சொகுசு கார் விலை சரிவு.. புதிய தொழில்நுட்ப செலவுகளால் லாபம் குறைந்தது.. பி.எம்.டபள்யூ

முனிச் : கார் ரேஸ் பிரியர்கள், செல்வந்தர்கள், சொகுசு கார் விரும்பிகள் என அனைத்து தரப்பினரையும் கவரும் கார் தான் பி.எம்.டபள்யூ. இந்த சொகுசு கார்களின் விலைகள் சரிவைக் கண்டதால் பி.எம்.டபள்யூ நிறுவனத்திற்கு வருமானம் 42 சதவிகிதம் குறைந்துள்ளது. இதனால் லாபம் 1.1 பில்லியன் யூரோவிற்கு குறைந்துள்ளதாம்.

மேலும் இந்த ஆடம்பர கார் தயாரிப்பில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி தயார் செய்ததில் மிகப் பெரிய நஷ்டத்தை கண்டுள்ளதுதாம் பி.எம்.டபள்யூ.

சொகுசு கார் விலை சரிவு.. புதிய தொழில்நுட்ப செலவுகளால் லாபம் குறைந்தது.. பி.எம்.டபள்யூ

இதனால் கடந்த மார்ச் மாதத்தில் பி.எம்.டபிள்யூ 14 பில்லியன் யூரோ சேமிப்பு திட்டத்தை அறிவித்ததாம். இதற்காக சில மாடல்களை முடக்குதல் மற்றும் வளர்ச்சி நேரத்தை குறைத்தல் உள்ளிட்ட பல செயல்களை உட்புகுத்தியதாம். இதன் காரணமாக வர்த்தகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.

மேலும் அனைத்து சட்டபூர்வ வழிமுறைகளாலும் ஐரோப்பிய ஆணையத்தின் மூலம் சுத்திகரிப்பு உமிழ்வு கார்களை இணைப்பதில் பி.எம்.டபிள்யூ இணைந்து போட்டியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதோடு கார் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு உண்டான செலவினங்கள் அதிகரித்துள்ளதும், முழு வாகனத் துறையையும் பாதிக்கக்கூடிய அளவில் உள்ளது என்றும், இதன் தாக்கத்தை தற்போது அனுபவித்தும் வருகிறோம் என்றும், இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரால்ட் க்ரூகர் கூறியுள்ளராம்.

மேலும் பல புதிய மாடல் கார்கள் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இந்த கார்கள் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் சந்தைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சந்தையில் மீண்டும் பி.எம்.டபிள்யூ தனது நஷ்டத்திலிருந்து மீளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த நிறுவனம் வட்டிக்கு முந்தைய வருமானம் 78 சதவிகிதம் குறைந்து 589 மில்லியன் யூரோக்களாக குறைந்துள்ளதாம். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ள வரி அதிகரிப்பு இதில் எதிரொலிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஏனெனில் இரு நாடுகளும் மாற்றி வரி அதிகரிப்பு செய்து வருவது பார்க்க முடிகிறது. இதனால் அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எஸ்.யு.விகளுக்கும் வரி அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விற்பனை குறையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாம்.

இதையடுத்து இந்தாண்டில் வாகன விற்பனை 6 - 8%இலக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், இது தற்போதைய நிலையில் 4.5 - 6.5% விற்பனை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+