ஓலாவிற்கு வழிகாட்டியான ரத்தன் டாடா.. ஒலாவின் திட்டங்களை வடிவமைப்பதிலும் உதவி

டெல்லி: டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா ஓலா நிறுவனத்தில், மின்சார வாகன (Ola Electric Mobility) வணிகத்திற்காக முதலீடு செய்துள்ளாராம்.

இந்த முதலீடு மின்சார வாகன (Ola Electric Mobility) வணிகத்திற்காக செய்யும் ஒரு பகுதி முதலீடு என்றும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் எவ்வளவு முதலீடு என்பது குறித்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.

ஓலாவில் செய்யப்பட்டுள்ள ரத்தன் டாடாவின் முதலீட்டோடு, ஓலாவில் அவரின் முதலீடு வழிக்காட்டுதல்களும், ஆழமான அனுபவத்தையும், அறிவினையும் பயன்படுத்தி, ஓலா நிறுவனம் தான் தன்னுடைய லட்சியத்தினை அடைய ஏதுவாக இருக்கும் என்றும், அதற்கான சாத்தியக் கூறுகளும் இருப்பதாக அறிவித்துள்ளது.

ANI டெக்னாலஜியிலும் முதலீடு

ANI டெக்னாலஜியிலும் முதலீடு

மேலும் இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் டாடா நிறுவனம், ஏற்கனவே அதன் தாய் நிறுவனமான ANI டெக்னாலஜிஸ் நிறுவனத்திலும் கடந்த ஜீலை-2015ல் முதலீடு செய்திருந்தார்.

கடந்த மார்ச் மாதத்தில் ரூ.400 கோடி முதலீடு

கடந்த மார்ச் மாதத்தில் ரூ.400 கோடி முதலீடு

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ஓலா சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டை உயர்த்தியதாக அறிவித்திருந்தது. வரும் காலங்களில் பெட்ரோல் டீசல் விலைகள், இதனால் ஏற்படும் மாசுக் கட்டுப்பாடுகள் போன்றவற்றை தடுக்கும் வகையில் இந்த கார்கள் அமையும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மின்சார வாகனங்களுக்கு தேவை அதிகரிக்கும்

மின்சார வாகனங்களுக்கு தேவை அதிகரிக்கும்

அதுவும் அடுத்த ஆண்டு வரப்போகும் பி.எஸ்6 மாசு தரக் கட்டுப்பாட்டு வாரியம் கொண்டு வரப்போகும் புதிய விதி முறைகளால் மின்சார வாகங்களுக்கு தேவை அதிகரிக்கலாம் என்றும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ரத்தன் டாடா இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார வாகனங்கள் ஒவ்வொரு நாளும் வியத்தகு முறையில் உருவாகி வருகின்றன. இதனால் ஓலா மின்சார வாகன உற்பத்தியும், அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் இது சுற்று சூழல் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் நம்புகிறேன் எனவும் டாடா தெரிவித்துள்ளார்.

டாடா எங்களின் வழிகாட்டி

டாடா எங்களின் வழிகாட்டி

ஓலாவின் மின்சார சேவையை, தற்போது பல பைலட்டுகள், சார்ஜிங் தீர்வுகள், பேட்டரி மாற்றும் நிலையங்கள் மற்றும் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வாகனங்களை கொண்டும் இயங்குகிறது. இது குறித்து ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் கூறுகையில், டாடா தனிப்பட்ட முறையில் ஒரு வழிகாட்டியாகவும், ஓலா நிறுவனத்திற்கு பல ஆண்டுகளாக ஓலாவின் திட்டங்களை வடிவமைப்பதில் உதவியுள்ளார் என்றும், மேலும் எங்களுக்கு உத்வேகத்தையும் அளித்துள்ளார் என்றும் கூறுகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+