அமுலுடன் களமிறங்கும் ஆப்கானிஸ்தான் அணி.. உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு ஸ்பான்சர்

டெல்லி : பிரபல பால் நிறுவனமான அமுல் பால், நடைபெற உள்ள ICC உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்திலும், வேல்ஸ் நகரத்திலும் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரதான ஆதரவாளரான பால் அமுல் பால் நிறுவனம் இருக்கும் என்று அதன் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி கூறியுள்ளார்.

அமுல் பால் நிறுவனம் பால் விற்பனையை குஜராத் மாநிலத்திலத்திலும், பால் துணைப் பொருட்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகின்றது. இதோடு அயல் நாடுகளுக்கு 200 கோடி மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது.

அமுலுடன் களமிறங்கும் ஆப்கானிஸ்தான் அணி.. உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு ஸ்பான்சர்

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய ஆதரவாளராக அமுல் இருக்கும். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வேகமாக வளர்ந்து வரும் அணியாகும். ஆப்கானிஸ்தான் ஒரு வலுவான போட்டியாளராக இருப்பதாகவும் நாங்கள் நம்புகிறோம் எனவும் சோதி கூறியுள்ளார்.

உலக கோப்பை கிரிகெட் அணிகளுக்கு ஸ்பான்சர் செய்வது இது முதல் அல்ல, இது மூன்றாவது முறையாக தொடர்கிறது, ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் ஹாலந்து அணிகளுக்கு இந்த நிறுவனம் ஸ்பான்சர் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி ஆப்கானிஸ்தான் அணியிடம் கேட்டபோது அந்த அணி பேச மறுத்து விட்டதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. எனினும் இந்த நிறுவனம் ஸ்பான்சர் செய்வது தனது வருமானத்தில் 0.8% மட்டும் தானாம். அட ஆமாங்க கடந்த நிதியாண்டில், ஜி.சி.எம்.எம்.எஃப் நிறுவனம் அதன் வளர்ச்சி (Turnover) 13,1% அதிகரித்து, 33,150 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து இந்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சி கருவிகள் மீதும்ம் பயிற்சி செய்யும் இடங்களிலும், உலகப் கோப்பையிலும் அமுல் லோகோவுடன் இருக்கும் என்றும் சோதி கூறுகிறார்.

இது குறித்து ஆப்கானிஸ்தான் கிரிகெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி அசாத்துல்லா கான் கூறுகையில், இந்த வாய்ப்பு மிகப்பெரிய தருணம், இதற்காக அமுல் நிறுவனம் எங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+