மும்பை: Jet Airways நிறுவனத்தின் நிதி நெருக்கடி பற்றி புதிதாக ஒன்றும் சொல்லத் தேவை இல்லை. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக போராடி இப்போது நிறுவனத்தையே நடத்த முடியாமல் கடையை பூட்டி விட்டு சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு பண நெருக்கடி.
ஒரு பக்கம் கடன்காரர்கள் என்றால், இன்னொரு பக்கம் மாதச் சம்பளத்துக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர். இதில் மாதம் சில ஆயிரம் கமிஷனுக்கு வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான ஏழைகளும் அடக்கம்.

ஜெட் ஏர்வேஸ் பிரச்னைகளை டைப் செய்து, பத்திரிகையாளர்களின் கீ போர்டுகளே, தேய்ந்து விடும் அளவுக்கு ஜெட் ஏர்வேஸ் (Jet Airways)-ஐப் பற்றிச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இப்போது புதிதாக ஒரு விஷயத்தை முன்னெடுத்திருக்கிறார்கள் நம் ஜெட் ஏர்வேஸ் (Jet Airways)ஊழியர்கள். அந்த தைரியத்தை நினைத்து பாராட்டுவதா இல்லை அவர்களின் செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஏழ்மை நினைத்து வருந்துவதா எனத் தெரியவில்லை.
வரும் மே 10, 2019-க்குள் ஏதாவது ஒரு விமான சேவை நிறுவனம் ஜெட் ஏர்வேஸை வாங்க வேண்டும் அல்லது ஏதாவது முதலீட்டு நிறுவனம், ஜெட் ஏர்வேஸ் (Jet Airways)-க்குத் தேவையான பணத்தை முதலீடாகவோ அல்லது கடனாகவோ கொடுக்க வேண்டும். இது நடக்கும் எனச் சொல்லி வந்தது ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம்.
ஆனால் மே 10-க்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், புதிய முதலீடுகள் மற்றும் கடன்களுக்கு கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை என்பது தெரிய வந்துவிட்டது. எனவே அனைத்து இந்திய ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) ஊழியர்கள் சங்கம் மும்பை காவல் துறை ஆணையரிடம் ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) நிறுவனத்தின் ப்ரொமோட்டார்கள் தொடங்கி தற்போது இயக்குநர் குழுவில் இருப்பவர்கள் மற்றும் சில டாப் உயர் அதிகாரிகள் வரை, பலரின் வழக்கு தொடுத்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லி கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காததை புகாராக வைத்து, பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் பாஸ்போர்ட்களையும் முடக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
கிங் ஃபிஷ்ஷர் ஏர்லைன்ஸ் உரிமையாளர் விஜய் மல்லையா தன் நிறுவனத்தையும், ஊழியர்களையும் விட்டு தனக்கு என்ன என்று வெளிநாடுகளுக்கு ஓடிப் போனது போல, ஜெட் ஏர்வேஸ் உரிமையாளர் செய்து விடக் கூடாது. அதனால் தான் மும்பை காவலர்களிடம் முறையாக புகார் கொடுத்திருக்கிறோம்.
அப்படி ஒருவேளை மும்பை காவல் துறையினர், இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மறுத்தால், அல்லது தாமதப்படுத்தினால் கூட போதும், ஜெட் ஏர்வேஸ் (Jet Airways)-ன் ப்ரொமோட்டர் தொடங்கி, உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு வரும் வெளிநாடுகளுக்கு ஓடிப் போய்விடுவார்கள் எனச் சொல்லி இருக்கிறார்கள் ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) நிறுவன அனைத்திந்திய ஊழியர்கள்.


Click it and Unblock the Notifications