பெங்களுரு : சர்வதேச அளவில் சுரங்கத்தொழில் ஈடுபட்டு வரும் வேதாந்தா நிறுவனம் தனது உலோகம் மற்றும் சுரங்க நிறுவனங்களின் லாபம் கணிசமாக குறைந்து வருவதையடுத்து, கடந்த மார்ச் காலாண்டில் லாபம் 43.3 சதவிகிதம் சரிந்து, ரூ. 3,218 கோடியாக குறைந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டு இதே காலத்தில் இலாபம் 5,675 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 45.5% குறைந்து ரூ. 2,615 கோடியாக குறைந்துள்ளது. இதுவே வருவாய் 15.1% குறைந்து, 2019-ம் நிதியாண்டின் வருவாய் ரூ.23,092 கோடியாக இருந்துள்ளது. இதுவே இதற்கு முன்னர் வருவாய் ரூ.27,311 கோடியாக இருந்துள்ளது.

வட்டி, வரி, தேய்மானம் மற்றும் மாற்றியமைத்தல் (EBITDA) ஆகியவற்றின் வருவாய் 20.3 சதவீதம் குறைந்து ரூ. 6,135 கோடியாக இருந்தது.
இதற்கு காரணம் ஒரு ரூபாயின் மதிப்பும் மறுபுறம், அலுமினியம் ஜிங்க் வணிகத்தில் குறைந்ததும் ஆகும். அதே நேரம் மார்ச்-31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த கடன் 66,225 கோடி ரூபாயாக இருந்தது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் சர்வதேச அளவில் ஜிங்க் மூலம் 22% லாபம் அதிகரித்து ரூ.1002 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.822 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கத்தக்கது.
இதுவே இந்தியாவில் காப்பர் மற்றும் ஜிங்க் உலோகங்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது சர்வதேச அளவில் காப்பர் மற்றும் ஜிங்க் விலையில் எதிரொலித்துள்ளது. குறிப்பாக ஜிங்க் 14 சதவிகிதமும், காப்பர் 4.7 சதவிகிதமும் விலை அதிகரித்துள்ளன.
இதுவே 2020 நிதியாண்டில் எமது நிறுவனம் துரிதமாக செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் இதன் லாபம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிக பங்கு தாரர்களையும் பெற முடியும் என்றும் வேதாந்தா நிறுவனத்தின் நிறுவனர் நவீன் அகர்வால் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications