வாசிங்டன்: இத்தனை நாட்கள் இந்தியர்களுக்கு H1-B விசா கொடுப்பதில் விதிகளை மாற்றி விளையாடிக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது கட்டணங்களை உயர்த்தி விளையாட இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
அட ஆமாங்க. ட்ரம்பின் அரசு H1-B விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்தப் போகிறார்களாம். இந்த கூடுதல் கட்டணம் மூலம் வரும் பணத்தை, அமெரிக்க இளைஞர்களுக்கு டெக்னாலஜி துறையில் பயிற்சி கொடுக்கப் பயன்படுத்தப் போகிறார்களாம்.

இதை அமெரிக்க தொழிலாளர் துறைச் செயலர் அலெக்சாண்டர் அகோஸ்டா அதிகாரபூர்வமாக அமெரிக்க காங்கிரஸ் கமிட்டியிடம் இந்த விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். இந்த புதிய H1-B விசா கட்டண உயர்வால் எவ்வளவு டாலர் அமெரிக்காவுக்கு கூடுதலாக கிடைக்கும் என்கிற விவரங்களைச் சொல்லவில்லை. அதே போல் ஒரு விண்ணப்பத்துக்கு எவ்வளவு விலை உயர்த்தப் போகிறார்கள் என்கிற விஷயத்தையும் சொல்லவில்லை.
வழக்கம் போல, இந்தியாவின் ஏதோ ஒரு கிராமத்தில் படித்து முடித்துவிட்டு, டெக்னாலஜி அறிவை வைத்துக் கொண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்ல துடித்துக் கொண்டிருக்கும் இந்திய இளைஞர்களுக்கு சட்டங்கள், விதிகள், புதிய கோட்டா மாற்றங்களில் குடைச்சல்களைக் கொடுத்துக் கொண்டிருந்த ட்ரம்ப், இப்போது பணம் வழியாகவும் குடையத் தொடங்கி இருக்கிறார். அங்கு ஒரு டாலர் விலை ஏற்றினாலும் இங்கு 70 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டுமே..? பின் இந்தச் செய்தியைப் பார்த்தால் அமெரிக்க கனவோடு இருப்பவருக்கு பதறுமா..? பதறாதா..?
01 அக்டோபர் 2019 முதல் 30 செப்டம்பர் 2020 வரையான காலத்தில் அமெரிக்க இளைஞர்களுக்கு டெக்னாலஜி துறையில் பயிற்சி அளிக்க 160 மில்லியன் டாலர் பட்ஜெட் அறிவித்திருக்கிறார்கள். அதோடு கூடுதலாக H1-B விசாவுக்கான இந்தக் கூடுதல் கட்டணத்தையும் கூட்டி, இன்னும் அதிக அளவில் அமெரிக்க இளைஞர்களுக்கு டெக்னாலஜி துறையில் பயிற்சி கொடுக்கப் போகிறார்களாம்.
தற்போதைய கணக்குப்படி, ஒரு ஆண்டில் 60,000 (பொது) + 25,000 (அமெரிக்காவில் உயர் கல்வி படித்தவர்களுக்கான சிறப்புக் கோட்டா) = 85,000 H1-B Visa வழங்குகிறது அமெரிக்க அரசு. ட்ரம்ப் வந்த பின் 60,000 பொதுக் கோட்டா விசாவில் கூட அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தவர்களுக்கு இடங்களை ஒதுக்க H1-B விசா திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தார்கள். இதனால் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்திருக்க வேண்டிய கட்டாயம் வலுபெற்று வருவதால், அமெரிக்கா மீதான மோகமும் கொஞ்சம் குறையத் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆனால், அமெரிக்கா செல்ல இந்த 2019 - 20-ம் ஆண்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அப்படியே நேர் மாறாக இருக்கிறது. H1-B விசா-க்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 01, 2019 முதல் ஏப்ரல் 05, 2019-க்குள்ளேயே சில லட்சங்களுக்கு மேல் விண்ணப்பித்து தள்ளிவிட்டார்கள். இதற்குப் பெயர் தான் அமெரிக்க மோகம் குறைவாம்..? இன்னும் இந்த ட்ரம்ப் நம் இந்தியர்கள் மீது எத்தனை வெறுப்பு உமிழ்வாரோ தெரியவில்லை.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications