ஒமஹா: உலகில் ஒரு மனிதர் பங்குச் சந்தைகளில் மட்டுமே முதலீடு செய்து, உலகின் 3-வது பெரிய பணக்காரராக வர முடியுமா..? என்கிற கேள்விக்கு, முடியும் என செயலில் சொல்லி, வாழும் உதாரணமாக இருக்கிறார் வாரன் பஃபெட் (Warren Buffett).
வாரன் பஃபெட் (Warren Buffett)எந்த அளவுக்கு உலகில் புகழ் பெற்றவரோ, அதே அளவுக்கு அவரின் பெர்க்ஷர் ஹதவே (Berkshire hathaway) நிறுவனமும் புகழ் பெற்றது. பெர்க்ஷர் ஹதவே (Berkshire hathaway)நிறுவனம் உலகில் எந்த பங்குச் சந்தையில், எந்த ஒரு பங்கை வாங்குகிறார்கள் என்றாலும், அந்த பங்கு அடுத்த சில நாட்களுக்கு விலை ஏற்றம் கண்டு கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு பெர்க்ஷர் ஹதவே (Berkshire hathaway)-ன் முடிவுகள் உலக பங்குச் சந்தைகளில் ஆளுமை கொண்டவை.

இப்போது வரை இந்த பெர்க்ஷர் ஹதவே (Berkshire hathaway) நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். வாரன் பஃபெட் (Warren Buffett)-ன் நீண்ட நாள் தோழர் மற்றும் பிசினஸ் கூட்டாளி சார்லி முங்கர் இன்னமும் பெர்க்ஷர் ஹதவே (Berkshire hathaway)-ன் துணைத் தலைவராக பதவியில் இருக்கிறார்.
வாரன் பஃபெட் (Warren Buffett)-க்கு வயது 88. சார்லி முங்கருக்கு வயது 95. இன்னும் எத்தனை ஆண்டுகள் இவர்களால் நிறுவனத்தை நடத்த முடியும். ஏற்கனவே வாரன் பஃபெட் (Warren Buffett), தன் அன்றாட அலுவலக வேலைகளில் இருந்து கடந்த ஜனவரி 2018-ல் முழுமையாக ஒதுங்கிவிட்டார்.
இப்போது உங்களுக்கு அடுத்து யார் என்கிற கேள்வியை பலரும் வாரன் பஃபெட் (Warren Buffett)-யிடமே கேட்கத் தொடங்கிவிட்டார்கள். சமீபத்தில் நடந்த பெர்க்ஷர் ஹதவே (Berkshire hathaway)நிறுவன ஆண்டுக் கூட்டத்திலும் இந்த கேள்வி எழுந்தது.
அதற்கு பெர்க்ஷர் ஹதவே (Berkshire hathaway) நிறுவனத்தின் இன்ஷூரன்ஸ் வியாபாரங்களைப் பார்த்துக் கொள்ளும், 67 வயதான அஜித் ஜெயின் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர் பெர்க்ஷர் ஹதவே (Berkshire hathaway)-ன் இயக்குநர் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். இவரோடு 57 வயது இளைஞர் க்ரெக் ஏபல்லும் (Greg abel) இருக்கிறார். பெர்க்ஷர் ஹதவே (Berkshire hathaway)-ன் இன்ஷூரன்ஸ் அல்லாத வியாபாரங்களை இவர் பார்த்துக் கொள்கிறார். இவரும் பெர்க்ஷர் ஹதவே (Berkshire hathaway)நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருக்கிறார்.
இவர்கள் இருவருமே பெர்க்ஷர் ஹதவே (Berkshire hathaway) நிறுவனத்தில் செய்தது ஒரு மிகப் பெரிய சாதனை தான் என கட்டம் போட்டுக் காட்டி இருக்கிறார். ஆனால் குறிப்பிட்டு இவர் தான் அடுத்த சிஇஒ எனச் சொல்லவில்லை. ஆக 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட மிகப் பெரிய அமெரிக்க நிறுவனத்தை நடத்த ஒரு இந்தியர் அங்கு தயாராக இருக்கிறார்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications