அலர்ட்டா இருங்க.. ஷாப்பிங் செய்யும்போது போன் பேசாதீங்க.. ஃபேர்பீல்ட் பல்கலைக்கழகம் எச்சரிக்கை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன் : நீங்கள் அதிகம் ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துபவரா? அப்படியென்றால் இதைப் படியுங்கள், அதிகளவு மொபை போனை பயன்படுத்துபவர்கள் அதாவது, போன் பேசுபவர்கள், மேசேஜ் செய்பவர்கள், சாட்டிங்க் செய்பவர்கள், பாட்டுக் கொண்டே வேலை செய்பவர்களா அப்படி என்றால் முதலில் இதைப் படித்து விட்டு போங்கள்.

 

இவ்வாறு அதிகளவு போனுடனே சுற்றுபவர்களுக்கு இது ஒரு அலர்ட் தான், ஒருவர் ஷாப்பிங் செய்யும் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அவர்கள் நினைத்த பொருட்களை விட நினைக்காத பொருட்களையும் ஷாப்பிங் செய்கிறார்களாம்.

அலர்ட்டா இருங்க.. ஷாப்பிங் செய்யும்போது போன் பேசாதீங்க.. ஃபேர்பீல்ட் பல்கலைக்கழகம் எச்சரிக்கை

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அவர்கள் வாங்கவேண்டும் என்று எண்ணிய பொருளை மறந்து விடுகின்றனர் என்று அறிவித்துள்ளது அமெரிக்காவில் உள்ள ஃபேர்பீல்ட் பல்கலைக்கழகம்.

சொகுசு கார் விலை சரிவு.. புதிய தொழில்நுட்ப செலவுகளால் லாபம் குறைந்தது.. பி.எம்.டபள்யூ

ஷாப்பிங் கடைகளுக்கு உள்ளே இருக்கும் போது மொபைல் போனை உபயோகப்படுத்தும் போது, மொபைல் ஃபோன் பயன்பாட்டின் தாக்கத்தை ஆய்வு செய்தது இந்த ஆய்வு.

இந்த ஆய்வில், ஒருவர் ஷாப்பிங் செய்யும்போது போன் பேசிக்கொண்டே செய்தாலோ, பாட்டுக் கேட்டுக் கொண்டு செய்தாலோ, அல்லது சாட்டிங் செய்து கொண்டு ஷாப்பிங் செய்தாலோ அவர்கள் அவர்களையும் அறியாமல் பல பொருட்களை வாங்குகின்றனராம். அதோடு வாங்க வேண்டிய பொருட்களையும் மறந்து விடுகின்றனராம்.

ஆனால் இவ்வாறு போனை உபயோகப்படுத்திக் கொண்டே ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களிடம் கேட்டால் அப்படி எதுவும் தோன்றவில்லையே என்றுதான் கூறுகிறார்களாம்.

இந்த ஆய்வு 231 பேரிடம் நடத்தப்பட்டதாம். இதில் அவர்களிடம் ஒரு லிஸ்டை கொடுத்து ஷாப்பிங் செய்ய சொல்லும் போது, அவர்கள் போன் பேசிக் கொண்டோ அல்லது ஏதேனும் ஒரு வகையில் மறந்து விடுகின்றனர். அவர்கள் ஷாப்பிங் செய்து முடிக்கும் போது அவர்களிடம் கொடுத்த லிஸ்டையும் பொருட்களையும் ஒப்பிட்டு பார்த்தால் ஏறக்குறைய அனைவரும் ஏதாவது பொருட்களை மறந்து விட்டுதான் வருகிறார்கள். இல்லையேல் லிஸ்டில் இல்லாத பொருட்களை வாங்குகிறார்களாம். ஆக இனியாவது ஷாப்பிங்க் செய்ய போக்கும் போதோ அலலது வேறு ஏதேனும் வேலையாக செல்லும் போதோ மொபைல் போனை உபயோக்கப்படுத்தாமல் இருப்பது நல்லதே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Using phone while shopping makes you spending more cost

Peoples who using their smart phone for making call, or texting, or music anything else while from shopping at a store are more likely unplanned purchases, and forget items they planned products.
Story first published: Tuesday, May 7, 2019, 16:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X