டெல்லி : கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈரானிடம் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி 57 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஈரானிடம் இருந்து சீனாவுக்கு அடுத்து, அதிக அளவில் இந்தியா தான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது. இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடை காரணமாக 6 மாதங்களுக்கு மட்டும் எண்ணெய் வாங்க அனுமதி அளிக்கப்பட்டது.

நடப்பு மாதத்தில் இருந்து அந்த சலுகையை அமெரிக்கா நீட்டி முடியாது எனவும் ரத்து செய்ததால், ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலை தற்போது நிலவி வருகிறது.
இந்தியா கடந்த ஏப்ரல் மாதம் நாளொன்றுக்கு 2,77,600 பேரல்கள் வீதம் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதாம்.
இது முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 57 சதவிகிதம் குறைவாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டும் இறக்குமதி 45 சதவிகிதம் குறைந்து 304,500 bpd இறக்குமதி செய்யப்பட்டது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் 552,000 bpd ஆக இருந்தது குறிபிடத்தக்கது.
எப்படியோ இந்தியா தற்போது மதில் மேல் பூனையாக நின்று கொண்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஈரானிடம் எண்ணெய் வாங்குவது குறைத்தால் இந்தியாவில் விலை அதிகரிக்கும், இல்லையேல் இன்னும் மற்ற நாடுகளிடம் கையேந்த வேண்டி இருக்கும். இதுவே அமெரிக்கா ஈரான் பிரச்சனையை ஏன் மற்ற நாடுகளிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரியவில்லை.
இது இப்படி இருக்கும் நிலையில் ஒ.என்.ஜி.சி எண்ணெய் உற்பத்தியும் 6 சதவிகிதம் குறைந்துள்ளதாம்.
கடந்த நிதியாண்டில் 2018- 2019 ஒ.என்.ஜி.சி கச்சா எண்ணெய் உற்பத்தி 6% குறைந்து 1.96 கோடி டன்னாக இருக்கிறதாம். இது முந்தைய ஆண்டில் இதே காலத்தில் 2.08 கோடி டன்னாகவும் இருந்ததாம். இதுவே கடந்த நிதியாண்டில் தனியார் நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தியே 96 லட்சம் டன் தானாம். இது 2015 - 2016-வுடன் ஒப்பிடும்போது 14% குறைவாம். எப்படியோ இரண்டு பக்கமும் வசமா மாட்டிக்கிட்டு முழுச்சிட்டு இருக்கு. இதனால அவஸ்தை படுவது என்பதோ மக்கள் தான்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications