டெல்லி: ட்ஜிட்டல் உள்கட்டமைப்புகளை வழங்கும் டாடா கம்யூனிகேஷன்ஸ் (Tata Communications) நிறுவனத்தின் மார்ச் 2019 காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த மார்ச் 2019- காலாண்டில் நஷ்டம் 198.8 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது. அதற்கு ஒரு வருடத்துக்கு முந்தைய மார்ச் 2018 காலாண்டில் டாடா கம்யூனிகேஷன்ஸ் (Tata Communications) நிறுவனத்தின் காலாண்டு நஷ்டம் வெறும் 120.9 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது.

ஆக இப்போது மார்ச் 2019 காலாண்டில் 64 சதவிகிதம் அதிக நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது நம் டாடா கம்யூனிகேஷன்ஸ் (Tata Communications). இந்த 198 கோடி ரூபாய் என்பது நிகர நஷ்டம் இல்லை, அது மார்ச் 2019 காலாண்டில், வரிக்குப் பிறகான லாபம் (Profit After Tax) மட்டும் 198.8 கோடி ரூபாயாக இருக்கிறது. இதில் மேலும் கழிக்க வேண்டிய செலவுகள், தள்ளுபடிகளை எல்லாம் ஒதுக்கினால் நஷ்டம் இன்னும் அதிகரித்திருக்குமாம். நல்லவேளையாக மற்ற செலவுகளும், ப்ரொவிஷன்களும் அதிகம் இல்லாமல் போனதாம்.

மார்ச் 2019-ல் டாடா கம்யூனிகேஷன்ஸ் (Tata Communications) நிறுவனத்தின் மையச் செயல்பாடுகளில் இருந்து சுமார் 4,243 கோடி ரூபாய் வருவாயாக ஈட்டி இருக்கிறார்கள். இது கடந்த மார்ச் 2019-ஐ விட ஐந்து சதவிகிதம் அதிகம்.
கடந்த முழு 2018 - 19 நிதி ஆண்டுக்கும் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நஷ்டம் 82.37 கோடியாக குறைந்திருக்கிறதாம். மார்ச் 2018-ல் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நஷ்டம் சுமார் 328.6 கோடி ரூபாயா இருந்ததாம்.
சரி டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் எடுத்துக் கொண்டால் 16,524 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த மார்ச் 2018-ஐ விட 1.5 சதவிகிதம் குறைவாம். இந்த நஷ்டம் கூட வாய்ஸ் பிசினஸால் தான் ஏற்பட்டதாம். ஆனால் டேட்டா பிசினஸில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார்களாம். அதனால் தான் வருவாய் சரிவு வெறும் 1.5 சதவிகிதமாக இருக்கிறது எனவும் விளக்குகிறார்கள்.

இனி வரும் காலாண்டுகளில் டாடா கம்யூனிகேஷன்ஸ் (Tata Communications), தான் வளர்ந்து வரும் டேட்டா பிசினஸை வைத்துக் கொண்டு லாபத்தை நோக்கிப் பயணிக்கும் என்கிறார் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் வினோத் குமார்.
முழு முதலாக இந்திய டெலிகாமில் பிசினஸ் செய்யும் ஏர்டெல், வோடாஃபோன் போன்ற நிறுவனங்களே நஷ்டங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, நம் டாடா கம்யூனிகேஷன்ஸ் தன்னால் முடிந்த வரை 2018 - 19 நிதி ஆண்டுக்கான நஷ்டத்தை 82.37 கோடி ரூபாய்க்கு இழுத்துப் பிடித்ததே பெரிய விஷயம் என்கிறார்கள் டெலிகாம் துறை சார்ந்த அனலிஸ்டுகள்.


Click it and Unblock the Notifications