நாட்டின் ரப்பர் உற்பத்தி சரிவு - இயற்கை ரப்பர் இறக்குமதி அதிகரிப்பு

சர்வதேச அளவில் இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 6ஆவது இடத்திலும், ரப்பர் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் 2ஆவது இடத்திலும் உள்ளது. உலகின் ஒட்டுமொத்த இயற்கை ரப்பர் உற்பத்த

டெல்லி: பணப்பயிரான ரப்பர் உற்பத்தி உள்நாட்டில் குறைந்ததால் இறக்குமதி செய்யப்படும் இயற்கை ரப்பரின் அளவு கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் 24 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இயற்கை ரப்பர் பயன்பாடு அதிகரித்ததால் இறக்குமதியின் அளவு 5.82 லட்சம் டன்னாக உயர்ந்து. உலகில் ரப்பர் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது.

நாட்டின் ரப்பர் உற்பத்தி சரிவு - இயற்கை ரப்பர் இறக்குமதி அதிகரிப்பு

சர்வதேச அளவில் இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 6ஆவது இடத்திலும், ரப்பர் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் 2ஆவது இடத்திலும் உள்ளது. உலகின் ஒட்டுமொத்த இயற்கை ரப்பர் உற்பத்தியில் இந்தியா சுமார் 5 சதவிகித பங்கினை பெற்றுள்ளது. உலகின் ரப்பர் பயன்பாட்டில் நம் நாட்டின் பங்கு சுமார் 8 சதவிகிதமாக இருக்கிறது.

கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் நம் நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்திய சுமார் 6.42 லட்சம் டன்னாக இருந்தது. இதுவே முந்தைய 2017-18ஆம் நிதியாண்டில் சுமார் 6.94 லட்சம் டன்னாக இருந்தது. இது 2018-19ஆம் நிதியாண்டைக் காட்டிலும் சுமார் 7.5 சதவிதிதம் குறைவாகும். முன்னதாக 2018-19ஆம் நிதியாண்டில் உற்பத்தி 20 சதவிகித வரையிலும் குறையும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் நம் நாட்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி 6.91 லட்சம் டன்னாக அதிகரித்திருந்தது. அதற்கு முந்தைய 2015-16ஆம் நிதியாண்டில் இது 5.62 லட்சம் டன்னாக இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2016-17ஆம் ஆண்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி சுமார் 23 சதவிகிதம் கூடுதலாகும்.

உள்நாட்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி குறைந்து காணப்பட்டதால் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு வெளிநாடுகளில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யப்படுகின்றன. கடந்த 2015-16ஆம் நிதியாண்டில் இயற்கை ரப்பர் இறக்குமதி சுமார் 4.58 லட்சம் டன்னாக இருந்தது.

கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் 4.26 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது சுமார் 7 சதவிகிதம் குறைவாகும். அதேபோல் கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் ரப்பர் இறக்குமதி சுமார் 4.69 லட்சம் டன்னாக உயர்தது. முந்தைய ஆண்டைவிட இது சுமார் 10 சதவிகிதம் உயர்வாகும்.

அதேபோல், சென்ற 2018-19ஆம் நிதியாண்டில் சுமார் 5.82 லட்சம் டன் ரப்பர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய 2017-18ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது சுமார் 24 சதவிகிதம் அதிகமாகும். உள்நாட்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி குறைவு மற்றும் பயன்பாடு அதிகரித்ததே இறக்குமதி உயர்வுக்கு காரணமாகும்.

இயற்கை ரப்பர் உற்பத்தியில் இந்தியா 6ஆவது இடத்தில் இருந்தாலும் உள்நாட்டில் தேவை அதிக அளவில் உள்ளதால் ரப்பர் இறக்குமதியும் அதிகமாக உள்ளது. நம் நாட்டில் வாகன டயர் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் ரப்பரை இறக்குமதி செய்கின்றன. பொதுவாக மலேஷியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+