மும்பை: கடும் நிதி பிரச்சனையால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தை வாங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என எஸ்.பி.ஐ அறிவித்திருந்தது. இந்தவகையில் ஜெட் ஏர் வேஸ் நிறுவனத்தை வாங்க பிரிட்டிஷ் தொழிலதிபர் தொழிலதிபர் ஜேசன் அன்ஸ்வொர்த் விருப்பம் தெரிவித்துள்ளராம்.

மேலும் இந்த நிறுவனத்தை வாங்க ஜெட் ஏர்வேசஷ் , விரைவில் கடனளிப்பாளர்களின் தலைவரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு (எஸ்.பி.ஐ.) முறையாக அணுகி அறிக்கையை சமர்பிப்பதாகவும் கூறியுள்ளாராம்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அட்மாஸ்பியர் இன்டர்கான்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் தான் ஜேசன் அன்ஸ்வொர்த், இவர் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகும்.
மேலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் பற்றி, உள்நாட்டு பங்கு பரிவர்த்தனை நிறுவனங்கள், பிரிட்டிஷ் தொழில் முனைவோரின் கடன்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பை மேற்கோள் காட்டி, தற்காலிகமாக நியமிக்கப்பட்ட விமான நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்டதே அன்ஸ்வொர்த்துக்கு ஜெட் ஏர்வேஸை அறிமுகப்படுத்தியதாம்.
இந்த நிலையில் கடந்த மாதம் இது குறித்து ஜெட் ஏர்வேஸ்சை அணுகிய ஜேசன் அன்ஸ்வொர்த்திடம் ஜெட் ஏர்வேஸ் கூறியதாவது, இந்த விஷயத்தில் முறையான வழியில் ஏல ஒப்பந்தம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் முறையாக எஸ்பிஐ கேப்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் முறையாக ஈடுபடுமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாம்.
இது எந்த அளவுக்கு உண்மை சாத்தியம் என்று தெரியவில்லை. எனினும் இப்படி நடந்தால் நன்றாக இருக்கும். இந்திய நிறுவனங்கள் ஏதும் ஆர்வம் காட்டாத நிலையில் ஜெட் ஏர்வேஸுக்கு கிடைத்த நல்ல வாய்ப்புதான் இது. இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் வேலை வாய்ப்பினை பெறுவார்கள். இதோடு ஜெட் ஏர்வேஸ் கடன் பிரச்சனியிலிருந்தும் மீளும் வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications