியுள்ளன.

கைகொடுக்கும் பணவீக்கம்
 

கைகொடுக்கும் பணவீக்கம்

மேலும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க இந்திய ரிசர்வ் வங்கி, தனது வட்டி விகிதத்தை இரு முறை மாற்றி அமைத்தது. இந்த நிலையில் இது முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் குறைவாக இருந்ததனால் சாத்தியமானது.

தேர்தலுக்கு பின் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்

தேர்தலுக்கு பின் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்

ஆக இந்த பணவீக்க அழுத்தங்கள் அவ்வாளவாக தொழிற் துறையிலும் சேவை துறையிலும் அவ்வளவாக எதிரொலிக்கவில்லை. எனினும் பொருளாதார வளர்ச்சி மிக குறைவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து வளர்ச்சிகளும் சற்று மந்தமான நிலையிலேயே காணப்படுகின்றன. எனினும் தேர்தல் முடிந்த பின்னர் புதிய ஆட்சி அமைந்த பிறகு புதியதொரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: india இந்தியா
English summary

India's April service sector growth at seven-month low dented by elections

India's services sector expanded at its slowest pace in seven months in April as some businesses postponed decisions and expansion plans until seeing results of the general election currently under way.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X