இரு நாட்டு பிரச்சனையால் உலகமே பாதிக்கிறது.. வாரன் பஃபெட் பொருமல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒமஹா: உலகத்தின் தலைசிறந்த முதலீட்டாளர்களில் முதன்மையானவரான வாரன் பஃபெட் பங்குசந்தை முதலீட்டில் முதன்மையானவர். இவர் தற்போது நிலவி வரும் அமெரிக்கா- சீனாவிடையேயான வர்த்தக போர் இந்த இரு நாடுகளை மட்டும் அல்லாது, சர்வதேச அளவில் அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரின் கூட்டு நிறுவனமான பெர்க்‌ஷர் ஹதவே இன்க் (Berkshire hathaway) நிறுவனம், சீனாவில் பல வணிகங்களையும் செய்து வருகிறது. அதோடு சீனாவில் பல சொந்த நிறுவனங்களும் உள்ளது. அதோடு மற்ற நிறுவனங்களில் முதலீடும் செய்து வருகிறது. இதில் ஆப்பிள் இன்க் உட்பட அடங்கும். இந்த நிறுவனத்தில் சுமார் 50 பில்லியன் டாலர் பங்கு உள்ளது என்றும் வாரன் பஃபெட் கூறியுள்ளார்.

ஆக நாங்கள் வர்த்தக யுத்தம் செய்தால் இந்த உலகெங்கும் பாதிக்கும். சிலர் இவ்வாறு பேசுவது மிக கிரேசியாகவும் உள்ளது என்றும் கூறியுள்ளார். அட என்னதான் நடக்குது?எதுக்காக மனுசன் இப்படி பேசுறார்ன்னு பார்க்கிறீங்களா? அட அதுதாங்க சீனா-அமெரிக்க இடையே நிலவிவரும் வர்த்தக ஒப்பந்த பிரச்சனை.

டேட்டா பேக்கு & வாய்ஸ் கால் பிளான் கட்டணங்கள் இனி சீராக உயரும்..! டெலிகாம் அனலிஸ்டுகள் எச்சரிக்கை..! டேட்டா பேக்கு & வாய்ஸ் கால் பிளான் கட்டணங்கள் இனி சீராக உயரும்..! டெலிகாம் அனலிஸ்டுகள் எச்சரிக்கை..!

சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் அதிகரிக்க போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். இதனால் அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுகமான வர்த்தக போர் நடைபெற்று வருகிறது.

போட்டி போட்டு கொண்டு உயர்த்தும் வரி

போட்டி போட்டு கொண்டு உயர்த்தும் வரி

இந்த இரு நாடுகளும் இறக்குமதி வரியை போட்டி போட்டு கொண்டு உயர்த்தி வருகின்றன. இதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் கடந்த டிசம்பரில் பேச்சு வார்த்தை நடத்தியது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.

மீண்டும் அதிகரிக்கக் கூடும்
 

மீண்டும் அதிகரிக்கக் கூடும்

அப்போது இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை இன்று முடிவுற்ற பாடாக இல்லை. இந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை முதல் குறிப்பிட்ட சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10ல் இருந்து 25% ஆக உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

5000 சீன பொருட்களுக்கான வரி அதிகரிக்கும்

5000 சீன பொருட்களுக்கான வரி அதிகரிக்கும்

இதன் மூலம் 5000 சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும். அதன் அடிப்படையில் சீன பொருட்களுக்கு 14,000 கோடி இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 10% இறக்குமதி வரி விதிக்கப்பட்ட நிலையில், ஜனவரி மாதமே மீண்டும் வரியை உயர்த்துவதாக டிரம்ப் கூறி இருந்தார். ஆனால் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக பேச்சு நடைபெற்றதால் வரி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இதுவரை இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படாததால், டிரம்ப் மீண்டும் வரி உயர்வை அறிவித்துள்ளார்.

வாஷிங்டனில் பேச்சு வார்த்தை

வாஷிங்டனில் பேச்சு வார்த்தை

இது சீனா, அமெரிக்கா இடையிலான வர்த்தக போரை மேலும் தீவிரமடைய செய்துள்ளது. இதனிடையே சீன அதிகாரிகள் நடப்பு வாரத்தில் வாஷிங்டனில் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Warren Buffett says trade war would be bad for the whole world

warren buffett said on Monday that a trade war between the United States and China would be "bad for the whole world.
Story first published: Monday, May 6, 2019, 21:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X