டிராக்டரில் பிடித்து கட்டுமான துறையில் விட்டாச்சு.. எஸ்கார்ட்ஸ் மொத்த நிகரலாபம் 7.8% அதிகரிப்பு

டெல்லி : கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான உபகரணங்கள் மற்றும் டிராக்டர் உற்பத்தியாளர்களில் முன்னணி நிறுவனமான எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் நிகரலாபம் 7.8% அதிகரித்து, ரூ.121.4 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த காலாண்டில் டிராக்டர்கள் விற்பனை 6.7% அதிகரித்து 25136 யூனிட்களாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கட்டுமான உபகரணங்கள் பிரிவில் 5.6% குறைந்து 1455 யூனிட்டுகள் குறைந்துள்ளன.

டிராக்டரில் பிடித்து கட்டுமான துறையில் விட்டாச்சு.. எஸ்கார்ட்ஸ் மொத்த நிகரலாபம் 7.8% அதிகரிப்பு

இதன் விளைவாக கடந்த மார்ச் காலாண்டில் மொத்த வருவாய் 13.6% அதிகரித்து 1631.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே நேரம் இரயில் தொழிலில் மூலம் கிடைத்த லாபம் 36% அதிகரித்து 103.5 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு இலாபம், அதாவது வட்டி விகிதம், வரி, தேய்மானம் மற்றும் கடன்தீர்வுகள் இதற்கு முந்தைய லாபம் 9.2% அதிகரித்தது ₹ 189.8 கோடி ரூபாயாக இருந்துள்ளது. அதே சமயம் செயல்திறன் விளிம்பு (margin) 11.6% ஆக இருந்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து, எஸ்கார்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான நிஹில் நந்தா கூறுகையில், இயந்திர தொழில்நுட்பம் மற்றும் புதுமையான விவசாய தீர்வுகளை நன்கு ஆதரிக்கப்படும். உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பான இரயில் போக்குவரத்திற்கான தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான பொறியியல் தீர்வுகளை வழங்குவதற்கும் இந்த நிறுவனம் உறுதி கொண்டுள்ளதாம்.

மேலும் புதிய தொழில் நுட்பத்தில் பொருட்களை உருவாக்கி, உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் விரிவுபடுத்தி வருகிறோம். எங்களின் வளர்ந்து வரும் தொழில்களான பயிர் தீர்வுகளுக்கான வாடகை எந்திரங்கள் மற்றும் பரந்த பயன்பாட்டிற்காக டிராக்டர்களுக்கான ஒருங்கிணைப்பும், இது நவீன வேளாண்மை நடைமுறைகளுக்கும் விவசாயிகளுக்கும் வலுவான உந்துதலை வழங்கும் என்றும் நந்தா தெரிவித்துள்ளார்.

அதோடு டிராக்டர் கோரிக்கை மற்றும் கட்டுமான உபகரணங்கள் வணிகத்தில் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை இருப்பினும், மதிப்பீடுகளில் எதிர்பார்க்கப்படும் நிலைப்பாடுகளில் பெரும்பாலானவை கைப்பற்றப்பட்டுள்ளன என மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் அனலிஸ்ட்கள் டீப் ஷா மற்றும் ஜெய்ஸ் காந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

2019 - ம் ஆண்டு மார்ச்- 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் டெல்லியை அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் மொத்த வருவாய் 23.5 % அதிகரித்து 6196.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நிகர லாபம் 404.9 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் பாதியில் டிராக்டர் விற்பனையில் வலுவான வளர்ச்சி காணப்பட்டதே காரணம் என்கிறது இந்த நிறுவனம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+