TCS உலகின் 3-வது பெரிய ஐடி நிறுவனம் ஆகலாம்..! டி எக்ஸ் சி (DXC) நிறுவன முடிவுக்காக வெயிட்டிங்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் நம்பர் 1 மென்பொருள் தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), உலகின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமாக இடம் பிடிக்கப் போகிறதாம். ஒரு நிதி ஆண்டில் யார் அதிக வருவாய் ஈட்டுகிறார்கள் என்கிற அடிப்படையில் இந்த இடங்களைப் பட்டியலிடுகிறார்கள்.

தற்போது உலகின் முதல் மூன்று இடங்களில் முதலாவதாக ஐபிஎம் (IBM - International Business Machine) இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் இந்த அமெரிக்க நிறுவனம் 79.59 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டி, அசைக்க முடியாத இடத்தில் தன் முதலிடத்தை வைத்திருக்கிறது.

ஐபிஎம்-மைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் அக்செஞ்சர் (Accenture) இருக்கிறார்கள். இவர்கள் கடந்த நிதி ஆண்டில் 39.57 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வருவாய் ஈட்டி இருக்கிறார்கள்.

டிராக்டரில் பிடித்து கட்டுமான துறையில் விட்டாச்சு.. எஸ்கார்ட்ஸ் மொத்த நிகரலாபம் 7.8% அதிகரிப்பு டிராக்டரில் பிடித்து கட்டுமான துறையில் விட்டாச்சு.. எஸ்கார்ட்ஸ் மொத்த நிகரலாபம் 7.8% அதிகரிப்பு

3-வது இடம்

3-வது இடம்

மூன்றாவது இடத்தில் இருக்கும் டி எக்ஸ் சி (DXC)கடந்த நிதி ஆண்டில் (2018 - 19)-ல், 20.91 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் வருவாயாக ஈட்ட வேண்டும். அப்படி ஈட்டினால் தான் மீண்டும் தன்னுடைய உலகின் நம்பர் 3 இடத்திலேயே சுகமாக உட்கார்ந்திருக்கலாம். இல்லை என்றால் இந்தியாவின் டிசிஎஸ் (TCS) தன் 2018 - 19 நிதி ஆண்டில் ஈட்டி இருக்கும் 20.91 பில்லியன் அமெரிக்க டாலருடன் இந்த மூன்றாம் இடத்தைப் பிடித்துக் கொள்வார்கள்.

டி எக்ஸ் சி (DXC)-ஆல் முடியுமா..?

டி எக்ஸ் சி (DXC)-ஆல் முடியுமா..?

பல அனலிஸ்டுகளும் டி எக்ஸ் சி (DXC) நிறுவனத்தால் தன் கடைசி காலாண்டில் நல்ல வருவாய் வளர்ச்சியைக் காட்ட முடியாது. எனவே கடந்த நிதி ஆண்டில் டி எக்ஸ் சி (DXC) நிறுவனத்தின் 20.91 பில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பெரிய வருவாய் இலக்கைத் தொடுவது சிரமம் தான் என்கிறார்கள். அதற்கு சில காரணங்களையும், கடந்த கால பிசினஸ் வளர்ச்சிகளையும் கணக்கு காட்டுகிறார்கள் அனலிஸ்டுகள்.

9 மாத வருவாய்

9 மாத வருவாய்

இதற்குக் காரணமாக, கடந்த 2018 - 19-ன் முதல் ஒன்பது மாதங்களில் டிசிஎஸ் (TCS) நிறுவனம், டி எக்ஸ் சி (DXC) நிறுவனத்தை விட கூடுதலாக வருவாய் ஈட்டி இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். ஏப்ரல் 2018 முதல் டிசம்பர் 2018 வரையான ஒன்பது மாதங்களில் டிசிஎஸ் (TCS)15.52 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வருவாய் ஈட்டி இருக்கிறார்கள். அதே ஒன்பது மாதங்களில் நம் டி எக்ஸ் சி (DXC)15.42 பில்லியன் அமெரிக்க டாலரை மட்டுமே ஈட்டி இருக்கிறார்கள்.

கார்ப்பரேட் மாற்றங்கள்

கார்ப்பரேட் மாற்றங்கள்

அதோடு டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில், லட்டு போல நடந்த நல்ல கார்ப்பரேட் மாற்றங்களையும் மற்றும் டி எக்ஸ் சி (DXC) நிறுவனத்தில் நடந்த ரண கொடூரமான கார்ப்பரேட் மாற்றங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஒப்பிட்டால், டி எக்ஸ் சி (DXC)-க்கு இந்த முறை 3-வது இடம் சாத்தியமில்லை என்கிறார்கள் அனலிஸ்டுகள். அதோடு அமெரிக்க அரசுத் துறையில் இருந்து வர வேண்டிய 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் வியாபாரத்தையும், வெரிடாஸ் கேப்பிட்டல் என்கிற பிரைவேட் ஈக்விட்டி நிறுவனத்துக்கு டி எக்ஸ் சி (DXC) நிருவனம் விற்றதையும் அனலிஸ்டுகள் அடிக்கோடிடுகிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

tcs may fetch the world third biggest it company title from dxc

tcs may fetch the world third biggest it company title from dxc
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X