பாதிக்கப்பட்ட வீடுகளை புதுபிக்க ரூ.1 டிரில்லியன் தேவை.. ஒடிசாவில் ஃபனியின் அட்டகாசம்

டெல்லி : ஒடிசா மாநிலம் ஃபனி புயலால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் பேர் வீடுகளையும் இழந்துள்ளனர். இதோடு பல பொது கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளனவாம். இந்த சேதத்தை சரி செய்ய ஒரு டிரில்லியன் ரூபாய் (14 பில்லியன் டாலர்) தேவைப்படும் என்று அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த ஃபனி புயலால் 5 லட்சம் மக்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் கடந்த வாரம் வீசப்பட்ட இந்த கடும் புயலால் சுமார் 14 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட வீடுகளை புதுபிக்க ரூ.1 டிரில்லியன் தேவை.. ஒடிசாவில் ஃபனியின் அட்டகாசம்

தற்போதைக்கு வீடு இழந்தவர்கள், தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு புணரமைக்கும் பணி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீசப்பட்ட இந்த கடும் புயல் மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியது. இதே போன்ற வலுவான புயல் கடந்த 1999 ஆம் ஆண்டும் தாக்கி இருந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட வீடுகளை புதுபிக்க ரூ.1 டிரில்லியன் தேவை.. ஒடிசாவில் ஃபனியின் அட்டகாசம்

மேலும் ஒடிசா மாநிலத்தில் அலுமினியம் பிளான்ட்கள், பவர் யூடிலிட்டீஸ், நிலக்கரி சுரங்கங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகளவில் உள்ளன. இந்த புயல் காராணமாக மேற்கண்ட தொழிற்துறைகளும் பாதிக்கப்படுவதோடு, பல கோடி ரூபாய் நஷ்டமும் ஏற்படுகின்றதாம். இது ஒவ்வொரு வருடமும் புயலால் பாதிக்கப்பட்டு நடக்கக் கூடிய விஷயமாகவே இருந்து வருகிறதாம்.

2011 கணகெடுப்பின் படி, ஒடிசாவில் மக்கள் தொகை 42 மில்லியனாக இருந்தது. ஆக இந்த மக்கள், நூற்றுக்கணக்கான மரங்களைப் பறித்து கொடுத்ததோடு, பல கட்டிடங்கள், சாலைகள் மற்றும் மின் இணைப்புகளை சேதப்படுத்திய புயலால் முற்றிலுமாக அழிந்துபோன அழிவின் முழு மதிப்பையும் மதிப்பிடுகின்றனர்.

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிறகு ஒடிசாவிற்கு 10 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள உடனடி உதவி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஏப்ரல் 29-ம் தேதி மாநிலத்திற்கு 3.41 பில்லியன் ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது கவனிக்கதக்கதாகும்.

இதோடு இந்த மாநிலத்தில் தோட்டக்கலைப் பயிர்கள், மிக பாதிக்கப்பட்ட பகுதியில் சுத்தமாக அழிக்கப்பட்டுவிட்டன, அவற்றை மீட்பதற்கான பல ஆண்டுகள் தேவைப்படலாம் என்றும், குறிப்பாக நெல் மற்றும் நிலக்கடலை பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன என்றும் கூறப்படுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+