டெல்லி : டாடா குழுமத்தை சேர்ந்த டைட்டன் நிறுவனம் தனது நான்காவது காலாண்டு முடிவை வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் முடிவடைந்த காலாண்டில் நிகரலாபம் 14.41% அதிகரித்து, ரூ. 348.30 கோடி யாக அதிகரித்துள்ளது.
இதுவே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 2017 - 2018-ம் நிதியாண்டில் இதே காலப்பகுதியில் இந்த நிறுவனம் 304.41 கோடி ரூபாய் நிகர இலாபமாக ஈட்டியுள்ளது.
இதுவே மொத்த வருவாய் ரூ. 4,945.06 கோடியாக அதிகரித்துள்ளது. இதே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில், 4,125.69 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது என டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிகரலாபம்
மேலும் கடந்த 2018 - 2019 நிதியாண்டில் டைட்டன் நிறுவனம் நிகரலாபமாக 1,388.65 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 2017 - 2018ல் 1,101.91 கோடி ரூபாயையும் ஈட்டியுள்ளது. கவனிக்கதக்கதாகும்.
மொத்த வருவாய்
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் மொத்த வருவாய் 2017 - 2018ஐ விட ரூ.16,244.81 கோடியிலிருந்து ரூ.19,961.46 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் 2018 - 2019ல் வலுவான வருவாய் மற்றும் அனைத்து முக்கிய பிரிவினரிடையே இலாப வளர்ச்சியுடனும் இருந்தது என்கிறார் டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாஸ்கர் பட்.
டைட்டன் வாட்சுக்கு மவுசு அதிகம்
சமீபத்திய ஆண்டுகளில் டைட்டன் வாட்சுகளுக்கு அதிகளவில் தேவை இருந்து வருகிறது. இதன் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு லாபம் ஈட்டுவதற்கு வழி வகுத்தது என்கிறார் பாஸ்கர்.
புதிய விலை
புதிய விலை நிர்ணயம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்தது. மேலும் புதிய விலை நிர்ணயம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்த்தது. இதனால் டைட்டன் வாட்ச் விற்பனையில் 23% வளர்ச்சி காணப்பட்டது.
இந்திய ஆடைகள் பிராண்டான “Taneira”
அதோடு எங்களின் வாசனை திரவிய பிராண்டான "Skinn" நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இந்திய ஆடைகள் பிராண்டான "Taneira" மிகச் சிறந்த அளவில் அதிகரித்து வருகின்றன. இது வருங்காலத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது வருங்காலத்தில் எங்கள் நிறுவனத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்கிறார்கள் இந்த நிறுவனத்தினர்.
ரூ.5 டிவிடெண்ட்
அதோடு இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு ஒரு பங்கிற்கு 5 ரூபாய் டிவிடெண்ட் கொடுக்க தீர்மானித்துள்ளதாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications