சென்னை: அட்சய திருதியை நன்னாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள தங்க நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று மட்டும் சுமார் 2000 கிலோ மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் தங்கக் காசுகளை வாங்கியுள்ளதாக தங்க நகை வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25 சதவிகிதம் தங்க நகைகள் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வருகிற திருதியை திதியையே 'அட்சய திருதியை' என்று அழைக்கின்றனர். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் பல மடங்காக பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை மே 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாக உள்ளதால் நகை விற்பனை 30 சதவிகிதம் அதிகரிக்கும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தீபாவாளி, மகரசங்கராந்தி, புத்தாண்டு என நல்ல நாட்களில் தங்கம் வாங்குவது மக்களின் வாடிக்கை. அட்சய திருதியை நாளிலும் தங்கம் வாங்குவார்கள். இந்த நாளில் தங்கம் வாங்கினால் அதிக அளவில் தங்கம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. இதனை வைத்து நகைக்கடைகளில் மிகப்பெரிய அளவில் வியாபாரம் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் தங்க நகை மற்றும் தங்கக் காசுகள் விற்பனை அதிகரித்தவண்ணம் உள்ளது.
2011 ஆம் ஆண்டு அட்சய திரிதியை நாளில் 700 கிலோ தங்கம் விற்பனை ஆன நிலையில், 2012 ஆம் ஆண்டு அதன் விற்பனை 720 கிலோவாக அதிகரித்திருந்தது. 2013ல் 1,100 கிலோவும், 2014 ஆண்டு 2000 கிலோவும் தங்கம் விற்பனையானது. 2015ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் அட்சய திருதியை விற்பனை நடைபெற்றது. முதல்நாளில் 1,100 கிலோ, இரண்டாம் நாளில் 2,100 கிலோ என இரண்டு நாட்களில் மட்டும், 3,200 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது.
2016,2017ஆம் ஆண்டுகளில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவைகளால் தங்கம் விற்பனை டல்லடித்தது. கடந்த 2018ஆம் ஆண்டில் இதே நாளில் சுமார் 2000 கிலோ தங்கம் விற்பனையானது. அதே போல் இந்த ஆண்டும் அட்சய திருதியை நாளில் தங்க நகை விற்பனை அதிக அளவில் இருக்கும் என்று நகை விற்பனையாளர்கள் எதிர்பார்த்தனர்.

தற்போது லோக்சபா தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களைக் கவர்வதற்காக அரசியல் கட்சிகளின் தலவர்கள் மற்றும் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தங்கக் காசுகளை அரசியல் கட்சியினர் வாங்கிச் சென்றனர். மேலும், பெரும்பாலான நகைக்கடைகளில் 25 சதவிகிதம் வரையிலும் தள்ளுபடி அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கக் காசுகளையும் நகைகளையும் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.
நேற்று காலை 6 மணிக்கே தமிழ்நாடு முழுவதும் நகைக்கடைகள் திறக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. மற்ற நாட்களைவிட அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை சுமார் 30 சதவிகிதம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை கடந்த 3 மாத உச்ச விலையைத் தொட்டது.
சாதாரண நகைக் கடைகளில் கூட்டம் சிறிதளவே காணப்பட்டாலும், மிகப் பெரிய தங்க வைர நகைக்கடைகளில் விற்பனை அதிக அளவில் இருந்து. குறிப்பாக திருமண நகைகள் வாங்க கூட்டம் அலைமோதியது என்று அகில இந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் என். ஆனந்த பத்மநாபன் கூறினார்.
நகை விற்பனையாளர்கள் எதிர்பார்த்தது போலவே அட்சய திருதியை நாளிலும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 2000 கிலோ தங்க நகை மற்றும் தங்கக் காசுகள் விற்பனையாகின. சென்னை , தியாகராய நகரில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் காலையிலேயே திறக்கப்பட்டு நகை வியாபாரம் களைகட்டியது.
சென்னையில் நகைக்கடைகளில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கூட்டம் அலைமோதியதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஏராளமானவர்கள் தங்க நகைகள் மற்றும் தங்கக் காசுகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அனைத்து நகைக்கடைகளிலும் பெண்களே அதிக அளவில் காணப்பட்டனர்.
அட்சய திருதியை நாளில் நகை விற்பனை நாங்கள் எதிர்பார்த்த அளவைவிட சற்று கூடுதலாகவே இருக்கும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அதைவிட சற்று கூடுதலாகவே விற்பனையாகின என்று இந்திய தங்கக் கொள்கை மையத்தின் தலைவர் சுதீஷ் நம்பியாத் (Sudheesh Nambiath) தெரிவித்தார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25 சதவிகிதம் நகைகள் அதிகம் விற்பனையானதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வட மாநிலங்களிலும் பெரும்பாலான நகைக்கடைகளில் நகைகள் வாங்க கூட்டம் அலைமோதியது. குறிப்பாக இளைஞர்கள், இல்லத்தரசிகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் போட்டி போட்டு நகைகளை வாங்கிச் சென்றனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications